Archive For ஆகஸ்ட் 29, 2016

New novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 40 இரா.முருகன்

By |

New novel : வாழ்ந்து போதீரே     அத்தியாயம் 40         இரா.முருகன்

வாழ்ந்து போதீரே அத்தியாயம் நாற்பது இரா.முருகன் சகித்துக் கொள்ளக் கூடிய வாழ்க்கைதான். வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே. சங்கரனுக்கு மெல்லிய முணுமுணுப்பாக சினிமாப் பாட்டு எல்லாம் கூடி வந்தது. தமிழ்ச் சங்கத்தில் போன வாரம் திரை கட்டிப் பார்த்த தமிழ்ப் படம். சிவாஜி கணேசனோடு ஒரு நேர்த்தியான ரெண்டாம் ஹீரோயினும் கூட உண்டு. முதல் கதாநாயகியின் ஹெட்மாஸ்டர் தோரணை அவனுக்கு சரிப்பட்டு வரவில்லை. ரெண்டாம் ஹீரோயின் மகா அழகி. அவள் மட்டும்…




Read more »

New Column : Talespin : The Scent of Books Era.Murukan

By |

New Column : Talespin : The Scent of Books                   Era.Murukan

Last Sunday while rummaging through the attic in my ancestral house, I chanced to lay my dusty hands on a still dustier old diary. Bound in soft leather with a smooth silk thread running across as a book mark, it was a diary for 1921. The proud owner of the diary was a great-grand-cousin of…




Read more »

New Novel : வாழ்ந்து போதீரே – அத்தியாயம் 39 இரா.முருகன்

By |

New Novel : வாழ்ந்து போதீரே            –  அத்தியாயம்  39                இரா.முருகன்

சங்கரன் விழித்துக் கொண்டபோது குழந்தை வீரிட்டுக் கொண்டிருந்தது. இன்னொரு குளிர்கால தினம் தில்லியில் விடிகிறது. ஞாயிற்றுக்கிழமைக்கே ஏற்பட்ட சோம்பலும் குளிரோடு இறுகக் கட்டியணைத்துக் கவிந்திருக்க, ஊரே சூரியனை அலட்சியப்படுத்திக் கவிழ்ந்து படுத்து உறங்கும் பொழுது அது. குழந்தை மூத்திரம் போய் உடம்பெல்லாம், மெத்தையெல்லாம் நனைந்து இருந்தது. அது அனுபவிக்கும் மூன்றாவது குளிர்காலம். மாறி வரும் பருவங்கள் பழக இன்னும் நாலைந்து வருடமாவது பிடிக்கலாம். சின்னஞ்சிறு சிசு. உடுப்பு நனைந்து விழித்துக் கொண்டு அழுதால், பெற்றோர் தவிர வேறே…




Read more »

New Novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 38 இரா.முருகன்

By |

New Novel :           வாழ்ந்து போதீரே             அத்தியாயம்  38   இரா.முருகன்

(பகவதியின் நாட்குறிப்பில் இருந்து) 2 ஏப்ரல் 1901 – பங்குனி 20 செவ்வாய்க்கிழமை யாரோடயும் விரோதம் பாராட்டாமல், பிரியத்தோடு எல்லாரையும் அரவணைச்சு இனி இருக்கப் போகிற காலம் எல்லாம் கழியட்டும். பத்து நாளாக நான் டயரி எழுதலே. பேனாவைப் பிடிக்க கை நடுங்கறது. பத்து நாள் கழிச்சு இன்னிக்குத்தான் சாதாரணமா சாப்பிட்டேன். கொஞ்சமா பேசினேன். எழுதறேன். தேர்த் திருவிழா நடக்கப் போகிற நேரம் இது. பேசாம, யாருக்கோ எங்கேயோ ஏதோ நடக்கறதுன்னு நான் ஓரமாப் போய் உட்காரலாமா?…




Read more »

நாவல் விஸ்வரூபம் – வாசகர் மதிப்புரை

By |

நாவல் விஸ்வரூபம் – வாசகர் மதிப்புரை

விஸ்வரூபம் நாவல் குறித்து சிங்கப்பூர் வாசகர் ஹேமா எழுதியிருக்கிறார் – உங்கள் கதையை நான் சிங்கப்பூர் வாசகர் வட்டம் அமைப்பின் படித்ததில் பிடித்தது அங்கத்திற்காக வாசித்தேன். அங்கே நான் பேசியது இது தான். பொதுவாய் நான் படிக்கும் கதைகளை இரண்டு வகைகளாய் பிரிக்கலாம். 1. நான் வாசிக்கும் கதைகள் 2. என்னை வாசிக்க வைக்கும் கதைகள். இதில் இரண்டாம் வகையைச் சேர்ந்த கதைகள் ஒரு பொதுவான அம்சத்தைக் கொண்டிருக்கும். வழக்கமான வாழ்க்கைச் சூழலிலிருந்து என்னைக் கடத்திச் சென்று…




Read more »

New Novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 37 இரா.முருகன்

By |

New Novel :  வாழ்ந்து போதீரே                அத்தியாயம் 37          இரா.முருகன்

மூணு மாசமா ஆர்ட்டிஸ்ட் பென்ஷன் வரலே சாப். லாவணிக் கலைஞர்கள் பெரியப்பாவை சூழ்ந்து கொண்டு முறையிட்டார்கள். ஷாலினி தாயை விட முதியவளான ஒரு பழைய ஆட்டக்காரி தன் வயதையும் இருப்பையும் பொருட்படுத்தாது மினிஸ்டர் பெரியப்பா காலில் விழுந்து நமஸ்காரம் செய்தாள். அவர் அதிர்ச்சியோடு விலகி செக்யூரிட்டி ஆட்களைப் பார்த்த பார்வையில் என்ன புடுங்கிட்டு இருக்கீங்க என்ற கேள்வி தெரிந்தது. சோபானத்துக்கு, அகல் விளக்கும் பூவுமாகப் புது மணப்பெண்ணைத் தோழிகள் அழைத்துப் போகும் தருணத்தில் பாடுகிற, மங்கலமானதும், குறும்பு…




Read more »