Archive For அக்டோபர் 31, 2016
நாற்பத்தேழு அத்தியாயம் எழுதி முடித்து விட்டேன். வைத்தாஸ் சொன்னான். பதில் இல்லை. தொலைபேசியைக் காதோடு பொருத்திக் கொண்டு இன்னொரு தடவை கொஞ்சம் உரக்கவே சொன்னான் – நாற்பத்தேழு அத்தியாயம் என் நாவலை எழுதி விட்டேன். தொலைபேசியின் அந்தப் பக்கத்தில் இருந்து மெல்லிய ஆனாலும் கண்டிப்பான குரல் கேட்டது – வாழ்த்துகள். எங்கள் நாட்டின் இணையற்ற அரசியல் மற்றும் கலாசாரத் தூதுவரின் இலக்கியச் செயல்பாடுகள் சிறப்பாக நடைபெறுவது குறித்து அமைச்சரகத்தின் தலைமை அமைச்சர் என்ற முறையில் மகிழ்ச்சி. இந்தியப்…
குழலி நடக்க ஆரம்பிக்கிறாள். விசில் சத்தம் தான் கணக்கு. அது கேட்டதும் பிரகாசமான இந்த வெளியில் ஒரு அன்னிய புருஷனோடு கை கோர்த்துக் கொண்டு நடக்க வேண்டும். ஐந்து அடி நடந்ததும் வலது புறம் திரும்ப வேண்டும். சந்தோஷமாக இருப்பதை அறிவிக்கப் புன்னகை பூக்க வேண்டும். அப்படியே அவன் கையை மெல்ல உயர்த்தி, பின் தாழ்த்தி, இறுகப் பற்றியபடியே தொடர்ந்து நடக்க வேண்டும். அவன் பெயர் தான் என்ன? நீளமாக இன்னொரு முறை விசில் ஊதுகிறது. நிற்க…
நேரம் கெட்ட நேரத்தில் ஓவென்று கூப்பாடு போட்டு ராஜாவை எழுப்பி விட்டார்கள். யாரென்று கேட்டால்? என்னத்தைச் சொல்லி எழவைக் கூட்ட? ஊர்ப்பட்ட விளங்காப் பயலுகள் எல்லோரும் சேர்த்து அடிச்ச கூத்து அதெல்லாம். ரெக்கார்டு போடறாக என்றான் சமையல்காரப் பழநியப்பன். வக்காளி எனக்குத் தெரியாதாடா என்று அவனிடம் எகிறினார் மகாராஜா. பின்னே? இருக்கும்போது தான் கருவாட்டுக் குழம்பை உப்புப் போடாமல் வைத்து இறக்கி, மோர் சோற்றில் ஒரு குத்து அஸ்கா சர்க்கரையைக் கலந்து ராஜாவுக்கு பேதி வரவழைச்ச கெட்ட…
கூத்தாட்டு குளம் இரா.முருகன் கரையில் சைக்கிளை ஏற்றிக் கொண்டிருந்த போது அவரைப் பார்த்தேன். நாலரை அடிதான் உயரம். நெற்குதிர் போல உருண்ட உடம்பு. காதில் கடுக்கன் போட்டவர். மடித்துக் கட்டிய கதர் வேட்டியும், கையில் ஒரு டிரான்சிஸ்டர் ரேடியோவுமாக குளப் படியில் இறங்கிப் போய்க் கொண்டிருந்தார். ரேடியோவில் ஆய் புவான் என்று கொழும்பு நேரம் சொல்லி சிங்களப் பாட்டு உரக்கக் கேட்டது. இலங்கை வானொலியில் தமிழ்ச் சேவை முடிந்து சிங்களம் தொடரும் முற்பகல் நேரம். அவரை கேலரியில்…
( விருட்சம் – 100 சிறப்பிதழில் பிரசுரமானது – அக்டோபர் 2016) இரண்டாவது முறையாக இந்த ஊருக்கு வந்திருக்கிறேன். கனவுகளில் இந்த ஊரைக் கடந்து போவது நிறைய நடந்திருக்கிறது. ஆனால் அப்போதெல்லாம் ஊர்ப்பொதுவுக்கு மேலே பறந்து, அவசரமாகக் கடந்து, கடலும் நதியும் சந்திக்கும் முகத்துவாரத்துக்குப் போய் விடுவேன். போன வாரம் கூட நடுநிசிக்கு ஆளில்லாத இந்த ஊரைக் கனவில் கடந்தபோது, புதிதாக முளைத்த வைக்கோல் பொம்மைகளைப் பார்த்தேன். அவை எல்லா நிறத்திலும் பளபளத்து நிற்பவை. எத்தனையோ வருடம்…
காலை வெய்யில் ஏற ஆரம்பித்தது. தியாகராஜ சாஸ்திரிகள் இன்னும் வந்து சேரவில்லை. இரண்டு இங்கிலீஷ் பத்திரிகைகளை ஆதி முதல் அந்தம் வரை எந்த சுவாரசியமும் இல்லாமல் தெரிசா படித்து முடித்திருந்தாள். இனியும் ஒரு முறை அவற்றைப் படிப்பதை விட தெருவில் ஒலிகளைக் கேட்டுக் கொண்டு, அபூர்வமாக விடுதி வளாகத்துக்குள் வரும் பழைய கார்களைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கலாம். எங்கே போயிருப்பார்? ராத்திரி முழுக்கக் கண் விழித்திருந்ததாகச் சொன்னாரே, உடம்புக்கு ஏதாவது ஏடாகூடமாக ஆகியிருக்குமா? அவர் வருகிற சூசனையே…