Archive For டிசம்பர் 20, 2015
(பகவதியின் டயரியில் இருந்து) விடிகாலையில் குளிக்கறது நல்ல பழக்கம் தான். இங்கே அரசூர்லே, எல்லார் வீட்டுப் பெண்களும் அதேபடிக்குத் தான் செய்யற வழக்கம். முக்கியமா செவ்வாய், வெள்ளிக் கிழமை. அதோடு கூட, மாசாந்திரம் விலகி இருக்கறது கழிஞ்சு. அப்புறம் மார்கழி மாசம் முப்பது நாளும். மார்கழி கொண்டாடறது எனக்கு அரசூர் வந்த பின்னாலே தான் சீலமாச்சு. முதல்லே மார்கழின்னு பேரே புதுசா இருந்தது. மலையாளத்திலே தனு மாசம்னு கேட்டுத் தான் பழக்க. அது இங்கே மார்கழி. தனு…
(அச்சுதம் கேசவம் – பகுதி 2 – அத்தியாயம் 53) அடுத்த வாரம் குப்தா வீட்டுலே சத்சங்க் ஆரம்பம். ஜெயம்மா பேசப் புதிதாக விஷயம் கிடைத்த சந்தோஷத்தில் அறிவித்தாள். ஒரு மாசம் நடக்குமே? ராத்திரி பன்ரெண்டு மணி போல ஆகிடும். டோலக்கும் கஞ்சிராவுமா அத்தனை பேர் சேந்து ராம நாமம் சொல்றது குளிருக்கும் மனசுக்கும் இதமா இருக்கும். வசந்தி சொன்னாள். சங்கரனும் அவளும் போன வருஷம் தினசரி கலந்து கொண்டு விட்டு ஸ்கூட்டரில் பத்திரமாக வந்து சேர்ந்து…
நான் வல்லூரி சார் வீட்டில் நுழைந்த போது அவர் கை கட்டி நடு வீட்டில் நின்று கொண்டிருந்தார். லதா தீதி அவருக்கு முன்னால் நின்று அவருக்கு எலிமெண்டரி ஸ்கூல் கணக்கு சொல்லிக் கொடுப்பது போல் ஒகடி, ரெண்டு, மூடு, நாலகு என்று சத்தமாகச் சொல்லி விரல் மடக்கிக் கொண்டிருந்தாள். ‘என்ன தீதி, சார் பாலை பொங்க விட்டுட்டு பேப்பர் படிச்சுட்டு இருந்த கணக்கா இல்லே பாத்ரூம் பைப்பை மூடாம வந்து தண்ணித் தொட்டி காலியான பிரச்சனையா’? சுவாரசியமாக…
’எங்க ஊரு வந்தாச்சு’. நான் சத்தம் போட்டபடி ரயில் பெட்டியில் இருந்து குதித்தேன். எதிரே விளக்குக் கம்பத்தில் கட்டிய பலகை இந்த வாரம் விகடன் வாசித்தீர்களா என்று விசாரித்தது. நல்லையா இன்னும் போடலே என்று வாய் வரை வந்த பதிலை அடக்கிக் கொண்டேன். இந்த ஊரில் இருந்து நான் வெளியே போய் மூன்றாவது வருஷம் இது. நல்லையா, விகடனும், கதிரும், குமுதமும், கல்கண்டும், பவன்ஸ் ஜர்னலும் இன்னும் வீடு வீடாகப் போட்டுக் கொண்டிருக்கிறாரா என்று ஊருக்குள் போய்த்தான்…
நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன் தொகுத்த ’100 சிறந்த சிறுகதைகள்’ நூலுக்கு நான் தினமலரின் எழுதியிருக்கும் சிறு அறிமுகம் – ‘இவை எல்லாம் எனக்கு பிடித்த தமிழ் சிறுகதைகள். இந்த பட்டியலுக்கு வெளியிலும் சிறந்த கதைகள் உண்டு’ என்ற விளக்கத்தோடு, ஒரு நூறு சிறுகதைகளை, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தொகுத்திருக்கிறார். யார் எங்கே பட்டியல் போட்டாலும் இடம்பெறும், புதுமைப்பித்தனின், ‘கடவுளும் கந்தசாமி பிள்ளையும்’, மவுனியின் ’அழியாச் சுடர்’ போன்றவற்றோடு, எஸ்.ரா., ஐந்து முக்கிய வரையறைகளை வைத்து தேர்ந்தெடுத்த மற்ற கதைகளும், இடம்பெற்ற…
’தியூப்ளே வீதி’ வாழ்வியல் நாவலை முழுமையாக எடிட் செய்து சீராக்கி புத்தகமாக்கத்துக்கு அனுப்ப கிட்டத்தட்ட ஒரு வாரம் நல்ல உழைப்பு. முடிந்து மென்பிரதியை அனுப்பிய பிறகு ஆனந்தமான ஒரு களைப்பு. ‘கடல் புரத்தில்’ நாவலில் வண்ணநிலவன் கிறிஸ்துமஸுக்கு முந்திய தினம் வீட்டைச் சுத்தப்படுத்தி அலங்கரித்து களைத்துப் போய் உறங்கும் வீட்டு ஆண்களின் உறக்கம் அழகாக இருந்தது என்பார். அது போன்ற சுகமான களைப்பு இது. சற்றே இளைப்பாற நான் போனது பிரியமான கிரேசி கிரியேஷன்ஸ் நண்பர்களின் ‘கூகுள்…