Archive For ஜூலை 31, 2017

New Short Story : The Stove : Era.Murukan (Published in July 2017 issue of The Wagon Magazine)

By |

New Short Story : The Stove  : Era.Murukan (Published in July 2017 issue of The Wagon Magazine)

The Stove (Short story – Era.Murukan) It all started at the school master Arumugam’s house. Early in the morning, Arumugam Master’s wife opened the door at the backyard of the house to throw away the malodourous water after rinsing the fish taken for cooking. It was then her elderly neighbour Bangaru entered with an empty…




Read more »

காந்தியை வரையப் போகிறவள்

By |

ஓவியக்காரி, சுவரில் சார்த்தி வைத்திருந்த, பாதி வரைந்த இரண்டு கான்வாஸ்களை எடுத்து வரைபலகையில் பிணைத்தாள். வலிய அப்பூப்பன் கேட்டார் : “யூ சூச்சி? யூ பரங்கிச்சி?” “வாட்?” “யூ ஆங்க்லோ இண்டியன்? யூ மிக்சர்?” “”எஸ், ஐ ஆம் சார்ட் ஆஃப் ஆங்க்லோ இண்டியன்”, ஓவியக்காரி சிரித்தபடி சொன்னாள். “யூ ப்ரகான்ஸ்? டிஸுஸா, வில்லிமஸ், டிகுஞ்ச்?” “நோ, ஐ ஷெர்கில்” “யூ ஹாலண்ட்? போர்துகல்? இங்க்லாண்ட்?” லூயி வலிய அப்பூப்பன் கேட்டார். “நாட் ஹாலண்ட், போர்ட்டுகல் ஆர்…




Read more »

மட்டன் பஸந்தும், விமோசன சமரமும், பாட்ரிக் லுமும்பாவும், சவிட்டுநாடகமும், கே.ஜெ. ஏசுதாசும்

By |

இன்றைக்கு மொழியாக்கியதிலிருந்து ஒரு சிறு பகுதி துறைமுகம் வந்ததும், இந்தியா வந்ததும், கேரளம் ஏற்பட்டதும், எரணாகுளம் ஜில்லா ஏற்பட்டதும் , லந்தன் பத்தேரியில் உயர் ஆரம்பப் பள்ளி, உயர்நிலைப்பள்ளி ஆனதும் ரூபாய், அணா, பைசாவுக்குப் பதில் நயாபைசா வந்ததும் எல்லாம் எப்படி என்று நான் அப்பூப்பனுக்கு எடுத்துச் சொன்னேன். மின்சாரம் வந்ததும், ரேடியோ வந்ததும், மசாலா தோசை வந்ததும், போஞ்ஞிக்கரை சர்ச்சில் முழங்கிய பழைய மணி போய்ப் புதியது வந்ததும், ‘ஜீவித நௌகா’ படத்தில் தொடங்கி, ஒன்றிரண்டு…




Read more »

அப்பூப்பனின் இடது கண்ணில் பார்வை குறைந்து வர, அவர் சிறிய மரச் சிலுவைகள் மட்டும் செய்து கொடுக்கத் தொடங்கினார்

By |

கடலில் படகு கவிழ்ந்ததும் அப்பூப்பனுக்கு தன் படைப்பாற்றல் பற்றிய கர்வம் அகன்றது. நைஜீரியாவில் அப்பூப்பன் படகு ஏதும் கட்டவில்லை. கிழக்கு ஆற்றின் அக்கரையிலுள்ள வடுதலையில் இருக்கும் தச்சர்கள் போல மேஜை, நாற்காலி போன்ற வீட்டு உபயோகத்துக்கான பொருள்களை ஈபோ இனத்தவர்களுக்காகச் செய்து கொடுத்தார். அப்பூப்பனின் இடது கண்ணில் பார்வை குறைந்து வர, அவர் சிறிய மரச் சிலுவைகள் மட்டும் செய்து கொடுக்கத் தொடங்கினார். பார்வை முழுக்க இழந்தபோது அவரை ஏசுசபைக்காரர்கள் முதியோர் இல்லத்தில் சேர்த்தார்கள். அங்கே இருந்துகொண்டு,…




Read more »

காசு வாங்கறது தண்ணிக்கு இல்லே, தோண்டற கிணத்துக்குத்தான்

By |

நான் மொழிபெயர்த்து வரும், திரு என் எஸ் மாதவனின் மலையாள நாவல் – இன்று மொழியாக்கியதில் ஒரு சிறு பகுதி : 1961-ல் லந்தன்பத்தேரியில் முதல் குழாய்க்கிணறை கோமஸ் வீட்டில் தோண்டினார்கள். முக்காலியும், மண்ணில் துளையிட்டுத் தோண்டும் யந்திரங்களும் எடுத்துக்கொண்டு எரணாகுளத்திலிருந்து வந்து சேர்ந்த கிணறு தோண்டுகிறவர்களைப் பார்க்க அண்டை அயலார்கள் கோமஸின் வீட்டு வராந்தாவிலும் முற்றத்திலும் கூடி நின்றார்கள். நான் கோமஸ் வீட்டிற்குள், ரோஸிசேச்சியோடும், டெய்ஸியோடும், நடாஷாவோடும் கூட, ஜன்னல் கம்பிகளில் முகத்தை வைத்துப் பார்த்தபடி…




Read more »

தச்சர் முன்னால் வந்தார், பாதிரியாரும், கோவில்பிள்ளையும் அடுத்து வந்தார்கள்

By |

நான் மொழிபெயர்த்து வரும், திரு என் எஸ் மாதவனின் மலையாள நாவல் – இன்று மொழியாக்கியதில் ஒரு சிறு பகுதி “மட்டில்டா, நான் உன்னை பயமுறுத்திட்டேனா? நீயும் மத்தேவுஸும், மகளும் நிம்மதியா வாழ்க்கை நடத்திட்டிருக்கற போது திடீர்னு வந்து தொந்தரவு கொடுத்திட்டேனா? நம்ம சர்ச்சிலே திருப்பலியும், பிரார்த்தனையும் எல்லாம் லத்தீன் மொழியிலே இருந்தாலும், இறுதிக் கருணை செய்யறது மலையாளத்திலே தான். நாற்பது வருஷமா நான் மலையாளம் பேசவே இல்லை. ஆனா, அந்த நாற்பது வருஷமும் சொப்பனம் கண்டது…




Read more »