Archive For மார்ச் 13, 2015

புது நாவல் : அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 21 : இரா.முருகன்

By |

புது நாவல் : அச்சுதம் கேசவம்  : அத்தியாயம் 21            : இரா.முருகன்

நந்தினி தொலைபேசியைச் சத்தம் எழ வைத்தாள். வைத்தாஸ், எங்கே இருக்கே? வீதியில் மோட்டார் வாகனம் போகும் இரைச்சல். ஜன்னல் திரையைத் தூக்காமல் ஓரமாக நின்று எட்டிப் பார்த்தாள். அழுக்குப் பச்சை நிறத்தில் ஆர்மி லாரி. ஐந்து நிமிடம் முன்னால் தான் ஒன்று கடந்து போனது. கைக்கடியாரம் எங்கே? பகலில் இருந்து ஜன்னலுக்கும் உள்ளேயுமாக நடந்து கொண்டே இருப்பது தவிர எதையும் மனதில் இருத்த முடியவில்லை. எல்லாம் சரியாக, எப்போதும் போல் இருக்கிறது என்று பாதுகாப்பாக உணரப் பழகிய…




Read more »

About Arasoor Trilogy novels

By |

About Arasoor Trilogy novels

I was not prompted with a curse or a greeting, like ‘Maa Nishhaada’ (Oh ill fated hunter). Deciding not to wait for someone to utter that, I started writing this novel on a rainy Sunday afternoon at Edinburgh. Of course, all the Sunday afternoons in Scotland are rainy and make one instinctively forlorn. It all…




Read more »

இந்தியாவின் மகளுக்கு இங்கே இடமில்லையா?

By |

இந்தியாவின் மகளுக்கு இங்கே இடமில்லையா?

Watched Leslee Udwin’s India’s Daughter made for BBC. More than the culprit and the perpetrator of the heinous crime mentioning nonchalantly he raped Nirbhaya to teach her a lesson about staying out late at night, it is the learned defence counsel solemnly declaring that women have no place in Indian culture leaves one deeply disturbed….




Read more »

புது நாவல் : அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 20 இரா.முருகன்

By |

புது நாவல் : அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 20                இரா.முருகன்

தழுவிப் பிணைந்து சிக்கலாகச் சுருண்டிருந்த பழைய தில்லித் தெருக்களின் பின்னலில் வைத்தாஸ் சிக்கிக் கொண்டான். இந்தக் குறுகலான தெரு தான். நாலு நாள் முன்னால் இங்கே தான் வந்திருந்தான். வரிசையான இந்தச் சாப்பாட்டுக் கடைகள் தான். கோதுமை மாவை வெண்ணெயும் நெய்யும் சேர்த்துப் பிசைந்து கொண்டிருக்கும் திடகாத்திரமான மீசைக்காரன் அவனை இதே போல் தான் சாப்பிட வரச்சொல்லித் தலையை அசைத்துக் கூப்பிட்டான். திரும்பும்போது வரேன். வைத்தாஸ் ஆங்கிலத்தில் சொன்னபடி அந்தக் கடையின் இடது புறமாக நெளிகிற சந்துக்குள்…




Read more »

புதிய நாவல்: அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 19 :இரா.முருகன்

By |

புதிய நாவல்: அச்சுதம் கேசவம்  : அத்தியாயம் 19  :இரா.முருகன்

அச்சுதம் கேசவம் – அத்தியாயம் பத்தொன்பது இரா.முருகன் வைத்தாஸ் எழுந்து அரை மணி நேரமாகிறது. இப்போது காலை ஆறு மணி. டிசம்பர் மூடுபனியில் குளிரக் குளிர நனைந்து கொண்டிருக்கும் தில்லி மாநகரம். ஐந்து நட்சத்திர ஓட்டலுக்குள் அந்தப் பனி வராது. வைத்தாஸ் தான் அதைத் தேடிப் போய்ப் பார்க்க வேண்டும். அவன் போகக் கிளம்பினான் தான். அதற்குள் சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் ஒன்று இரண்டாக அவன் அறைக்குள் வந்து கொண்டிருக்கிறார்கள். அரை மணி நேரம் முன்னால் வந்த பருமனான…




Read more »

புதிய நாவல் : அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 18 இரா.முருகன்

By |

புதிய நாவல் : அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 18   இரா.முருகன்

கண்பத், சர்வலோக் கேலே? ஹோகா. எல்லோரும் போயாச்சு அணி, ஜண்டா வண்டா சக்ளா? லேவுண் கேலே. கொடியெல்லாம் எடுத்துப் போயிட்டாங்க. திலீப் சாங்க்லி பகுதி விவசாயிகளின் பேச்சு மொழியில் கண்பத் மோதகிடம் விசாரித்துக் கொண்டிருந்தான். அவன் இந்தக் கூட்டத்தைப் பொறுத்த வரை, பம்பாய் மாநகரத்துக்கு வேலை தேடி வந்தவன். கிராமத்தில் கரும்பு பயிரிட்டுப் பயிரும் ஜீவிதமும் கரிந்து போன விவசாயியின் பிள்ளை. எந்த வேலை, எவ்வளவு கூலி என்றாலும் அவனுக்கு சம்மதமே. சாப்பாட்டுக் கடையில் போய்ச் சத்தம்…




Read more »