Archive For மே 14, 2015

புதிய தொடர் – தியூப்ளே வீதி அத்தியாயம் 1 இரா.முருகன்

By |

புதிய தொடர் –   தியூப்ளே வீதி    அத்தியாயம்  1           இரா.முருகன்

தினமணி தொடர் அந்த ஊரை நினைத்தாலே மனதில் மிதமான யூதிகோலன் வாசனை அடிக்க ஆரம்பித்து விடும். கூடவே ராத்திரி முழுக்கப் பாடிக் கொண்டிருந்து விட்டு விடியற்காலையில் அமைதியாகக் கரையைத் தொட்டுப் போகும் அலைகளுடன் எழுந்து வருகிற கடல் வாசனையும் கட்டாயம் உள்நாசியை எட்டும். சைக்கிள் மிதித்துப் போகிற மண் தடங்கள் ஊரைக் கடந்த அடுத்த நிமிடம் பார்வையில் படுவது அங்கே மட்டும் தானாக இருக்கும். அங்கங்கே கள்ளுக்கடைகளில் ஈ மொய்த்த முட்டை பொரித்து வைத்து வாசலில் உட்கார்ந்து…




Read more »

புது நாவல்: அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 33 இரா.முருகன்

By |

புது நாவல்: அச்சுதம் கேசவம்  : அத்தியாயம் 33             இரா.முருகன்

கற்பகத்தை டாக்சியில் ஏற்றி செண்ட்ரல் ரயில் நிலையத்துக்குக் கூட்டிப் போவது அவ்வளவு ஒன்றும் சுலபமானதாக இருக்கவில்லை. ஒரு வாரம் கூடத் தங்கி இருந்து, கூடவே சாப்பிட்டு, கூடத்தில் பகலில் பக்கத்திலேயே உட்கார்ந்து வாயோயாமல் அரட்டை அடித்து, சமயோசிதமாகப் பேசி நல்ல வார்த்தை சொல்லி மெல்ல மெல்ல வழிக்குக் கொண்டு வர வேண்டியிருந்தது. திலீபும், ஜனனியும் பம்பாயில் இருந்து கிளம்பும்போதே பேசி வைத்துக் கொண்டு வந்த மாதிரி கச்சிதமாகச் சேர்ந்து செயல் பட்டார்கள். அது இல்லாமல் இருந்தால், அவர்கள்…




Read more »

சுரபி – சுஜாதா ரசனைப் பிணைப்பு : புது இலக்கிய அமைப்பு

By |

சுரபி – சுஜாதா ரசனைப் பிணைப்பு : புது இலக்கிய அமைப்பு

சுரபி சுஜாதா ரசனைப் பிணைப்பு. சுஜாதா சார் எழுத்துகளை நேசிக்கும் அவருடைய நண்பர்களும் அன்பர்களும் உருவாக்கும் அமைப்பு இது. சுஜாதா எழுத்தைக் கொண்டாடவும், அவர் நினைவில், தமிழ் இலக்கியத்தை முன்னெடுத்துப் போகும் முயற்சிகளை ஊக்குவிக்கவும், அடுத்த தலைமுறைக்கு ’சுஜாதாவைக் கடத்தவும்’ ஏற்படுத்தப்படும், எந்த விதமான நுண்ணரசியலும் கலக்காத, ரசனையையும் அன்பையும், நம்பிக்கையையும் அடிப்படையாகக் கொண்ட இலக்கிய அமைப்பு இது என்று சுரபி குழுவினர் சொல்கிறார்கள். சிறுகதை, நாவல், சயன்ஸ் ஃபிக்‌ஷன், அ-புனைகதை துறைகளில் குறிப்பிடத் தகுந்த ஆக்கங்களை…




Read more »

புது நாவல் : அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 32 இரா.முருகன்

By |

புது நாவல் : அச்சுதம் கேசவம் :            அத்தியாயம் 32                           இரா.முருகன்

ஏர்ல் ஓஃப் லில்லி கேஸில். அல்லிக்கோட்டை பிரபு ஆல்பர்ட் மிடிங்டன் ரிச்சர்ட்சன் நடுராத்திரிக்கு வழக்கம்போல் எழுந்து கொண்டார். அவர் உலவப் புறப்பட வேண்டிய நேரம் அது. சலவை செய்த உடைகள் மர பீரோவில் இருப்பதை உறுதி செய்து கொண்டார் ஆல்பர்ட் பிரபு. அவை எப்போதும் அணியத் தயாராக நானூறு வருடமாகப் புதியதாக இருப்பவை. ஒரு ராத்திரி விடாமல் தினம் தூய்மையான ஆடைகளை அணிந்து, காலில் தூசு இல்லாமல் மின்னும் படியாகத் துலக்கிய பாதுகைகளையும் இட்டுக் கொண்டு அவர்…




Read more »

புது நாவல் : அச்சுதம் கேசவம் அத்தியாயம் 31 இரா.முருகன்

By |

புது நாவல் : அச்சுதம் கேசவம்   அத்தியாயம் 31                                            இரா.முருகன்

தட்டிய கதவைத் திறக்கப் போகிறவர் மேல் சட்டையில்லாத உடம்பில் நச்சுப் பாம்பு ஒன்றைத் தவழ விட்டுக் கொண்டு, தலைமுடியைச் சாய்வாக மடக்கிக் கட்டியவராக இருப்பார் என்று எதிர்பார்த்தாள் கொச்சு தெரிசா. அவர் ஆறடி உயர்ந்து, இடுப்பில் மிகச் சிறிய கருப்புத் துண்டை இறுகக் கட்டி, புகைக்கூண்டில் படிந்த கரும் சாம்பலை உடம்பு முழுவதும் பூசி இருப்பார் என்று அமேயர் பாதிரியார் ஏனோ ஊகித்திருந்தார். முசாபர், தன் முக ஜாடையில், கண்ணில் மையிட்டு, மணிக்கட்டில் மல்லிகைப் பூச்சரம் சுற்றியிருந்த…




Read more »

கற்றது மட்டும்

By |

கற்றது மட்டும்

இன்று சுஜாதா 80-வது பிறந்த நாள். இந்தக் கட்டுரை சற்றே சுருங்கிய வடிவத்தில் இன்றைய தி இந்து பத்திரிகையில் வெளியாகியுள்ளது. கற்றது இரா.முருகன் 1940-களின் இளைஞர்கள் கொடுத்து வைத்தவர்கள். தங்களைப் பிணைத்துக் கொண்டு சொந்த வாழ்க்கையின் அபத்தங்களைப் புறம் தள்ளிச் செயல்பட அவர்களுக்கு சுதந்திரப் போராட்டம் இருந்தது. 1960-களின் இளைஞர்கள் அதிர்ஷ்டசாலிகள். எல்லாத் துயரங்களையும் ஏமாற்றங்களையும் மறந்து முற்றாக ஈடுபட்டு அமிழ, இந்தி எதிர்ப்பு இயக்கம் இவர்களுக்குப் பற்றுக்கோடானது. ஆனால், 1950-களின் இளைஞர்கள்? இவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள். உணர்ச்சிகரமாகப்…




Read more »