Archive For செப்டம்பர் 30, 2015
Welcome to this interaction on theatrical plays. At the outset let me clarify that there is nothing that can be championed as absolutely right or rejected outright as pertinently wrong, in the myriad of responses we have received for all the six questions posed. These are the individual points of view (PoV) of our friends…
கேரளம் திலீப் நினைத்தது போல் இல்லை. பம்பாய் மாடுங்கா சங்கர மட வைதீகர்களும், ஓணத்துக்கு வாழைக் குலை வாங்க குடும்பத்தோடு கும்பலில் புகுந்து நடக்கும் செண்ட்ரல் ரயில்வே டிவிஷன் கிளார்க் நாயர்களும், ஐயப்பன் கோவிலில் மார்கழி மாதம் இருமுடி கட்டி விட செண்டை மேளத்தோடு வந்து சேரும் மாரார்களுமாக அவன் மனதில் எழுப்பியிருந்த உலகம் வேறு விதமாக இருந்தது. அந்த நிலப் பிரதேசத்தில் விடிய ரெண்டு மணி நேரம் முன்னால் நம்பூதிரிகள் ஆறு, குளம் என்று பார்த்து…
நொளினிகாந்த் சட்டர்ஜி மோஷாய் உள்ளே இருந்து காகிதமும் பென்சிலுமாகத் திரும்பி வந்தார். ’உனக்கு செஞ்சு வச்ச பொம்மை இன்னும் வர்ணம் காயலே. அடுப்பு பக்கம் வச்சிருக்கேன். கொஞ்சம் பொறு’. கயலை நோக்கிச் சொல்லி விட்டு, என்னை எழுந்திருக்கச் சொன்னார். பவழமல்லி மரத்தடியில் கயலோடு தப்புக் காரியம் செய்து விட்டதாக சந்தேகப் படுகிறாரோ. ஆமா, செய்தேன். அதற்குத் தண்டிக்க இந்த சுருட்டு சுந்தரம் பிள்ளை யார்? ’இப்படி வந்து இந்த பூக்கூடை பக்கமா நில்லு’. வாட ஆரம்பித்த பூக்கள்…
நான் சுவர்க்கத்தில் காலாற உலவியபடி தேவதைகளை நினைத்துக் கொண்டிருக்கும்போது இதைத் தொடங்கலாம். தியூப்ளே வீதியில் பழைய கருக்கு அழியாமல் இருக்கும் அழகான கட்டடங்களைத் தேர்ந்தெடுத்து பரிசு கொடுத்தால், மேலே எங்களுடைய இருப்பிடமும், நேர் கீழே, அப்பா மேனேஜராக இருந்த பேங்கும் அமைந்த கட்டிடம் சிறப்புப் பரிசைப் பெறத் தகுந்தது. விஸ்தாரமான கீழ்த் தளம். அதற்கு ஈடு கொடுக்கும் விதத்தில் உயர்ந்த மாடி. நுழைந்ததும், நீண்டு நிமிர்ந்த வைரம் ஏறிய மரத் தூண்கள் கம்பீரமாகக் கட்டிடத்தை முன்னிலைப் படுத்தும்….
நீங்கள் உற்சாகமாக இருக்கிறீர்களா? நேற்று இரவு உணவுக்கு என்ன சாப்பிட்டீர்கள்? நல்ல முறையில் சீரணமானதா? இரவு நல்ல உறக்கம் கிடைத்ததா? விடியலில் பறவைகள் ஜன்னலில் வந்து பாடினவா? தேத்தண்ணீர் கலந்து கொடுக்கும் உதவியாளர் குறித்த நேரத்தில் வந்தாரா? புதியதாகக் கறந்த பசும்பாலை அரசு பண்ணையின் தலைவர் சிறப்புத் தூதர் மூலம் கொடுத்து அனுப்பியிருந்தாரா? அது நேரத்துக்கு வந்ததா? தேயிலையைப் பாலில் கொதிக்க வைத்து நீங்கள் விதித்த வெப்ப அளவுக்குக் காய்ச்சப் பட்டதா? நீங்கள் விரும்பியபடி வெண்மை குறைந்த…
’நாளைக்கு ஹால் டிக்கெட் வருது’. ஒரு மாறுதலுக்காக ருழே பொண்ணு பிரஞ்சில் சொன்னதைத் தமிழ்ப் படுத்தாமல் அமேலி நேரடியாக அறிவித்தாள். படிக்க வேண்டும். இது பிசிக்ஸையும், கணிதத்தையும், கெமிஸ்ட்ரியையும் பற்றி இல்லை. அதெல்லாம் குறித்து அடுத்த வருஷம் கவலைப் பட்டால் போதும். இப்போதைக்கு ரெண்டு பேப்பர் தமிழிலும், இன்னும் ரெண்டு இங்கிலீஷிலும் எழுதி நாலும் ஜெயிக்க வேண்டும். ’எழுதணும்னு ஒண்ணும் இல்லே’. வைத்தே பரீட்சையைச் சந்திக்காமலே வெற்றி கொள்ள வழி சொல்கிற நிபுணன் போல் காப்பிக் கோப்பையை…