Archive For மார்ச் 6, 2018
Excerpt from the novel ‘1975’ being written உள்ளே மாஜி கவுன்சிலர் மேனேஜரிடம் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். “அதென்ன பாரதப் பிரதமர் பெயர் வச்சிருந்தா லோன் கொடுத்திடுவீங்களா? அதுவும் எப்படி? லேபில் நம்ம பிரஸ்ஸிலே தானே அச்சுப்போட வந்தாங்க. இந்திரா நல்லெண்ண, அதுவாவது பரவாயில்லே, சஞ்சய் விளக்கெண்ண. நம்ம தேசத் தலைவர்களை, சுதந்திரம் கிடைக்க செக்கிழுத்த மக்கள் தலைவர்களை அவமதிக்கிறது இது. ஒரு பெட்டிஷன் போட்டேன்னா நீங்க கூண்டோட ட்ரான்ஸ்பர் ஆகிடுவீக. நல்ல வேள, புரூப்பு…
புது நாவல்: 1975: அது ஒண்டிப்புலி இல்லே. ஒண்டிப்பிலி. நூறு புலி வலிமை அதுக்கு உண்டு
By Era Murukan |
மினி லோன்மேளாவில் மொத்தம் பத்து கடனாளர்கள். எட்டு பெண்களுக்கு தக்ளி, ராட்டை வைத்து நூல் நூற்க ஆளுக்கு ஆயிரம் ரூபாய். மீதி இரண்டு பேர் சுபாஷ் பஜாரில் கடை வைத்திருக்கிறவர்கள். ஒருவர் ஒண்டிப்பிலி வரதராஜநாயுடு. காலை முதல் ராத்திரி வரை இவர் கடையில் சர்பத் பிரசித்தமானது. ஊற வைத்த சப்ஜா விதை, கடல்பாசி, வேகவைத்த சேமியா, கடையில் ஊர்கிற எறும்பு, தெருவோடு போகிற யானை என்று சகலமானதையும் போட்டு மேலே ஒரிஜினல் ஒண்டிப்பிலி சர்பத் ஊற்றி அவர்…
புது நாவல்: 1975: சார் உங்களுக்கும் எனக்கும் பேங்கு வேலை தவிர வேறெதுவும் தெரியாது என்றேன். வாஸ்தவம் தாண்டா போத்தி என்றார்
By Era Murukan |
”ஆமா, உனக்கு என்ன எல்லாம் மீன் வகை இருக்கு, எவ்வளவுக்கு போகும் ஒவ்வொண்ணும்னு தெரியுமோ? நாளைக்கு மீன்பிடிக்க லோன் கொடுத்தா என்ன பண்ணுவே வசூல் பண்ண”? ஜெனரல் மேனேஜர் விசாரித்தார். ”ஒரு கவலையும் இல்லே சார், கடன் வசூலைப் பத்தி எதுக்கு கவலைப் படணும்? கொடுக்கறதுதான் முக்கியம்”. அவர் என்னை நிமிர்ந்து பார்த்துச் சிரித்தார். “நீ ஜி.எம் என்ன, மேனேஜிங் டைரக்டராகத்தான் ரிடையர் ஆகப் போறே” என்றார். “நீங்க தான் சார், உன்னதமான பொசிஷன்லே ரிடையர் ஆவீங்க”…