Archive For ஜூலை 18, 2015

புது Bio-Fiction தியூப்ளே வீதி அத்தியாயம் 10 இரா.முருகன்

By |

புது Bio-Fiction    தியூப்ளே வீதி          அத்தியாயம் 10            இரா.முருகன்

‘எலிசபெத் லாட்ஜ் சரியா இருக்கும். என்ன நினைக்கறே’. நான் சுவாரசியமாகக் காப்பி குடித்துக் கொண்டிருந்தேன். உலகத்திலேயே வேறே எந்த சர்க்காரும் எந்த நாட்டிலும், எந்த ஊரிலும் ஜனங்களுக்காகக் காப்பிக் கடை நடத்துவதாகத் தெரியவில்லை. அதுவும், இன்றைக்கு முழுக்க உட்கார்ந்து ஒரே ஒரு கப் காப்பியை மில்லிமீட்டர் செண்டிமீட்டராக, பீங்கான் கோப்பையே கரையும் அளவுக்கு எச்சில் பண்ணிக் குடிக்கிற நாகரீகம், குடிக்கிறவர்களை நேரமாச்சு என்று எழுப்பி விடாத பண்பாடு இதெல்லாம் இங்கே போல எந்த நாட்டிலும் இருக்காது. இந்த…




Read more »

புது BioFiction: தியூப்ளே வீதி அத்தியாயம் 9 இரா.முருகன்

By |

புது BioFiction:   தியூப்ளே வீதி          அத்தியாயம் 9             இரா.முருகன்

பகல் வெய்யில் பாழாகாமல் கணக்கு புரபசர் கால்குலஸ் வகுப்பில் லெய்பினிஸ் தியரத்தை விளக்கிக் கொண்டிருந்த போது, லெச்சு ஜன்னலுக்கு வெளியே நின்று சைகை காட்டினான். ஏதோ தலை போகிற அவசரம் அவனுக்கு. மொத்தமே இருபது பேருக்கு நடைபெறும் வகுப்பு என்பதால், பின் வரிசையை ஒட்டி இருக்கும் ஒருக்களித்த கதவைத் திறந்து இஷ்டம் போல வெளியே நழுவ முடியாது. உள்ளே திரும்பி வந்து, கும்பலில் ஒருத்தனாக உட்கார்ந்து, ரஃப் நோட்டில் பால் பாயிண்ட் பேனாவால், முன் வரிசையில் உட்கார்ந்திருக்கும்…




Read more »

புது bio-fiction: தியூப்ளே வீதி – அத்தியாயம் 8 இரா.முருகன்

By |

புது bio-fiction: தியூப்ளே வீதி – அத்தியாயம் 8                இரா.முருகன்

ஒரு சின்னக் கோணலும் நெளிவும் இல்லாமல் கிழக்கில் இருந்து மேற்கே விரியும் தெரு வரிசை சவரிராயலு தெருவில் ஆரம்பிக்கிறது. அந்தத் தெருவைச் செங்குத்தாக வெட்டி வடக்கே போக, ரூ பெத்தி கனால், ரூ சாந்த் தெரைசா என்று பிரஞ்சு மணக்கும் பெயர்களோடு இணைத் தெருக்கள். ரூ என்றால் தெரு. தொடர்ந்து, நல்ல தமிழாக நீடாராசப்பையர் தெரு, ரங்கப்பிள்ளை தெரு, தியாகு முதலி தெரு என்று அளந்து ரசமட்டம் வைத்து உறுதி செய்து அடுக்கிய அடுத்தடுத்த தெருக்கள். சாயந்திர…




Read more »

புது நாவல்: அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 44 இரா.முருகன்

By |

புது நாவல்: அச்சுதம் கேசவம்  : அத்தியாயம் 44        இரா.முருகன்

எழுந்திரு. ஊர்வலம் வந்துட்டு இருக்கு. பாதி ராத்திரிக்கு கொச்சு தெரிசா முசாபரை எழுப்பினாள். கண்ணூரை மழை நனைத்த ராத்திரி அது. இன்னும் விடிய வெகு நேரம் இருந்ததாக கூகை ஒன்று அவ்வபோது அறிவித்துப் பறந்து போக, தங்குமிடத்து ஜன்னல்களினூடே குழல் விளக்கின் ஒளி விட்டு விட்டுக் கசிந்து கொண்டிருந்தது. பெரிய மின்விசிறி ஒன்று நிலத்தைக் கெல்லி அசைக்கிறது போல காற்றைக் கிளப்பிச் சுழல, அறையெங்கும் விதையோடியிருந்த குளிர், மங்கலான இரவு விளக்கை ஈசல்கள் மொய்த்துப் பறந்து மழை…




Read more »

மூன்று கவிஞர்கள்

By |

மூன்று கவிஞர்கள்

மூன்று கவிஞர்கள் நேற்றுப் பிற்பகல் சுட்டெரிக்கும் வெய்யில் நேரத்தில் ஒரு நண்பரும் நானும் கவிதை பேசிக் கொண்டிருந்தோம். அவர் அண்மையில் படித்த ஒரு தமிழ்க் கவிதையைச் சொன்னார். வாழ்வை முடித்துக் கொண்ட ஒரு பெண்ணைப் பற்றி மற்ற யாரோ கூறும் கையறுநிலைப் புதுக் கவிதை. நான் சொன்னேன் – கவிதை எளிமையாக, உருவகப் பூட்டுப் போட்டுக் கொள்ளாமல் இருக்கிறது. ஆனாலும் முதல் வரியிலேயே கடைசி வரிக்கான struct pointer * கிடைத்து விடுகிறது. இன்னொன்று அந்தப் பெண்…




Read more »

புது நாவல்: அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 43 இரா.முருகன்

By |

புது நாவல்: அச்சுதம் கேசவம்   : அத்தியாயம் 43       இரா.முருகன்

எல்லாப் பத்திரிகைகளும் ஒரே மாதிரி இல்லை. முசாபர் உற்சாகமாக விளக்கிக் கொண்டிருந்தான். பவுலோஸ் சகோதரர் மிகுந்த ஈடுபாட்டோடு கேட்டபடி முன்னால் அமர்ந்திருந்தார். அவர் பார்த்திருக்காத, கேட்டிருக்காத விஷயம் இதெல்லாம். கோயம்புத்தூர் கடந்து தூரதேசம் என்று எங்கும் போனதில்லை அவர். கோவை போனபோது கூட வெள்ளை வெளேரென்று பச்சரிசிச் சோறை ரெண்டு நாளுக்கு மேல் சாப்பிட முடியாமல் திரும்பி விட்டார். சவுக்காரம் போட்டுத் துவைத்த மாதிரி ஏன் இப்படிச் சோறு இருக்க வேணும்? மெல்லிய சிவப்பில் வடித்து, ஒரு…




Read more »