Archive For ஆகஸ்ட் 31, 2015
பிற்பகல் ஒரு மணியில் இருந்து ரெண்டு வரை அங்கலாய்ப்புக் காலம். இப்படி படுத்தறாங்களே என்று சகல தரப்புக்களின் மேலும் ஆத்திரம் வரும் பொழுது.ஆணும் பெண்ணும் கலந்து பழகத் தடை அமுலில் இருக்கும் நேரம். போன மாதம் வரை இந்தத் தொந்தரவில்லை. ஆண்களும் பெண்களுமாக எல்லா மாணவர்களும் ஒரே கூரையின் கீழ் இருந்து கீழ்த் தளத்து வகுப்பறைகளில் பகல் உணவு கழிக்க முடிந்தது. சரியாக ரெண்டு மணி பத்து நிமிடத்துக்கு காலேஜ் எழுத்தர் பஸ்ஸர் ஒலிக்க, துப்புரவுத் தோழர்கள்…
நகர்-தல் வீட்டுக் குப்பை வெளியே சுமந்து கொஞ்சம் வளைந்து சாலை திரும்பும் மூலையில் குப்பைத் தொட்டியில் குவித்து இங்கிருந்து அங்கு ஏதும் குறையாது அசுத்தம் நகர்த்தி உலகம் தூய்மை ஆக்கும் உவகை இனியது கேளீர். கசடு சேர்த்த கருப்பு பிளாஸ்டிக் பையும் கையுமாய் காலை விடியுமுன் நடக்கத் தொடங்கச் சின்னதாகக் காக்கைக் கூட்டம் தாழப் பறந்து கூடவே வந்தது நேற்று. காகம் சூழ்ந்து கரையச் சற்றே நடுங்கிக் கூர்த்த அலகுகள் பார்த்து குப்பையைத் தொட்டியில் மெல்ல வீச…
ஒரு வெப்பமான நடுப்பகலின் தொடர்ச்சியாக மழைக் காலம் ஆரம்பித்தது. தெர்மோடைனமிக்ஸ் வகுப்பில் எண்ட்ரபி என்ற அதி உன்னதமான சமாச்சாரத்தை விவாதித்துக் கொண்டிருந்தபோது, மூடி வைத்த ஜன்னல்கள் காற்றில் திறக்க, சாரலாக வகுப்புக்குள் சீறி அடித்தது இந்த ஆண்டின் முதல் மழை. அது எல்லோரையும் குழந்தையாக்கி கூகூவென்று கூவ வைத்தது. முதல் கூவல், புரபசர் நெடுமுடி வெர்கீஸ் சாண்டி சார் இட்டது. வலுத்துப் பெய்த மழையில் தெர்மோடைனமிக்ஸ் விடைபெற்றுப் போய்விட்டது. ரொம்பவே அதிசயமான கூட்டு மௌனம். நின்று பெய்யும்…
கடவுள். தாய்த் தெய்வம். உறங்கிக் காலையில் விழித்ததும் தேநீர் கொடுக்க ஒரு படையே நிற்கிறது. ராணுவம். ஆயிரம் ரெண்டாயிரம் ஆப்பிரிக்க வீரர்கள். மாறி மாறி வருகிறார்கள். நந்தினிக்கு அவர்கள் எல்லோரும் பகலும் இரவும் காவல். நந்தினி அவர்களுக்கு நிரந்தரக் காவல். ஒரு வருடமாக இப்படித் தான் நடக்கிறது. வீட்டு வாசலில் ராணுவ வண்டி வந்து நின்ற ஒரு பகல் பொழுதில் நந்தினி கடவுளானாள். சரியாகச் சொன்னால், கடவுளுக்கு மூத்த சகோதரி. அவள் கிடைத்த நிம்மதியில் கடவுளை சாவகாசமாக…
ரத்னா தியேட்டரில் மேட்னி ஷோ. உத்தரவின்றி உள்ளே வா என்று வேண்டி விரும்பிக் கூப்பிட்டதால் என்ன விஷயம் என்று டிக்கெட் எடுத்துப் போய்ப் போய்ப் பார்த்து விட்டு சக்கரம் போகிற போக்கில் சைக்கிள் மிதித்து வந்து கொண்டிருந்தேன். ரூ ல போர் என்ற கதவுத் தெரு நான் வந்தது. தெற்கு வசத்தில் அதன் வலது கைப்பக்கம் முண்டாசு தெரு என்று சைக்கிள் ரிக்ஷா ஓட்டும் சகோதரர்கள் சொல்லும் மாண்டார்சியர் தெரு. இதுவரை இந்த ஊரில் புகுந்து புறப்பட்டுப்…
ஆவக்கா ஊறுகா இருந்தாப் போடேன் பாட்டி. மொட்டை ரசஞ்சாதமா எப்படி சாப்பிடறது? திலீப் தட்டில் பரப்பி வைத்த தணுத்த சாதமும் மேலே மிதக்கும் ரச வண்டலுமாகத் தரையில் சம்மணமிட்டு உட்கார்ந்தபடி, வாசலைப் பார்த்துச் சத்தம் போட்டான். வச்சுண்டா வஞ்சகம் பண்றேன், ஏண்டா? ஊர்லே இருந்து மூட்டை கட்டிக் கொண்டு வந்தது முழுக்க நீதான் தின்னு தீர்த்தே. ஜனனிக்கு ஒரு எவர்சில்வர் டப்பாலே போட்டுக் கொண்டு போய்க் கொடுடான்னு தாவாக்கட்டையைப் பிடிச்சுக் கெஞ்சினேன். போடி கெழவின்னு குண்டியைத் தட்டிண்டு…