Archive For பிப்ரவரி 28, 2018
அடுத்த நாள் செண்ட்ரல் மினிஸ்டர் பங்கேற்கும் லோன் மேளாவுக்கு முன் எங்கள் ஜெனரல் மேனேஜரை நன்றாகக் குழைந்து வெந்த அரிசி பதத்துக்கு ஆக்கிவிட்டேன். சட்டை கலர் என்னவாக இருக்க வேண்டும் என்பதிலிருந்து நான் தான் முடிவு செய்தேன். ‘என்ன பேசப் போறீங்கன்னு என் முன்னாலே ஒத்திகை பார்த்திடுங்க, அங்கே போய் ஏதாவது ஒண்ணுக்கு ரெண்டா சொல்லிடக்கூடாது’ என்று ஹோட்டல் அறை மத்தியில் நின்று பேசச்சொல்லி ட்யூஷன் எடுத்தேன். “சார், கொடவயிறு அதிகமா தெரியறது. தொந்தி குறைய தினம்…
புது நாவல் 1975 :எமர்ஜென்சி என்றால் ரயிலும் பஸ்ஸும் நேரத்துக்கு வருவதுவும், மலிவு விலைக்கு கிடைக்கும் ஜனதா அளவு சாப்பாடும் மட்டுமில்லை
By Era Murukan |
எழுதிக் கொண்டிருக்கும் நாவலிலிருந்து ஒரு சிறிய பகுதி முத்தாரின் குப்பி (அத்தை) ஜமீலாம்மா என் அத்தை விலாசினி டீச்சருக்குப் பள்ளித்தோழி. வாடி போடி உறவு. என்னடா, மெட்ராஸ்லே இருக்கேன்னு பேரு, முத்தார் வந்தாத்தான் நீ பார்க்க வருவியா? பெரிய மனுஷம் ஆயிட்டே போல”, ஜமீலா அத்தை அன்போடு கோபித்துக் கொண்டாலும், லக்னோ இனிப்பும் கசோரியும் கொண்டு வந்து கொடுத்தாள். லக்னோ யார் போனாங்க குப்பி? நான் தான் கேட்டேன். இவுக தான் என்று வாசலைப் பார்க்க குப்பி…
புது நாவல் : 1975 வைத்தியர் சிங்கம்புலி வேளார் சொல்லிட்டார், வீட்டுலே அந்நியர் படம் எதுவும் மாட்டக்கூடாது. சிவப்பே அண்டக்கூடாது. சிவப்புத் துண்டு, பேச்சு, புத்தகம்னு எதுவும் இருக்கக் கூடாது.
By Era Murukan |
”சிங்கப் படம் எழுதிக் காத்திருக்கறதை விட, மகாராஜா, மகாராணி இப்படிப் படம் வைச்சா இன்னும் விரசா அக்கி குணமாயிடும்னு சொன்னாரு வேளார்”. ஜெபர்சன் மனைவி அழுத்தந்திருத்தமாகக் கூறினார். அதே அழுத்ததோடு தான் தோழர் தலையில் பிரதமர் படத்தை வைத்திருக்கிறார் அவர். எமர்ஜென்சிக்கு முந்தைய மூக்கு நீண்ட கார்ட்டூன் அது. இப்போது அப்படியெல்லாம் வரைந்தால் மூக்கு முகம் இல்லாது போகும். பத்திரிகையும் காணாமல் போய்விடும். ”போன வாரம் ரொம்ப உக்கிரமா இருந்துச்சு கொப்புளம் கிளம்பி வரவர ஒரே வலி,…
புது நாவல் : 1975 :காண்டேகர் மட்டும் பார்த்திருந்தால் ஏன் உயிரை விட்டோம் என்று அவரும் காசியாப்பிள்ளையோடு கூடச் சேர்ந்து ஒரு பாட்டம் அழுதிருப்பார்
By Era Murukan |
யாராவது எங்கேயாவது சமீபத்தில் இறந்திருந்தால் அவர்களுக்கான துக்கதினம் என்று எளிய லாஜிக் இதன் பின்னணியில் உண்டு. ஆகஸ்டில் பின்னணிப் பாடகர் முகேஷ் இறந்ததற்காகத் துக்கம் அனுஷ்டித்தார்கள். செப்டம்பரில், மராத்திய எழுத்தாளரும், தமிழ் மொழிபெயர்ப்பில் பிரபலமானவருமான வி.எஸ்,கண்டேகர் மறைவுக்கு அடுத்த துக்கம் காத்தார்கள். இதெல்லாம் ஒரு சாக்கு தான் என்றும் அவர்கள் துக்கம் கொண்டாடியது இன்னும் எங்கும் நிறைந்து நிற்கும் எமர்ஜென்சி படுகொலை செய்த ஜனநாயகத்துக்குத்தான் என்றும் அவர்கள் அவ்வப்போது அக்கம் பக்கம் பார்த்துக்கொண்டு காதில் கிசுகிசுப்பார்கள். காண்டேகர்…
புது நாவல் : 1975 : உங்களுக்கு 20 அம்சம். எனக்கு மூணு தான். பிதா,சுதன்,பரிசுத்த ஆவி
By Era Murukan |
இடைக்காட்டத்தூர் சர்ச் ரோஜாப்பூ வாசனையில் அமிழ்ந்திருந்தது. சாமந்திப் பூ தூவிய பாதை சர்ச்சுக்குள் பிரார்த்தனை மேடை வரை அழகாகக் கோலம் போட்டு வைத்திருந்தார்கள். பாருக்குட்டி வேலை அது என்று சொல்லாமலேயே புரிந்துகொண்டோம். அவளுக்கும் அவள் அச்சனுக்கும் நோட்டீஸ் வைக்க காந்தி வாத்தியார் மறக்கவில்லை தான். சர்ச் நிறைந்து இருந்தது. மணவாளனின் நண்பர்கள் என்ற தகுதியில் எங்கள் குழுவுக்கு ப்ளாஸ்டிக் நாற்காலிகளைப் போட்டு உட்கார சர்ச்க்குள் பிரார்த்தனைக் கூடத்தை ஒட்டி, நடைபாதையோடு சேர்த்து இடம் ஏற்படுத்தி இருந்தார்கள். அங்கே…
இசக்கி என்பது ஒரு பெண்பெயர். இருபத்தைந்து வயதான, நல்ல உயரமான, களையான, கருத்துத் திரண்ட அந்தப் பெண் எங்கள் கம்ப்யூட்டர் கம்பெனி நான்காம் மாடியில் தனியார் நடத்தும் கேண்டீனில் காப்பி கலந்து தருகிறாள். ஆம்லெட் போடுகிறாள். தோசை சுடுகிறாள். போன வருடம் மிரள மிரள விழித்துக் கொண்டு வேலைக்கு வந்தவள் இசக்கி. ‘காப்பி கலக்கத் தெரியாதா?’ என்று சுதந்திரநாதன் வீராஸ் கேட்டார் அவளை. ‘காப்பி தெரியும், மிஷின் தான் தெரியாது’ என்றாள் இசக்கி. அது சமையலுக்கு வைத்திருந்த…