Archive For ஏப்ரல் 28, 2018

புது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி

By |

எழுதத் தொடங்கியிருக்கும் நாவலிலிருந்து ஒரு சிறு பகுதி (எடிட்டிங் செய்யப்பட வேண்டியது) லாரி. ரொம்பப் பழையது. ஏகத்துக்கு இரைகிறது. பென்ஸ் லாரியின் கியர் நடுவில் இசகுபிசகாகச் சிக்கி விடுவிக்கப்படும் ஓசை வேறே நாராசமாகக் காதில் விழுகிறது. சின்னச் சின்னப் புரைகளாக மரச் சட்டங்களை வரிசையாக நிறுத்தியிருக்கிறது. லாரி கடந்து போக, காற்றில் பலமான ஒச்சை வாடை. அது உயிரின் வாடை கூட. விரைவில் இல்லாது போகும் அது. வாடைபூசிய ஐம்பது நூறு கோழிகள் மரச்சட்டங்களில் அடைத்து வைக்கப்பட்டுப்…




Read more »

புதிது : எழுதத் தொடங்கியிருக்கும் அடுத்த நாவல் : ‘சிலிக்கன் சங்கப் பலகை’

By |

புதிது : எழுதத் தொடங்கியிருக்கும் அடுத்த நாவல் : ‘சிலிக்கன் சங்கப் பலகை’

நண்பர்களுக்கு அன்பான வாழ்த்துகள். ‘1975’ நாவல் மென்பிரதியாக, என் பதிப்பாளர்களான கிழக்கு பதிப்பகத்துக்கு அளிக்கப் பட்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறேன். நூல் அடுத்த சில மாதங்களில் வெளியாகும். மலையாள நாவல் ‘லந்தன் பத்தேரியிலெ லுத்தினியகள்’ – என் தமிழ் மொழியாக்கமான ‘பீரங்கிப் பாடல்கள்’ அடுத்த மாதம் (மே 2018) வெளியாகிறது என்பதையும் சந்தோஷத்தோடு அறிவிக்கிறேன். அடுத்து? “Pepper Chronicles’ ஆங்கில நாவல் பதினோரு அத்தியாயங்களில் நிற்கிறது. கொங்கண்-மலபார் கடற்கரைப் பிரதேசத்திலிருந்து தொடங்கிச் சென்னையையும் தொட்டுப் பார்க்கும்…




Read more »

My new short story in English – The hand pump, Gabriel Garcia Marquez and the bul-bul-tharang

By |

My new short story in English –  The hand pump, Gabriel Garcia Marquez and the bul-bul-tharang

The hand pump, Gabriel Garcia Marquez and the bul-bul-tharang – Era.Murukan At thirty minutes past midnight, the alarm clock started ringing. Saba got up and put it off in darkness. He was perspiring heavily. The blades of the ceiling fan were moving around so slow that he could distinguish them as they moved. Electricity had…




Read more »

லாஸ் வேகாஸ் – ரெட்டை நாயனம் வெண்பாக்கள்

By |

லாஸ் வேகாஸ் – ரெட்டை நாயனம் வெண்பாக்கள்

கிரேசி மோகன் – இரா.முருகன் தினசரி வெண்பாக்களில் இன்று – weird history -100 years ago, Las Vegas consisted of 38 buildings. Today it has more than 500,000. நாஸ்தியாய் பூமியின்றி நாலுலட்சம் கட்டிடம் லாஸ்வேகாஸ் பூராவும் ஸ்லாட்மெஷின் வாஸ்தவம் வாதாட நேரமில்லை வாரீர் விரைந்திங்கே சூதாடிச் சேர்ப்போம் பணம். இரா.முருகன் ***************************************************** ’’சூதாடி மாமாவால்(சகுனி மாமா) சொத்தாம் சகோதரரை(தர்மன் இழந்தார்) தீதால் துரோபதையைத் தோற்றிடும் -போதாடை(போது ஆடை) பாஸ்(கண்ணன்)பொழிந்து காத்தாரே…




Read more »

ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – சாக்கு உடுப்பு மர்லின்

By |

ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – சாக்கு உடுப்பு மர்லின்

மன்றோ வனப்பதனை மாநாடு தான்கூட்டி சென்றோத ஓர்யுகம் போதாதே – என்றைக்கும் யாக்கை நிலைக்காது யாண்டும் நினைவாகும் சாக்கை உடுத்த அழகு. இரா.முருகன் மன்றோ – மறைந்த ஹாலிவுட் நடிகை மர்லின் மன்றோ சாக்கை உடுத்தும் அழகு – உருளைக்கிழங்கு அடைத்து வந்த சாக்கு மூட்டையை மர்லின் மன்றோ உடுத்திக் கொண்டபோதும் அழகாகத் தெரிந்தார். ”டெர்லின் உடுப்பில், தறிகாட்டன் ஆடையில், மர்லின்மன் றோசினி மாமயக்கம் -பெர்லினின் ஹிட்லரே தோற்றிடுவார், HER-SELFஃபின்(மர்லின் மன்றோ) பேரழகு கட்லட் உருளைக் கிழங்கு’’….கிரேசி…




Read more »

ரெட்டை நாயனம் – வெண்பாக்கள் : நூற்றுப் பதினேழில் போயிந்தி இசைகேட்டு

By |

ரெட்டை நாயனம் – வெண்பாக்கள் : நூற்றுப் பதினேழில் போயிந்தி இசைகேட்டு

கிரேசி மோகன் – இரா.முருகன் வெண்பாக்கள் பூஜியாமா தப்பித்து பூமிக்கு நீதியின்றி யோஜியாது பாம்போட்டு நாகசாகி மாஜிசெய்யா ஆயுசும் கெட்டியொரு நூறும் பதினேழும் போயிந் திசைகேட்கப் பார். இரா.முருகன் 23-04-2018 பூஜியாமா தப்பித்து – பூஜியாமா எரிமலை வெடித்துத் தீக்குழம்பு பொங்கியபோது உயிர் பிழைத்து யோஜியாது பாம்போட்ட நாகசாகி – அமெரிக்கா 1945-ல் அணுகுண்டு போட்ட ஜப்பானிய நகர் நாகசாகியில் இருந்தும் மாஜி (லேட்) -காலமாகாமல் தப்பித்து ஆயுசு போயிந்தி இசை கேட்டு – யாரோ கித்தாரும்…




Read more »