Archive For டிசம்பர் 28, 2016

New : வாழ்ந்து போதீரே – நூல் முன்னுரை இரா.முருகன்

By |

New : வாழ்ந்து போதீரே – நூல் முன்னுரை     இரா.முருகன்




Read more »

New : விஷ்ணுபுரம் விழாவில் என் உரை

By |

New : விஷ்ணுபுரம் விழாவில் என் உரை

வண்ணதாசன் இரா.முருகன் சிவலோக நாதனைக் கண்டு சேவித்திடுவோம் வாரீர். பயணத்துக்கு எடுத்து வைக்கும் பட்டியலில் சஞ்சய் சுப்பிரமணியன் குரல் தன்னிச்சையாக முதலாவதாக வந்து உட்கார்ந்து கொள்கிறது. மாயாமாளவ கவுள ராகத்தில் சஞ்சய் நல்ல தோழனாகத் தோளில் அணைத்து வாங்க, போகலாம் என்று கெஞ்சுகிறார். அப்புறம், போனால் நல்லா இருக்கும், வாங்க என்று ஒரு கால் உள்ளேயும் மற்றது வெளியேயுமாக நின்று கூப்பிடுகிறார். அதற்கும் அப்புறம், முதுகில் பலமாக அன்போடு ஒரு அடி கொடுத்து, வாய்யா, போகலாம்னா வர…




Read more »

New : கண்ணன் காட்சி ஓடக் கும்மி (நௌகா சரித்திரம்)

By |

New : கண்ணன் காட்சி ஓடக் கும்மி (நௌகா சரித்திரம்)

சத்குரு தியாகராஜ ஸ்வாமிகள் இயற்றிய நாட்டிய நாடகமான ‘நௌகா சரித்திரம்’ பற்றி நேற்று டாக்டர் பிரமிளா குருமூர்த்தி நடத்திய சொற்பொழிவு-நிகழ்த்திக் காட்டுதலில், எனக்கு இருந்த இரண்டு அடிப்படை சந்தேகங்கள் தீர்ந்தன. 1) நௌகா என்றால் படகு என்று தெரியும். தியாகராஜர், படகு என்று சேர்த்துப் பார்த்து, இது அவருக்குப் பிரியமான ராமபிரானையும் அவனுக்குக் கங்கையில் படகோட்டிய குகனையும் பற்றிய படைப்பு என்று இதுகாறும் நினைத்திருந்தது தவறு. நௌகா சரித்திரம், யமுனையில் கண்ணன் தோணிகளோட்டி கோபியரோடு விளையாடி வந்த…




Read more »

New: Love, lust and life – an excerpt from Vaazhnthu POthiirE (novel being readied up for publication)

By |

New: Love, lust and life – an excerpt from Vaazhnthu POthiirE (novel being readied up for publication)

மழை ஈரமும் இருட்டும் நிலையாகத் தங்கி இருந்த அறையில் கொச்சு தெரிசாவின் கண்ணுக்குள் விரிந்த பழைய வீட்டை அடையாளம் காண அவள் சிரமப்படவில்லை. அரசூரில் அவள் பார்த்தது. பூட்டி வைத்திருந்தது. உள்ளே வாசல் திண்ணையில் ஒரு கிழவி உட்கார்ந்து கனாக் கண்டேன் கனாக் கண்டேன் என்று பாடிக் கொண்டிருந்த வீடு. அது சங்கரனின் வீடு என்று தெரியும் அவளுக்கு. கட்டிலில் அவளோடு அடுத்திருந்த சங்கரன் பார்வை அவனும் அங்கே இருப்பதைச் சொன்னது. இரண்டு பேரும் வாசலில் நிற்கத்…




Read more »

New: The champions and all that jazz Era.Murukan

By |

New: The champions and all that jazz                Era.Murukan

They walk beside us arm in arm. They, along with us, wait patiently for the next chamber pot to be vacated at the theatre rest room, as the comfort break is announced, with the stage play halfway through. They check their mobile phones for new messages at our adjacent table in the restaurant, waiting like…




Read more »

New : சோ ராமஸ்வாமி

By |

New : சோ ராமஸ்வாமி

‘துக்ளக் சோ’வாகத்தான் எப்பொழுதும் நினைவில் வருகிறார். அவருடைய நாடகங்கள் அதற்கு அடுத்த அடையாளம். சினிமா அதற்கும் பின்னால். 1970-கள், துக்ளக் பத்திரிகையின், துக்ளக் சோ பொது வாழ்வின் பொற்காலம். ஜெயகாந்தனின் ‘ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்’, கண்ணதாசனின் ‘எண்ணங்கள் ஆயிரம்’ என்று அருமையான தொடர்கள் துக்ளக்கில் வந்த நேரம் அது. துக்ளக் சத்யா அந்தத் தொடர்களையும், மற்ற பத்திரிகைகளையும், ஏன் துக்ளக் பத்திரிகையையும் கூட நயமான பகடி செய்த ஒண்ணரைப் பக்க நாளேடு வெளியானதும் அப்போது தான்….




Read more »