Archive For டிசம்பர் 31, 2015
தினமணி இணைய தளத்தில் 33 வாரம் வெளியான ‘தியூப்ளே வீதி’ பயோபிக்ஷன் நாவல் இன்று நிறைவு பெறுகிறது. எழுதச் சொல்லிக் கேட்டுக் கொண்ட தினமணி பொது நிர்வாகி, நண்பர் ஆர் வி எஸ், இணையப் பதிப்பு ஆசிரியர் பார்த்தசாரதி இவர்கள் அளித்த ஊக்கம் 10 வாரத்தில் முடிக்க நினைத்த தொடரைச் சரம் சரமாகக் கதை சொல்ல வைத்து 600 பக்கங்களில், 33 அத்தியாயங்களோடு நிறைவு காண வைத்துள்ளது. இந்த நண்பர்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி. தியூப்ளே…
’உக்காருங்க’. முன்னால் வந்து நின்ற பெண்ணுக்காகக் கைப்பையை எடுத்து மடியில் புத்தகங்களின் மேல் வைத்துக் கொண்டு பக்கத்தில் இடம் ஒழித்துக் கொடுத்தாள் செல்வி. மழைக்கு நடுவே பஸ் வேகமெடுத்திருந்தது. பக்கவாட்டில் பார்த்தாள். வந்து உட்கார்ந்தவள் ஆறரை அடிக்கு ஆகிருதியானவள். கழுத்தில் சிலுவை கோர்த்த சங்கிலி. இன்னிக்கு நீ கிறிஸ்துவப் பெண்ணா? மனதுக்குள் அவளைக் கேட்டாள். அன்றன்றைக்கான சக பயணியை அன்றன்று கொடுத்தருளும் என்று வேண்டிக் கொண்ட மாதிரி ஒவ்வொரு பயணத்திலும் செல்விக்கு கிட்டத்தட்ட அவள் வயதில் யாராவது…
நீங்க எந்த வாகனங்களை ஓட்டி இருக்கீங்க, ஃபாதர்? கொலாசியம் மதுக்கடைக் காரனும் மறைந்த மெட்காபின் உற்ற தோழனுமான செபாஸ்தியன், தன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அமேயர் பாதிரியாரிடம் விசாரித்தான். ஓவர்கோட்டை மேலே இழுத்து காது மடலை மறைத்தபடி அவர் ஒரு வினாடி யோசித்தார். வெறும் நாளில், நடக்கும்போதும், சைக்கிள் ஏறி கால்டர்டேல் பிரதேசத்துக் கல்பாளம் வேய்ந்த குறுகிய பாதைகளில் சுருதி கெடாமல் ரப்பர் டயரால் தட்டித் தட்டி ஓட்டிப் போகும் போதும் தெரியாத குளிரின் ஊடுருவும் தன்மை, லண்டன்…
அமேயர் பாதிரியார் கொலாசியம் மதுக் கடைக்குள் நுழைந்தபோது அங்கே ஒரு சங்கடமான அமைதி நிலவியது. அந்தச் சங்கடத்தை அவரும் உணர்ந்தார். ஒரு முப்பது நாற்பது ஜோடிக் கண்கள் ஆச்சரியத்தில் நிலைக்க, அதில் சரிபாதியாவது கால்கள் உயரமான மதுக்கடை முக்காலிகளில் இருந்து குதித்து இறங்கிக் கூடிய மட்டும் திடமாக நின்றன. யாரோ அவருக்குப் பிதா, சுதன் பெயரால் வரவேற்புச் சொன்னார்கள். அவருக்காக, கணப்பு அருகே நல்ல இடத்தை ஒதுக்க வேறு யாரோ கையில் பாதி மாந்திய மதுக் கோப்பையோடு…
தியூப்ளே வீதி – 32 இரா.முருகன் ‘கிறிஸ்துமஸ் வந்து கொண்டிருக்கிறது. மார்கழிக் குளிராக எங்கும் இப்போதே கொண்டாட்டம் நிறைந்திருக்கிறது. கிறிஸ்துமஸ் தினத்தில் இருக்கும் வசீகரம் போலவே அதை எதிர்பார்த்து இருக்கும் தினங்கள் கொண்டு வந்து நிறைக்கும் சந்தோஷமும், கலகலப்பும், சுத்தமான காற்றும், நல்ல சிந்தனைகளும், எல்லோரையும் குழந்தைகளாக்கும் குதூகலமும், அவ்வப்போது சிதறும் ஈரத் தூறலும் அலாதியான விஷயங்கள். ராத்திரியில் கூட்டமாக நடந்து கிறிஸ்துமஸ் கரோல் பாடுவதில் இருக்கிற ஆனந்தமே தனியானது. என்ன, சரிதானே?’. நீளமாக நல்ல தமிழில்…
பிரியத்துக்கு பாத்தியதை உள்ளவர்களே, உங்களுடைய ஆத்மா ஜீவித்திருப்பது போல நீங்கள் அனைத்திலும் சுகமாக ஜீவித்திருக்க கர்த்தராகிய ஏசு கிறிஸ்துவின் திருநாமத்தால் வாழ்த்துகிறேன் (யோவான்). ப்ரியமான புத்ரி கொச்சு தெரிசா, கொச்சு தெரிசாளின் அன்பான கணவன் ஜனாப் முசாஃபர் அலி சாஹேப், நான் இங்கே கால்டர்டேலுக்கு ஐந்து நாள் முன்பாக அதாவது கடந்த மாசம் இருபத்தெட்டாம் தேதி திங்கள்கிழமை காலையில் நலமாக வந்து சேர்ந்தேன். அமேயர் பாதிரியார் இங்கிலாந்து போய்ச் சேர்ந்த கையோடு கொச்சு தெரிசாவுக்கு எழுதிய கடிதம்…