Archive For ஜூன் 8, 2015
அவ்வளவு பெரிய மனுஷராயிட்டோமா? வசந்தி கேட்டாள். காசு கொழுத்துடுத்தா? வெர்கீஸ் தாடையைச் சொறிந்து கொண்டு விசாரித்தான். மதராஸி லாட்டரி பம்பரா ஏதும் அடிச்சுதா? மேல்மாடி குடித்தனத்து குர்னாம்சிங் கிண்டினான். கொட்டு கொட்டுன்னு ஆகாசத்திலே இருந்து காசு கொட்டுதாக்கும். எனக்கும் கொஞ்சம் கொடுங்க சார். ஒய்ட் லக்கான் கோழி வாங்கி வளர்க்கறேன். ஒவ்வொரு முட்டையிலேயும் உங்க பேர் தான் எழுதி இருக்கும், ஆமா. ஆபீசில், பகல் சாப்பாடுக்கு முந்திய மதிய தரிசனமாக, உடம்பு வாடையடிக்கும் சிகப்பு ஸ்வெட்டர் களைந்து,…
மயிலை காளத்தி கடை ரோஸ்மில்க் பற்றி மந்தவெளி மோகனரும், மாம்பலம் முருகனும் வெண்பா அன்பு – அம்பு விட்டுக் கொண்டது யாதெனில் – காளத்தி கடை வெண்பாக்கள் (சற்று முன் வந்த மூன்றாவது, நான்காவது உட்பட) “மூளத்தீ கோடையாய், முப்புரத்தை வென்றபின்பு, காளத்தி நாதர் கடைகலந்த , -பாலொத்த, ரோஸ்மில்க் அருந்த ரகசியமாய் சென்றாராம், ஜுஸ்ஜில் ஜலபுராணம் ஜோர்”….கிரேசி மோகன்…. ———————————————————- அசுரர்க் களித்தாய் அரவுக்கும் வார்த்தாய் பசுமேய்த்த கோனார் ருசித்தார் விசுவனே தாளில் பணிந்துனக்குத் தந்தோம்…
முன்னால் பார்த்தால் டவுண் பஸ். பின்னால் இருந்து பார்த்தால் சுற்று வட்டாரக் கிராமப் பிரதேசத்துக்கு ஷட்டில் அடிக்கும் ரூட் பஸ். ரெண்டு அடையாளமும் தீர்க்கமாகத் தெரிய நிரம்பி வழிந்து கொண்டிருந்த வண்டி. அலுமினிய டப்பாவைத் தலைகீழாகக் கவிழ்த்து நாலு சக்கரம் மாட்டிய அது தான் நான் காலேஜ் போகவும் திரும்பவுமான வாகனம். பஸ்ஸின் வாசல்படியில் நின்றபடி ஏகப்பட்ட பேட்டை, குப்பம் பெயர்களைக் கூவிக் கொண்டு இருந்த நீலக் கைலிப் பையன் என்னைப் பார்த்ததும் காலேஜ் என்று கூவலில்…