Archive For மார்ச் 19, 2016

New மாம்பலம் தொட்ட கடல் – இன்றைய உரை வெண்பா

By |

New  மாம்பலம் தொட்ட கடல் – இன்றைய உரை வெண்பா

மூவர் அணியாகவும் நால்வர் அணியாகவும் தோளோடு தோளாக நடை பயிலும் பூங்காக்களைத் தவிர்த்து நீண்ட நெடிய பயணமாக நிழல் அட்ர்ந்த கோபதி நாராயணா வீதி நடைபாதையில் கண்ணதாசன் சிலையை நோக்கிப் போகும் போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்கள் வண்டி நிறுத்திக் கேட்கிறார்கள் – சார், மெரினா பீச்சுக்கு எப்படிப் போகணும் பார்வைக்கே தெரிகிறது – வெளி மாநிலத்து இளைஞர்கள். ஆங்கிலம் இந்தியோ போஜ்பூரியோ அடர்த்தியாகப் பூசிய குரலில் தயக்கத்தோடு வருகிறது. வழி சொல்லி விட்டுத்…




Read more »

New Novel: வாழ்ந்து போதீரே அத்தியாயம் 23 இரா.முருகன்

By |

New Novel: வாழ்ந்து போதீரே     அத்தியாயம் 23          இரா.முருகன்

. வைத்தாஸ் எழுதும் நாவலில் இருந்து இந்த விமானம் இன்னும் ஐந்து நிமிடத்தில் வானில் ஏறும். அதற்கப்புறம் நீங்கள் உங்களையே புணரப் போகலாம். இப்போது நிற்கவோ, நடக்கவோ யத்தனிக்க வேண்டாம். தயை கூர்ந்து இருக்கையில் அமர்ந்திருங்கள். என் மார்பு வளப்பத்தை முன்னால் உட்கார்ந்து கண் கொட்டாமல் ரசிக்கிற சகல ஆண்களுக்கும் குறி அழுகிச் சொட்டி இற்று வீழட்டும். வாழ்வில் இதுவரை முலை பார்த்திராத ஜன்மங்களா நீங்கள்? எந்தக் காட்டில் இருந்து பிடித்து வரப்பட்ட விலங்குகள்?. சந்தர்ப்பம் கிடைத்தால்…




Read more »

New article: Science Fiction in Tamil Era.Murukan

By |

New article: Science Fiction in Tamil     Era.Murukan

(This is my article in the launch issue of the new journal ‘The Wagon Magazine’, edited by my friend and bi-lingual writer Chiththan Prasad. Welcome, greets and best wishes to The Wagon Magazine!) ESSAYS / BY THE WAGON MAGAZINE / FEB 03, 2016 ‘Why is there a dearth of science fiction in Tamil’? Or it…




Read more »

New : வாழ்ந்து போதீரே – அத்தியாயம் 22 இரா.முருகன்

By |

New : வாழ்ந்து போதீரே – அத்தியாயம் 22    இரா.முருகன்

வைத்தாஸ் அறைக்குள் நுழைந்தபோது அங்கே சந்தன மணம் தூக்கலாக வந்து கொண்டிருப்பதைக் கவனித்தான். கொத்தாகக் கொளுத்தி ஜன்னல் பக்கம் வைத்த ஊதுபத்திகளின் ஒட்டு மொத்த நறுமணம் அது. கூடவே, மேஜை மேல் வைத்த டேப் ரிக்கார்டரில் இருந்து தரன்னன்னா என்று நிறுத்தி நிதானமாக ஆனால் வார்த்தைகள் தெளிவில்லாமல் பாடும் ஓர் ஆண் குரல் ஒலித்தபடி இருந்தது. சுழலும் ஒலி நாடாவோடு அந்தக் குரலும் சுற்றி வளைத்து உயர்ந்து ஊதுபத்தி வாடையோடு சூழ்ந்து கொண்டிருந்தது. நெற்றியில் பட்டையாக வெண்பொடி…




Read more »