Archive For ஜூன் 29, 2015

புது நாவல்: அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 44 இரா.முருகன்

By |

புது நாவல்: அச்சுதம் கேசவம்  : அத்தியாயம் 44        இரா.முருகன்

எழுந்திரு. ஊர்வலம் வந்துட்டு இருக்கு. பாதி ராத்திரிக்கு கொச்சு தெரிசா முசாபரை எழுப்பினாள். கண்ணூரை மழை நனைத்த ராத்திரி அது. இன்னும் விடிய வெகு நேரம் இருந்ததாக கூகை ஒன்று அவ்வபோது அறிவித்துப் பறந்து போக, தங்குமிடத்து ஜன்னல்களினூடே குழல் விளக்கின் ஒளி விட்டு விட்டுக் கசிந்து கொண்டிருந்தது. பெரிய மின்விசிறி ஒன்று நிலத்தைக் கெல்லி அசைக்கிறது போல காற்றைக் கிளப்பிச் சுழல, அறையெங்கும் விதையோடியிருந்த குளிர், மங்கலான இரவு விளக்கை ஈசல்கள் மொய்த்துப் பறந்து மழை…




Read more »

மூன்று கவிஞர்கள்

By |

மூன்று கவிஞர்கள்

மூன்று கவிஞர்கள் நேற்றுப் பிற்பகல் சுட்டெரிக்கும் வெய்யில் நேரத்தில் ஒரு நண்பரும் நானும் கவிதை பேசிக் கொண்டிருந்தோம். அவர் அண்மையில் படித்த ஒரு தமிழ்க் கவிதையைச் சொன்னார். வாழ்வை முடித்துக் கொண்ட ஒரு பெண்ணைப் பற்றி மற்ற யாரோ கூறும் கையறுநிலைப் புதுக் கவிதை. நான் சொன்னேன் – கவிதை எளிமையாக, உருவகப் பூட்டுப் போட்டுக் கொள்ளாமல் இருக்கிறது. ஆனாலும் முதல் வரியிலேயே கடைசி வரிக்கான struct pointer * கிடைத்து விடுகிறது. இன்னொன்று அந்தப் பெண்…




Read more »

புது நாவல்: அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 43 இரா.முருகன்

By |

புது நாவல்: அச்சுதம் கேசவம்   : அத்தியாயம் 43       இரா.முருகன்

எல்லாப் பத்திரிகைகளும் ஒரே மாதிரி இல்லை. முசாபர் உற்சாகமாக விளக்கிக் கொண்டிருந்தான். பவுலோஸ் சகோதரர் மிகுந்த ஈடுபாட்டோடு கேட்டபடி முன்னால் அமர்ந்திருந்தார். அவர் பார்த்திருக்காத, கேட்டிருக்காத விஷயம் இதெல்லாம். கோயம்புத்தூர் கடந்து தூரதேசம் என்று எங்கும் போனதில்லை அவர். கோவை போனபோது கூட வெள்ளை வெளேரென்று பச்சரிசிச் சோறை ரெண்டு நாளுக்கு மேல் சாப்பிட முடியாமல் திரும்பி விட்டார். சவுக்காரம் போட்டுத் துவைத்த மாதிரி ஏன் இப்படிச் சோறு இருக்க வேணும்? மெல்லிய சிவப்பில் வடித்து, ஒரு…




Read more »

புது biofiction : தியூப்ளே வீதி – அத்தியாயம் 7 இரா.முருகன்

By |

புது biofiction : தியூப்ளே வீதி  – அத்தியாயம் 7                 இரா.முருகன்

அப்பா ரெண்டு நாளாக முகம் கொடுத்துப் பேசவில்லை. முகத்தில் சிரிப்பில்லை. நான் தான் அப்படி நினைத்திருக்க வேண்டும். அவருக்கு பேங்கில் வேலை அதிகம் இருந்திருக்கலாம். விக்தோ, ஓவர்கோட் அக்கவுண்டண்ட், வின்செண்ட் நடராஜன் மற்றும் பேங்கில் இருந்த மிச்சம் பதினெட்டு ஊழியர்கள் அவர் சொல் கேட்காமல் போயிருக்கலாம். அல்லது மெட்ராஸ் தலைமை அலுவலகத்திலிருந்து ராத்திரி எட்டு மணிக்கு மேல் ஃபோன் செய்து பெரிய அதிகாரி கடிந்து கொண்டிருக்கலாம். சாயந்திரம் வந்தால் இது சரியாகி விடக்கூடும். அதற்கு வெகு முன்னால்,…




Read more »

புது நாவல்: அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 42 இரா.முருகன்

By |

புது நாவல்: அச்சுதம் கேசவம்     : அத்தியாயம் 42           இரா.முருகன்

நல்ல நிகழ்ச்சிகள் பலவும் மயில்கள் கட்டியம் கூற நடந்திருக்கின்றன. பஸ்ஸில் பக்கத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த இந்தியர் திடமாகச் சொல்ல, அமேயர் பாதிரியார் இருக்கக் கூடும் என்பது போல தலையசைத்தார். மயில்களைப் பற்றி இங்கே நல்லதாக அபிப்பிராயம் வைத்திருக்கும் மிகப்பல பேரில் இந்த இளைஞரும் ஒருவராக இருக்கக் கூடும். டெல்லியில், இந்திய அரசாங்க அதிகாரியாம். கொஞ்ச நேரம் முன்னால் தெரிவித்தார். சங்கரன் என்று தன் பெயர் கூடச் சொல்லிக் கை குலுக்கினார் பாதிரியாருடன். ரயிலிலும் பஸ்ஸிலுமான பயணம்…




Read more »

new stage play : கழுகுகள் KazhukukaL : (excerpts from the synopsis) இரா.முருகன்

By |

new stage play  : கழுகுகள்      KazhukukaL     : (excerpts from the synopsis) இரா.முருகன்

This narrative is carved out of the novel ‘Viswaroopam’ by Era.Murukan and adapted for stage. KazhukukaL (Eagles) occurs during the period 1899 – 1927. The story is narrated through 6 letters penned by the protagonist. These letters never get posted to reach the addressees. It is 1904. Mahalingam, an incarcerated youth in Madras prison is…




Read more »