Archive For மே 17, 2016
நான் தெரிசா. இங்கிலாந்திலே மேற்கு யார்க்ஷையர் பிரதேசத்தில் கால்டர்டேல்-ங்கிற சின்ன நகரத்திலிருந்து வந்திருக்கேன். இந்திய வம்சாவளியிலே வந்தவள். தமிழும் மலையாளமும் பேசின குடும்பத்தோட கடைசிக் கண்ணியிலே இருக்கப்பட்டவள். ஆனா அந்த மொழிகள் தெரியாது. இங்கிலீஷ் மட்டும் பேச, எழுத வரும். உங்ககிட்டே இங்க்லீஷ்லே பேசலாமா? தன் முன்னால், கை நீட்டினால் மேலே படும் தொலைவில் நின்று பேசிக் கொண்டு போகும் பெண்ணையே பார்த்தபடி இருந்தான் சின்னச் சங்கரன். எங்கே பார்த்திருக்கிறோம் இவளை? தெரிசாவுக்கும் அவனை ஏற்கனவே சந்தித்த…
உடம்பு சொடுக்கெடுத்து விட்டது போல் இருந்தது. ராஜாவுக்கு நடக்க நடக்கக் கம்பீரம் கூடிக் கொண்டு வந்ததேயல்லாமல் இம்மியும் அது இறங்கவில்லை. மணக்க மணக்க எல்லாத் தைலத்தையும் சுடச் சுடக் கலந்து உடம்பெங்கும் நீவி நாலைந்து ராட்சதர்கள் மரியாதையோடு உடம்பு பிடித்து விட்டு எதிர்பார்க்காத நேரத்தில் அவரைப் புரட்டிப் போட்டு முதுகில் ஏறி நின்று திம்திம்மென்று குதித்துக் கும்மாளமிட்டு இறங்கிப் போக எழுந்து உட்கார்ந்தது முதல் உடம்பில் ஒரு வலி, நோவு, பலகீனம் எதுவுமில்லாமல் போனது. அபீசீனியாவில் இருந்து…
ஊரோடு வெள்ளை உடுத்தியிருக்கிறார்கள். ஒண்ணு, இங்கே சாயக்காரன் எல்லாரும் அஸ்தமித்துப் போயிருக்கணும். இல்லையோ, சாயம் துணியில் ஏறாமல் போய் அவன்களை ஊருக்கு வெளியே வேலிக்காத்தான் மண்டிய தரிசு பூமி நெடுக, உடுப்பைப் பிடுங்கிக் கொண்டு முண்டக் கட்டையாக ஓட ஓட விரட்டியிருக்கணும். அப்புறம், சாயமுமாச்சு, சாராயமுமாச்சு, இருக்கவே இருக்கு வெளுப்பு என்று வைராக்கியமாக உடுத்த ஆரம்பித்து இப்போது வெள்ளைப் பட்டியாகிப் போயிருக்கலாமோ இங்கே வந்து சேர்ந்த பிரதேசம்? ராஜா தீவிரமாக யோசித்தபடி, இந்த ஊருக்கு என்ன பெயர்…