Archive For நவம்பர் 2, 2015

New jottings on Chillu, the theatrical play

By |

New jottings on Chillu, the theatrical play

Chillu – On the occasion of the launch of the US edition of the play – The playwright speaks : My responses to various updates of Chillu actors posted in Chillu FB page collated and posted here to reach a wider audience Character : Shiela It may sound incredible but it is true – you…




Read more »

New Bio-fiction தியூப்ளே வீதி – அத்தியாயம் 25 இரா.முருகன்

By |

New Bio-fiction   தியூப்ளே வீதி – அத்தியாயம் 25         இரா.முருகன்

டெலிபோன் ரொம்ப அழகாகச் சிணுங்கியது. கயலாக இருக்கும். அவள் கூப்பிட்டால் ஃபோனுக்குக் கூட குஷி தான். ’என்ன பண்ணிட்டு இருக்கே’? கிண்கிணி கிணிகிணியென்று குளிரக் குளிரத் தெறிக்கும் குரல். ’நாடகம் எழுத பிள்ளையார் சுழி போட்டேன் தேனே’. ‘தேனா? அது எங்க அக்கா’. ’சரி அவங்களையே கூப்பிட்டதா இருக்கட்டும’என்றேன் சாவதானமாக். ‘கூப்பிட மாட்டே.. பல்லைத் தட்டிக் கையிலே கொடுத்திடுவேன்.’ ‘செய் ..நமக்கு பிரஞ்சு கிஸ் பண்ண வசதியா இருக்கும்’.. ’உவ்வே .. ஏண்டா இப்படி புத்தி போகுது?…




Read more »

இரா.முருகன் குறுநாவல்கள் – தொகுப்புக்கு எழுதிய முன்னுரையிலிருந்து

By |

இரா.முருகன் குறுநாவல்கள் – தொகுப்புக்கு எழுதிய முன்னுரையிலிருந்து

வெளிவர இருக்கும் ‘இரா.முருகன் குறுநாவல்கள்’ நூலுக்கு (கிழக்கு பதிப்பகம் வெளியீடு) நான் எழுதிய முன்னுரையில் இருந்து – குறுநாவல் வடிவம் மட்டுமில்லை, அதைப் பற்றிய இன்னொரு நிதர்சனமும் யாரும் சொல்லிக் கொடுக்காமலேயே கற்றுக் கொண்டாயிற்று. குறுநாவல்கள் கண்டிப்பாக இலக்கியப் பத்திரிகைகளுக்கு, அதாவது சிற்றிதழ்களுக்கு மட்டுமே அனுப்பப்பட வேண்டியவை. வெகுஜனப் பத்திரிகைகள் இப்படி ஒரு இனம் தமிழ் இலக்கியத்தில் இருக்கிறது என்ற பிரக்ஞையே இல்லாமல், அல்லது தெரிந்தும், இப்ப என்னங்கிறே என்கிற அலட்சியத்தோடு சிறுகதையை மட்டும் கலர்ப் படங்களோடு…




Read more »

புது நாவல் : அச்சுதம் கேசவம் அத்தியாயம் 52 இரா.முருகன்

By |

புது நாவல் : அச்சுதம் கேசவம்   அத்தியாயம் 52      இரா.முருகன்

என்ன, கிருஷ்ண ஜெயந்தி வந்த மாதிரி கால் காலா மாக்கோலம்? உன் ஏற்பாடா? பிடார் ஜெயம்மா காரில் வந்து இறங்கியதும் உரக்க விசாரித்தாள். ரொம்ப சிரத்தை எடுத்து கதர்ப் புடவையைக் கணுக்காலுக்கு உயர்த்திக் கொண்டு, கோலத்தை மிதிக்காமல் தத்தித் தத்தி சங்கரனின் அபார்ட்மெண்டில் நுழைந்தாள். சங்கரா, எங்கே போனே? பாத்ரூமில் தண்ணீர் அடைத்துக் கொண்டு விட்டது என்று ஒட்டடைக் குச்சியால் குத்திக் கிண்டியபடிக்கு மடித்துக் கட்டிய வேட்டியோடு சின்னச் சங்கரன் பிரசன்னமானான். கல்சுரல் மினிஸ்டரி அண்டர் செக்ரட்டரி…




Read more »

New bio-fiction தியூப்ளே வீதி – அத்தியாயம் 24 இரா.முருகன்

By |

New bio-fiction  தியூப்ளே வீதி  – அத்தியாயம் 24     இரா.முருகன்

ஏமி ஏமி ஏமி ஏமி என்று தெலுங்கு கே.பி.சுந்தராம்பாளாக அந்துவான் கேட்டுக் கொண்டிருந்தான். அவனுக்கு எதிரே, உலகப் பிரச்சனைகளை எல்லாம் தானே ஒற்றையாகத் தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறவராக, பதட்டம் முகத்தில் தெரிய புரபசர் வல்லூரி அமர்ந்து சாயா குடித்துக் கொண்டிருந்தார். கூட்டம் குறைவான, வெள்ளிக்கிழமை சாயந்திர காலேஜ் கேண்டீன். ‘ஏமி பிராப்ளமு பொபஸே காரு? செப்பண்டி’ அந்துவான் பிரஞ்சு-தெலுங்கு கேள்விக் கணையை ஒருவாறு தொடுத்தான். பாவம்டா என்றான் லெச்சு. வல்லூரி எடுத்த வகுப்புக்களுக்கு எல்லாம் அவன்…




Read more »

புது நாவல் : அச்சுதம் கேசவம் அத்தியாயம் 51 இரா.முருகன்

By |

புது நாவல் : அச்சுதம் கேசவம்   அத்தியாயம் 51         இரா.முருகன்

விருச்சிக மாதப் பிறப்பு தினத்தில் பகவதி தில்லியில் சின்னச் சங்கரன் வீட்டுக்கு வந்தாள். மென்மையாகத் தில்லி குளிர்காலம் தொடங்கி இருந்த விடிகாலை நேரம் அது. உன் பேரன் சின்னச் சங்கரன் உறங்கிண்டிருப்பான் என் பொன்னு பகவதி. பெத்துப் பொழச்ச குட்டிப் பொண்ணு, சின்னச் சங்கரன் பாரியாள் வசந்தியும் தான். அவளுக்கு பிறந்த சிசுவும் நல்ல உறக்கத்திலே இருக்கும். நமக்கு இப்ப போயே பற்றுமா? தயக்கத்தோடு கேட்டபடி கூட வந்தாள் விசாலம் மன்னி. அவளால் யாருக்கும் ஈர்க்குச்சி அளவு…




Read more »