earworm எல்லோருக்கும் வரும். காலையில் கேட்ட ஏதாவது பாட்டு மனதில் போய் உட்கார்ந்து உட்காதில் நாள் முழுக்க ஒலித்துக் கொண்டே இருப்பது அது. 24 அல்லது 48 மணி நேரத்தில் வேறொரு பாட்டு உட்செவியில் நுழைய இது இறங்கி விடும். எங்கள் பிரச்சனை கொஞ்சம் வேறே மாதிரி. இது mutated ear worm சமாசாரம். கொஞ்சும் புறாவே பாட்டைக் கேட்ட என் பெருந்தலைவர் நண்பர் நரசிம்ம ராவே என்று நாள் முழுக்கப் பாடிக் கொண்டிருந்ததாகச் சொன்னார். எனக்கு…
Read more »
இரா.முருகன் குறுநாவல்கள் நூலுக்கு நண்பர் சுரேஷ் கண்ணன் எழுதி, உயிர்மை மே 2017 இதழில் பிரசுரமாகியுள்ள மதிப்புரை. நன்றி சுரேஷ் கண்ணன், உயிர்மை இரா.முருகன் என்கிற மாயக் கதைசொல்லி – சுரேஷ் கண்ணன் மேற்கிலிருந்து இங்கு இறக்குமதியான இலக்கிய வடிவங்களுள் ஒன்று குறுநாவல். வெகுசன இதழ்களின் உபகாரத்தில் சிறுகதை என்பது மெல்ல மெல்ல சுருங்கி ஸ்டாம்ப் அளவிற்கு மாறி விட்ட அவல சூழலில் சிற்றிதழ்கள், இடைநிலை இதழ்களின் தயவால்தான் அந்த வடிவம் இன்னமும் சற்றாவது மூச்சு விட்டுக்…
Read more »
A couple of years back a good friend of mine, the best cinematographer in town, and I were toying with the idea of scripting and producing a celluloid celebration of the lives of two great personalities to have lived among us in the last (20th) century, the awesome danseuse Balasaraswathi and the empress of music,…
Read more »
வாழ்ந்திருந்ததற்கான எல்லா அடையாளமும் சிதைக்கப்பட்டு, அங்கங்கே குட்டிச் சுவர்களாக, சூனிய வெளியில் திறக்கும் வாசலாக, பிடுங்கி எடுத்து இரும்புக் கிராதியில் சாத்தி வைத்த மரக் கதவாக, இன்னொரு வீடு இறந்து கொண்டிருக்கிறது. தி.நகர் தணிகாசலம் வீதியில் இந்திப் பிரச்சார சபைக்கு எதிர்வசத்தில் நிமிர்ந்து கம்பீரமாக நின்ற வீடு அது. சற்றுமுன், இன்று காலை 7:00 மணிக்கு எடுத்த நிழற்படம் இது. வாசலில் இன்னும் வீட்டுக்கு உரிமையாளராக இருந்தவரின் பெயர் பொறித்திருக்கிறது. திரு. எஸ். சத்தியமூர்த்தி. ஆம், சுதந்திரப்…
Read more »
சாஃப்ட்வேர் நிறுவனங்கள் சுவாரசியமானவை. அவ,ற்றில் கணிசமான ஊழியர்கள், பறந்து கொண்டும், ஓடிக் கொண்டும், நடந்து கொண்டும், தடுமாறிக் கொண்டுமிருக்கும் ப்ராஜக்ட்களில் வேலை பார்க்கிறவர்கள். காலையில் கேண்டீனுக்குப் போகும்போது சாந்தமும் கருணையுமாகப் புன்சிரித்து, வழியில் அங்கங்கே கனிவோடு குசலம் விசாரித்துப் போகிறவர்கள் சீராக இயங்கி வரும் ப்ராஜக்ட்களைச் சேர்ந்தவர்கள். பின்புறத்தில் அக்னி பற்றிப் பிடித்த அவசரத்தோடும் படபடப்போடும் நடக்கிறவர்கள் பற்றி எரியும் ப்ராஜக்ட் ஊழியர்கள். கள்ளச் சிரிப்போடு பவனி வருகிறவர்கள் முழுகும் கப்பலையும் கம்பெனியையும் கை கழுவி விட்டு,…
Read more »
அன்பு மனுஷ் இது communication gap காரணமாக நிகழ்ந்த ஒன்று சுஜாதா பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளக் கேட்டுக்கொள்ளப்பட்டேன். அவரைப் பற்றி இரண்டு வாரம் முன்பு தான் வாசகசாலை கூட்டத்தில் விரிவாகப் பேசியதால் இங்கும் அதே உரையை நிகழ்த்த விரும்பவில்லை. சுஜாதா பற்றிப் பேசப் போவதில்லை என்று தொடக்கத்திலேயே அறிவித்தது அதனால் தான். பரிசு பெற்ற என் நண்பர்கள் சி.எஸ்,கே, ஷான் இவர்களுக்கு வாழ்த்துச் சொல்லித்தான் தொடங்கினேன். மனதில் இருந்து வரும் வாழ்த்து பத்து வினாடி நிகழும்போது…
Read more »