Archive For ஜூன் 23, 2015
காயலில் படகு நகரத் தொடங்கியதும் அமேயர் பாதிரியார் பாட ஆரம்பித்தார். பிரஞ்சுப் பாட்டு. அன்றொரு தினம் நின்று பாடினேன் காற்றில் கலந்த பாடல் ஒன்று புல்வெளி எங்கும் சுற்றித் திரிந்து நதிநீர்த் திவலை சிதறி நனைத்து பறவைச் சிறகில் தீற்றிப் பறந்து பனிமலைச் சிகரம் ஆரத் தழுவி திரும்பி வந்து என்னைச் சூழும். பாடுகிறேன் ஒரு பழைய பாடல் பழைய சிநேகிதர் வருக. மனம் விட்டுப் பாடி எத்தனை காலம் ஆகி விட்டது. நீஸ் நகர கதீட்ரல்…
ஞாயிற்றுக்கிழமை. தியூப்ளே வீதி கொஞ்சம் போல் ஓய்வெடுத்துக் கொள்ளும் தினம் அது. ஆனாலும் இயக்கம் நிற்பதில்லை. தெருவின் கிழக்கு முனையில் பரிசுத்தமே செங்கலும் சுண்ணாம்புமாகி கம்பீரமாக உயர்ந்து நிற்கும் போன நூற்றாண்டுக் கட்டிடங்கள். அவை, நெருங்கி வந்து கரையைத் தொட்டு இரையும் கடலோடு சதா வேதாந்தம் பேசிக் கொண்டிருக்கும். அந்தக் கட்டிடங்களில் ஏதாவது ஒன்றின் உள்ளறையில் இருந்து எப்போதும் பியானோ இசையின் சில நறுக்குகள் கசிந்து தெருவில் நடக்கிறவர்களை நூறாண்டு முந்திய ஐரோப்பாவுக்கு நாடு கடத்தும். அழகான…
அச்சுதம் கேசவம் நாவல் கிட்டத்தட்ட முதற்பாதி முடிந்து முன்னேறிக் கொண்டிருக்கிறது. அரசூர் வம்சம், விஸ்வரூபம் என்ற இதற்கு முந்தைய ‘அரசூர் நாவல்கள்’ இரண்டிலும் இல்லாத சற்றே மாறுபட்ட கதையாடல் அச்சுதம் கேசவம் புதினத்தில் கையாளப்பட்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட கதை இழைகள் மற்ற இரண்டிலும் உள்ளது போல இதிலும் உண்டு. எனில், ஒவ்வொரு இழையிலும் அவ்வப்போது நிலவும் காலத்தின் ஒரு சிறு பகுதிக்கான நிகழ்வு விரிவாகச் சொல்லப்பட்டு ஒரு implied sequencing நிலைநிறுத்தப் படுகிறது. ’தியூப்ளே வீதி’ பயோபிக்ஷன்-நாவலில்…
விடியும் நேரத்தில் சங்கரன் அரசூருக்கு வந்தான். வீடு பூட்டி இருந்தது. மருதையன் மாமா வாக்கிங் போயிருப்பார். வசந்தியின் கைப்பையைத் திறக்கச் சொல்லி சாவியை வாங்கிக் கதவைத் திறந்தான் அவன். சதா சுத்தமாக வைத்திருந்து, எப்போது வந்தாலும் உடனே குடித்தனம் நடத்தத் தயாராக வீடு. கூடத்தில் ஊஞ்சல், மாடப்புரையில் அகல் விளக்கு, உள்ளறையில் முகம் பார்க்க உயரமான நிலைக் கண்ணாடி, ரேழியில் கடியாரம் என மனதுக்கு இதமாக நிறையும் இல்லம். மருதையன் மாமாவுக்கு எல்லா நன்றியும் நமஸ்காரமும் உரியதாகட்டும்….
கொட்டும் முழக்கும் சீராகக் கேட்டபடி இருந்த கோவில் பிரகாரத்தில் சங்கரன் கால் வைத்தான். ராத்திரி பத்து மணி கழிந்து சுவர்க் கோழிகள் ஒலிக்கும் இருட்டு வெளி. பாட்டு சத்தம் வழிகாட்ட இடது புறம் திரும்பி நடந்தான் அவன். கூடவே ஒரு சத்தமும் இல்லாமல் வசந்தி போனாள். ஓசை அதிகமானதாகத் தோன்றியதால் வெளிவீதியில் வரும்போதே சற்று நின்று காலில் கொலுசை அகற்றிக் கைப்பையில் போட்டுக் கொண்டிருந்தாள் அவள். என்ன அங்கே நடக்கறது? தாடியும் கருப்புத் துண்டுமாக வேட்டி மடித்துக்…
ஏர்போட்டுக்கு நான் கூட்டிப் போறேன். கார் வைத்திருந்த எல்லா நண்பர்களும் சங்கரனை விமான நிலையத்துக்குக் கூட்டிப் போவதில் ஆர்வம் காட்டினார்கள். என் டிரைவரை வரச் சொல்றேன் உங்க வீட்டுக்கு. எப்பக் கிளம்பறேன்னு மட்டும் சொல்லு. பிடார் ஜெயம்மாவுக்கு கார் ஓட்டத் தெரியாவிட்டாலும் சிநேகிதம் பெரிய விஷயம். அதுவும் சங்கரனை விட வசந்திக்கு ரொம்பவே வேண்டப் பட்டவள். வசந்தியும் சங்கரனும் விளக்கை எரிய விட்டுக் கொண்டு படுக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்து, எல்லா வாய்ப்பு வசதிகளையும் அலசி ஆராய்ந்து, ஜெயம்மா…