Archive For செப்டம்பர் 6, 2015
Watch CHILLU, our theatrical offering at Narada Gana Sabha, Chennai on 10th, 11th, 12th and 13th of September 2015 CHILLU commenced as a short story. Late ‘Sujatha’ (Rangarajan), the doyen of modern writing in Tamil and my mentor, phoned up one day long ago. His telephonic conversations were remarkably brief and scintillating and this one…
One of my friends asked whether CHILLU as a futuristic theatrical play tends to portray a world according to George Orwell or that of Aldous Huxley. The question is – Dystopia or Utopia, what do you share with the viewers? Well, I don’t think there is any dichotomy between Orwellian and Huxleyan perspectives of future….
என் ‘சில்லு’ நாடகம் வரும் செப்டம்பர் 10-ம் தேதி (வியாழன்) சென்னை நாரத கான சபாவில் அரங்கேறுகிறது. 10,11,12,13 தேதிகளில் சென்னையிலும், நவம்பரில் அமெரிக்கா (ப்ரீமாண்ட், கலிபோர்னியா) நிகழ இருக்கும் சில்லு, 2017 புத்தாண்டில் மீண்டும் இந்தியாவில் பரவலாகக் காட்சிப் படுத்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. சில்லுச் சில்லாகச் சில சிந்தனைகள் – 1 அதென்ன CHILLU? கண்ணாடிச் சில்லு – இந்தச் சொற்றொடரில் சி சொல்வது போல .. அதுதான் சரியான உச்சரிப்பு ஸில்லு-ன்னு சொல்லலாமா?…
பிற்பகல் ஒரு மணியில் இருந்து ரெண்டு வரை அங்கலாய்ப்புக் காலம். இப்படி படுத்தறாங்களே என்று சகல தரப்புக்களின் மேலும் ஆத்திரம் வரும் பொழுது.ஆணும் பெண்ணும் கலந்து பழகத் தடை அமுலில் இருக்கும் நேரம். போன மாதம் வரை இந்தத் தொந்தரவில்லை. ஆண்களும் பெண்களுமாக எல்லா மாணவர்களும் ஒரே கூரையின் கீழ் இருந்து கீழ்த் தளத்து வகுப்பறைகளில் பகல் உணவு கழிக்க முடிந்தது. சரியாக ரெண்டு மணி பத்து நிமிடத்துக்கு காலேஜ் எழுத்தர் பஸ்ஸர் ஒலிக்க, துப்புரவுத் தோழர்கள்…
நகர்-தல் வீட்டுக் குப்பை வெளியே சுமந்து கொஞ்சம் வளைந்து சாலை திரும்பும் மூலையில் குப்பைத் தொட்டியில் குவித்து இங்கிருந்து அங்கு ஏதும் குறையாது அசுத்தம் நகர்த்தி உலகம் தூய்மை ஆக்கும் உவகை இனியது கேளீர். கசடு சேர்த்த கருப்பு பிளாஸ்டிக் பையும் கையுமாய் காலை விடியுமுன் நடக்கத் தொடங்கச் சின்னதாகக் காக்கைக் கூட்டம் தாழப் பறந்து கூடவே வந்தது நேற்று. காகம் சூழ்ந்து கரையச் சற்றே நடுங்கிக் கூர்த்த அலகுகள் பார்த்து குப்பையைத் தொட்டியில் மெல்ல வீச…
ஒரு வெப்பமான நடுப்பகலின் தொடர்ச்சியாக மழைக் காலம் ஆரம்பித்தது. தெர்மோடைனமிக்ஸ் வகுப்பில் எண்ட்ரபி என்ற அதி உன்னதமான சமாச்சாரத்தை விவாதித்துக் கொண்டிருந்தபோது, மூடி வைத்த ஜன்னல்கள் காற்றில் திறக்க, சாரலாக வகுப்புக்குள் சீறி அடித்தது இந்த ஆண்டின் முதல் மழை. அது எல்லோரையும் குழந்தையாக்கி கூகூவென்று கூவ வைத்தது. முதல் கூவல், புரபசர் நெடுமுடி வெர்கீஸ் சாண்டி சார் இட்டது. வலுத்துப் பெய்த மழையில் தெர்மோடைனமிக்ஸ் விடைபெற்றுப் போய்விட்டது. ரொம்பவே அதிசயமான கூட்டு மௌனம். நின்று பெய்யும்…