Archive For பிப்ரவரி 10, 2015
இன்றைய (ஃபெப்ரவரி 10, 2015) ’தி இந்து’ நாளிதழில் வெளியாகியுள்ள என் கட்டுரை இது 4ஜி இரா.முருகன் முக்காலி போட்டு வீட்டுக் கூடத்திலே வைத்த லேண்ட் லைன் தொலைபேசி தான் முப்பது ஆண்டு முன்பு வரை உலகம் முழுக்க இருந்தது. காரில் வைத்து நகரும் தொலைபேசியை அமெரிக்கக் கம்பெனியான மோட்டரோலா 1984-ல் விற்பனைக்கு வெளியிட்டது. அதுதான் முதல் தலைமுறை மொபைல் தொலைபேசி. தொடர்ந்து 1991-ல், முன்னேறிய தொழில்நுட்பத்தோடு, பின்லாந்தில் அறிமுகமானது ரெண்டாம் தலைமுறை தொலைபேசி. பேச்சையும், குறுஞ்செய்திகளையும்(SMS)…
டிஜிட்டல் கேண்டீன்-5 நானோ நானா யாரோ தானா இரா.முருகன் கடுகு சிறுத்தால் ஏன் காரம் போகாது? தொழில்நுட்பம் கைகொடுத்தால், சிறுத்த கடுகு இனிக்கவும் கூடும். நானோ டெக்னாலஜி செய்யும் ஜித்து வேலை இது. கடுகு, கட்டித் தங்கம், கம்ப்யூட்டர், கார் இப்படி சகலமானதும் இயற்கையாகவோ அல்லது மனித முயற்சியால் உருவாக்கப்பட்டோ அமைந்த பொருட்கள். ஒரு பொருளின் வடிவத்தை அதன் சகல குணாதிசயங்களோடும், செயல்பாடுகளோடும் மிக மிகச் சிறியதாகக் குறுக்க முடிந்தால் சில அற்புத விளைவுகள் ஏற்படக்கூடும் என்கிறது…
அச்சுதம் கேசவம் – அத்தியாயம் பதினான்கு இரா.முருகன் நீல நிறம் தவிர வேறொன்றும் இல்லை. நீலம் வானம் இறங்கி வருகிறது. நீலம் நிலம்பட நிற்கிறது. செங்குத்தாக நீல இறகு கூம்பிப் பறந்து வருகிறது. தரை தொட்டதும் வெடித்துச் சிதறிய தோகைக் கண்களின் அடுக்காக நீலம் உயர்கிறது. நீலம் காலடி எடுத்து மெல்ல வைத்து ஆடுகிறது. நீலம் சூனியக்காரியின் இச்சையூட்டும் அழைப்பாக, அந்தரங்க ரகசியம் சொல்ல அகவுகிறது. ஒரு நீலம், நீலமாக இன்னொன்று, நீலமே வடிவாக மற்றுமொன்று, புதிதாக…
அச்சுதம் கேசவம் – அத்தியாயம் பதிமூன்று காலை ஐந்து மணிக்கு அலாரம் வைத்த மாதிரிச் சாடி எழுந்து படித்துக் கொண்டிருக்கிறான் சின்னச் சங்கரன். குண்டுராயர் ஓட்டலில் இருந்து காலில் மாவுக் கட்டுப் போட்டுக்கொண்டு யாரோ ஒருத்தன், வாழை இலையில் பொட்டலம் கட்டி எடுத்து வந்த கனமான நாலு இட்லியும் வேர்க்கடலைத் துவையலும், மூக்குப் பாத்திரத்தில் வந்த இனித்து வழிந்த காப்பியும் சாப்பிடப் பத்தும் அஞ்சுமாக நிமிடங்கள் போனது. அந்த நேரத்தில் மட்டும் உட்கார்ந்திருந்த ஊஞ்சலில் ஓரமாக வைத்தது…