Archive For பிப்ரவரி 27, 2016

New : அரசூர் நாவல்கள் – கருத்தரங்கு Symposium on Arasur Novels

By |

New : அரசூர் நாவல்கள் – கருத்தரங்கு Symposium on Arasur Novels

என் அரசூர் நாவல்கள் (அரசூர் வம்சம், விஸ்வரூபம், அச்சுதம் கேசவம் மற்றும் அரசூர் வம்சம் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் The Ghosts of Arasur) பற்றிய கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்ய விருப்பம். அடுத்த ஒன்றிரண்டு மாதங்களுக்குள், சென்னையில் நடத்தலாம். இந்த நூலக்ள் அனைத்தையும் அல்லது இவற்றில் ஒன்று அல்லது இரண்டு நூல்களைப் படித்து, கருத்தரங்கில் பத்து அல்லது பதினைந்து நிமிடம் பேச விரும்பும் நண்பர்கள் என் மின்னஞ்சல் முகவரியில் – eramurukan@gmail.com தெரிவிக்கக் கோருகிறேன். நன்றி




Read more »

தியூப்ளே வீதியும் meta-ethics-ம்

By |

தியூப்ளே வீதியும் meta-ethics-ம்

தியூப்ளே வீதி முழுவதையும் தினமணி இணையத் தளத்தில் அத்தியாய வரிசை பிசகாமல் தேடிப் படித்த ஒரு நண்பரின் கேள்வி – ’அது ஏன் கடைசியிலே இப்படி பண்ணிட்டே? நீ நடந்துக்கிட்டது ரொம்பத் தப்பு’. பயோபிக்‌ஷன் கதைசொல்லி முழுக்க முழுக்க நானே என்று நம்ப வைத்ததற்கு எழுத்தின் மீது பழி போடலாம் என்றாலும் எழுத்தைப் பற்றி அவருக்குக் குறைச்சல்பட ஏதுமில்லை. பரவாயிலே.. முற்றுப்புள்ளியே இல்லாம பாஷ்யம் ஐயங்கார் மாதிரி அடிச்சுட்டுப் போறே யார் மாதிரி? அதான்’பா கடல்புறா.. அவர்…




Read more »

New novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 21 இரா.முருகன்

By |

New novel : வாழ்ந்து போதீரே     அத்தியாயம் 21        இரா.முருகன்

வாசலில் ஒருமித்து இசைக்கப்பட்ட வாத்திய இசை நந்தினியை எழுப்பியது. நாலு வயலின்கள் கூட்டாக மெல்ல உயர்ந்து சஞ்சரிக்க, ஓபோவும் குழல்களும், தரையில் நிறுத்தி வைத்து வாசிக்கும் ஒரு பிரம்மாண்டமன செல்லோவும் இசைப் பூத்தூவியபடி தொடர, முரசு ஒன்று ஓங்கி ஒலித்து அதிர்ந்து காலை ஏழு மணி என்றது. மேல் தளத்தின் ஜன்னல் வழியாக நந்தினி வெளியே பார்க்க, ஆணும் பெண்ணும் குழந்தைகளுமாக ஒரு சிறிய கூட்டம் தரையில் மண்டியிட்டு வணங்கி நின்றது. துப்பாக்கிகளை உயர்த்திப் பிடித்துக் காவலுக்கு…




Read more »

New: Murugan Ashwin – IPL 2016

By |

New: Murugan Ashwin – IPL 2016

Happy to share my son Murugan Ashwin (M.Ashwin) is selected to play in the IPL 2016 tournament. He is acquired by Rising Pune Supergiants team. Wishing him and his team all success.




Read more »

New Novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 20 இரா.முருகன்

By |

New Novel :   வாழ்ந்து போதீரே        அத்தியாயம் 20           இரா.முருகன்

விடியலின் ஈர வாடையும், சுட்ட சாம்பலைப் பொடி செய்து பன்னீரும் வாசனை திரவியமும் கலக்காமல் பூசும் வைராக்கியமான வீபுதி வாசனையும், குத்தாக அள்ளி ஏற்றி வைத்த மட்டிப்பால் ஊதுபத்தி மணமும், யாரிடம் இருந்து என்று குறிப்பிட முடியாதபடி நகர்கிற, நிற்கிற, உறங்கிக் கிடக்கிற ஜனத் திரளில் இருந்து எழுந்து பொதுவாகக் கவிந்த வியர்வை உலர்ந்த நெடியும், பறித்ததும் மாட்டு வண்டிகளில் ஏற்றிக் கொண்டு வரும் செழித்த காய்கறிகளின் பச்சை மணமும், காற்றில் அடர்த்தியாகக் கலந்த, இன்னும் தொடுக்கப்படாத…




Read more »