Archive For ஜனவரி 9, 2015
அச்சுதம் கேசவம் – அத்தியாயம் ஒன்பது இரா.முருகன் மார்ச் 26 1964 வியாழக்கிழமை அது பிசாசு பிடிச்ச வண்டி ஒண்ணும் இல்லை என்றார் அமேயர் பாதிரியார். ரொம்பத் தெளிவான வார்த்தைகள். அவர் இருக்கப்பட்ட பிரதேசத்தில் இப்படியான சில்லுண்டி வினோதம், வேடிக்கை எதுவும் நடக்காது. நடக்கிற எல்லாவற்றுக்கும் காரண காரியம் இருக்கும். அற்புதங்கள் ரோம் நகரில் இருந்து மடாலய அறிவிப்போடு ஞாயிற்றுக்கிழமை தவிர்த்த பிற தினங்களில் எப்போதாவது நிகழக் கூடும். அவற்றில் யந்திரங்கள் சம்பந்தப்பட்டிருக்காது. அவர் முன்னால் நின்றபடி…
அச்சுதம் கேசவம் – பம்பாய் : அத்தியாயம் 8 மார்ச் 11 1964 புதன்கிழமை திலீப். டைப்ரைட்டரோடு உட்கார்ந்திருந்த பெண் கையை நீட்டி டெலிபோன் ரிசீவரை பத்திரமாக அதனிடத்தில் வைத்துவிட்டுக் கண்ணாடிக் காரர் பக்கம் திரும்பிச் சொன்னாள். திலீப். மூடிய கதவு ஓரமாக மர மேஜை போட்டு இருந்த கண்ணாடிக்காரர் குரல் நடுங்கக் கூப்பிட்டார். திலீப் எழுந்து நின்றான். அங்கே நீள பெஞ்சுகளில் காத்திருந்தவர்களுக்கு இடையில் இருந்து இன்னும் ஐந்து பேர் எழுந்து நின்றார்கள். பம்பாயில் இருக்கப்பட்ட…
அச்சுதம் கேசவம் – சென்னை : அத்தியாயம் 7 திரும்பவும் போயாச்சா? பேஷ் கற்பகம் காட்டுக் கூச்சலாகச் சத்தம் போட்டாள். அடிக்காதேடி. அடிக்காதேடி. தெரியாமப் பண்ணிட்டேன். ஹாலில் பிரம்பு நாற்காலியைப் பிடித்துக் கொண்டு குனிந்து நின்றார் நீலகண்டன். பயத்தோடு அவளைப் பார்த்தார். அவசரமாக உள்ளே போனாள். அது உள் பக்கமா, வெளியே போகிற பாதையா? எதோ ஒன்று. அங்கே சுவரில் ஆணி அடித்து நீலகண்டனின் சட்டை தொங்கும். பக்கத்தில் நீளமாகக் கயிறு கட்டி பெயர் மறந்து போன…
அச்சுதம் கேசவம் – ரயிலில் : அத்தியாயம் 6 இரா.முருகன் ஜனவரி 13, 1964 திங்கள்கிழமை நேற்று இந்த ரயிலின் சக்கரங்கள் உருள ஆரம்பித்தன. பழைய தில்லி பஹார் கஞ்ச் சந்திப்பில் இருந்து வண்டி கிளம்பிய போது, குளிர் கவிந்து இருட்டு கூடவே வந்து ஒண்டிக் கொண்ட அந்தி ஆறே முக்கால் மணி. கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் என்று பெயரை வெள்ளைக்காரன் வைத்து முப்பது வருஷத்துக்கு மேல் ஆகிறது. ரெண்டாயிரத்து எழுநூறு குதிரை இழுப்பு சக்தி கொண்ட…
அச்சுதம் கேசவம் – புதுடெல்லி அத்தியாயம் 5 இரா.முருகன் ஜனவரி 12, 1964 ஞாயிற்றுக்கிழமை பகல் நேரம் ஒரு பத்து நிமிடம் சர்வ வியாபகமான தூற்றலோடு வந்தது. தூறல் நின்றபோது பஞ்சுப் பொதியை அப்பினாற்போல் மூடுபனி கவிய ஆரம்பித்தது. சின்னச் சங்கரன் இரண்டு நூதன் ஸ்டவ், ஒரு மோடா, முக்காலி, ராஜகுமாரிக்கு உறக்கம் வர குந்தன்லால் சைகால் பாடிய பழைய கிராமபோன் ரெக்கார்ட், தாராசிங்க் உடுத்திக் கொண்டாலும் இன்னும் தாராளமாக இடம் இருக்கும் கதர் பைஜாமா, அதே…
புது நாவல் அச்சுதம் கேசவம் – அத்தியாயம் 4 (வைத்தாஸ் எழுதும் நாவலில் இருந்து) குஞ்ஞம்மிணி என்றான் வைத்தாஸ். ஆராக்கும்? மேல்சாந்தி கேட்டார். வாசலில் யாராவது பெண்பிள்ளை இவனோடு வந்து காத்திருக்கலாம். ஸ்திரி. உறவு அதில்லாத பட்சத்தில் கரிசனமான அண்டை அயலாரோ, ஆப்பீஸில் கூட வேலை பார்க்கிறவர்களோ. கோவிலுக்குப் போகிறேன் என்றபோது கூடவே வந்திருப்பார்களாக இருக்கும். மழை நேரத்துக் குட்டநாடு பற்றி, ஈரமும், சேறும், தணுத்த காற்றும், சகல இடத்திலும் கவிந்திருக்கும் வலை வாடை, செம்மீன் வாடை…