Archive For பிப்ரவரி 9, 2015
டிஜிட்டல் கேண்டீன்-5 நானோ நானா யாரோ தானா இரா.முருகன் கடுகு சிறுத்தால் ஏன் காரம் போகாது? தொழில்நுட்பம் கைகொடுத்தால், சிறுத்த கடுகு இனிக்கவும் கூடும். நானோ டெக்னாலஜி செய்யும் ஜித்து வேலை இது. கடுகு, கட்டித் தங்கம், கம்ப்யூட்டர், கார் இப்படி சகலமானதும் இயற்கையாகவோ அல்லது மனித முயற்சியால் உருவாக்கப்பட்டோ அமைந்த பொருட்கள். ஒரு பொருளின் வடிவத்தை அதன் சகல குணாதிசயங்களோடும், செயல்பாடுகளோடும் மிக மிகச் சிறியதாகக் குறுக்க முடிந்தால் சில அற்புத விளைவுகள் ஏற்படக்கூடும் என்கிறது…
அச்சுதம் கேசவம் – அத்தியாயம் பதினான்கு இரா.முருகன் நீல நிறம் தவிர வேறொன்றும் இல்லை. நீலம் வானம் இறங்கி வருகிறது. நீலம் நிலம்பட நிற்கிறது. செங்குத்தாக நீல இறகு கூம்பிப் பறந்து வருகிறது. தரை தொட்டதும் வெடித்துச் சிதறிய தோகைக் கண்களின் அடுக்காக நீலம் உயர்கிறது. நீலம் காலடி எடுத்து மெல்ல வைத்து ஆடுகிறது. நீலம் சூனியக்காரியின் இச்சையூட்டும் அழைப்பாக, அந்தரங்க ரகசியம் சொல்ல அகவுகிறது. ஒரு நீலம், நீலமாக இன்னொன்று, நீலமே வடிவாக மற்றுமொன்று, புதிதாக…
அச்சுதம் கேசவம் – அத்தியாயம் பதிமூன்று காலை ஐந்து மணிக்கு அலாரம் வைத்த மாதிரிச் சாடி எழுந்து படித்துக் கொண்டிருக்கிறான் சின்னச் சங்கரன். குண்டுராயர் ஓட்டலில் இருந்து காலில் மாவுக் கட்டுப் போட்டுக்கொண்டு யாரோ ஒருத்தன், வாழை இலையில் பொட்டலம் கட்டி எடுத்து வந்த கனமான நாலு இட்லியும் வேர்க்கடலைத் துவையலும், மூக்குப் பாத்திரத்தில் வந்த இனித்து வழிந்த காப்பியும் சாப்பிடப் பத்தும் அஞ்சுமாக நிமிடங்கள் போனது. அந்த நேரத்தில் மட்டும் உட்கார்ந்திருந்த ஊஞ்சலில் ஓரமாக வைத்தது…
அச்சுதம் கேசவம் – அத்தியாயம் பனிரெண்டு இரா.முருகன் 1964 ஏப்ரல் 3 வெள்ளிக்கிழமை சின்னச் சங்கரன் அவன் அப்பா சாமிநாதனுக்கு திவசம் கொடுத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான். அப்பா சாமிநாதன் தி செகண்ட். பிள்ளையான இவன் சங்கரன் தி செகண்ட். செகண்டா, இல்லை, ஆறா, ஏழா? தெரியாது. பிரிட்டீஷ் ராஜ வம்சம் மாதிரி, போன தலைமுறையில் வைத்து வழங்கி வந்த பெயர் தான் வம்சம் மேலும் தழைக்க வைக்க உதவும் என்கிறார்கள், பெயர் வைக்கப் பணிக்கப் பட்டவர்கள். சின்னச்…
அச்சுதம் கேசவம் – அத்தியாயம் பதினொன்று இரா.முருகன் ஏப்ரல் 2 1964 வியாழக்கிழமை அரசூர் ஜீவித்திருந்தது. காலம் கடந்து ஜீவித்திருந்தது. எல்லோருக்கும் ஏதாவது ஒரு கணத்தில் பிரியமாகும் கிழவனைப் போல. நித்தியப்படிக்குக் கரித்துக் கொட்டி, எப்போ ஒழிவானோ, எழவு ஓயுமோ என்று அங்கலாய்க்கிற சகலமானவருக்கும் பிருஷ்டத்தைக் காட்டிக் கொண்டு, நிதானமாக வேட்டி திருத்திக் கட்டிக் கொள்கிற சோனியான கிழவன் போல. எல்லோரிடமும் நேசத்தை யாசித்து, ஒரு வெகுளிச் சிரிப்போடு தளர்ந்து நிற்கிற வயசனாக. வயோதிகச் சிரிப்பின் வசீகரத்தோடு…
அச்சுதம் கேசவம் – அத்தியாயம் பத்து எத்தனைவது முறையாகவோ லண்டன். வைத்தாஸ் உலகத்தில் எங்கே இருந்தாலும் தேடிக் கண்டுபிடிக்கப் பட்டு உடன் லண்டன் அனுப்பி வைக்கப் படுகிறான். போன வருடம் ஆகஸ்டில் இந்தியா போயிருந்தபோது அப்படித்தான் நடந்தது. அவன் அம்பலப்புழையில் இருந்தது பற்றி வைத்தாஸின் அரசாங்கத்துக்கு மூக்கு வியர்த்து விட்டது. உடனே கிளம்பி லண்டன் போ என்று விரட்டினார்கள். மேல்சாந்தியோடு பேச ஆரம்பித்ததை அரைகுறையாக முடித்துக் கொண்டு திரும்ப வேண்டிப் போனது அப்போது. அம்பலப்புழை மேல்சாந்தி மகன்,…