Archive For ஏப்ரல் 23, 2018

புதிது : இன்றைய இரட்டை நாயனம் வெண்பாக்கள் – கிரேசி மோகன், இரா.முருகன்

By |

புதிது : இன்றைய இரட்டை நாயனம் வெண்பாக்கள் – கிரேசி மோகன், இரா.முருகன்

நானும் நண்பர் கிரேசி மோகனும் தினமும் ஏதாவது ஒரு செய்தியை அல்லது தகவலை அடிப்படையாக வைத்து வெண்பா பரிமாறிக் கொள்வோம். இவை இன்றையவை, மாமிச வேடம் மரக்கறி போட்டாலும் தாமிசைந் துண்ணத் தகாதுகாண் – சாமீ வெஜிடபில் புல்லாவ் பிரியாணி குர்மா புஜிக்கத் தடையாம் அறி. இரா.முருகன் 22-04-2018 க்ரிஸ் கெய்ல் – ப்ரவோ – ராயுடு மோகன் சாத்துசாத்தென்று சாத்தும் ’இன்றைய இரட்டை நாயனம்’ வெண்பாக்கள் ’கூறும்உம் பேரென்ன! காஷ்மீர் புலவனென்று சோறென்ன சாயரட்சை சாப்பிடுவீர்…




Read more »

புதிய சிறுகதை ‘மயில் மார்க் குடைகள்’ (முழு வடிவம்) இரா.முருகன்

By |

புதிய சிறுகதை  ‘மயில் மார்க் குடைகள்’ (முழு வடிவம்) இரா.முருகன்

மயில் மார்க் குடைகள் இரா.முருகன் எட்டு மணிக்கே வந்தாகி விட்டது. ரிகார்டிங்க் ஸ்டூடியோ என்று விலாசம் கொடுத்திருந்தாலும் அது குடியிருக்கும் வீட்டில் திரை போட்டு மறைத்த, சுவரில் பஞ்சு ஒட்டிய அறைதான். மரத்தடுப்புக்கு அப்பால் பழைய க்ரண்டிக் ஸ்பூல் டேப் ரெக்கார்டரை நடுநாயகமாக வைத்து ஒரு மேஜை இருந்தது. துருப் பிடித்த மைக் ஒன்று தடுப்புக்கு இப்பக்கம் தரையில் நின்றது. மூடி வைத்த ஜன்னல் விளிம்பில் பழைய தெலுங்கு செய்தித்தாள் தூசி படிந்து அடுக்கியிருந்தது. சத்தம் எழுப்பிக்கொண்டு…




Read more »

My new short story in English – The Polymorph : The Wagon Magazine March 2018

By |

My new short story in English – The Polymorph : The Wagon Magazine March 2018

The Polymorph Era.Murukan When we reached the library, we saw the corridor leading to the doors strewn with wrinkled wet feathers, like a rain soaked trail of a debilitated eagle on its swan song flight. A small crowd of inquisitive bystanders stood bolt upright at the street corner where the road takes a turn to…




Read more »

புதிது: நாவல் 1975 முன்னுரை:வாழ்க்கையை ஓரளவு பிரதிபலித்து அதில் வண்ணம் கலக்க ஒரு முயற்சி இந்தச் சிதறுண்ட கதை கூறுதல்.

By |

1975 நாவல் -முன்னுரையிலிருந்து ஒரு பகுதி தன் வரலாறும் புனைவும் கலந்த பயோபிக்ஷன் நெம்பர் 40, ரெட்டைத்தெரு, தியூப்ளே வீதி என்ற இரு நாவல்களாக வெளிவந்ததும் அந்த உத்தியை இன்னும் சற்று நீட்சி அடைய வைத்து, புனைவின் சுதந்திரமும், வரலாற்றின் நிகழ்ந்ததை நிகழ்ந்ததாகக் காட்டும் தகவல் துல்லியமும், ஒருங்கமைதியும், செறிவுமாக ஒரு படைப்பு எழுதிப் பார்க்கத் தோன்றியது. வழக்கம் போல் சிறுகதைப் பொறியைக் கற்பனை ஊதிப் பற்ற வைக்க அது, படர்ந்து பரவிய நாவல் நெருப்பானது. 1970-களில்…




Read more »

புதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது.

By |

எழுதி நிறைவு செய்த என் அடுத்த நாவலான ‘1975’, எடிட்டிங்கில் இருக்கிறது. மூன்றாம் முறையாக முழுக்கப் படித்து, கதைப்போக்கு, எழுத்து, சொல், வாக்கிய அமைப்பு போன்றவற்றை சரிபார்த்துக் கொண்டிருக்கிறேன். நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், நீக்கம், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல், இணைத்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என் ஆருயிர் நண்பர் கிரேசி மோகன் வழக்கம் போல் நாவலின் முதல் பி.டி.எஃப் பிரதியைப் படித்து முதல் விமர்சகராக தினசரி தொலைபேசி, கருத்தும், மேம்படுத்த யோசனையும்,…




Read more »

புதிது: நாவல் 1975: ‘எமர்ஜென்சி கீதங்களுக்கு என்னவெல்லாம் உபயோகம்!

By |

வெளிவர இருக்கும் என் நாவல் ‘1975’ – ஒரு சிறு பகுதி ஆகஸ்டில் பின்னணிப் பாடகர் முகேஷ் இறந்ததற்காகத் துக்கம் அனுஷ்டித்தார்கள். செப்டம்பரில், மராத்திய எழுத்தாளரும், மொழிபெயர்ப்பில் தமிழர்களிடையே பிரபலமானவருமான வி.எஸ்,கண்டேகர் மறைவுக்கு அடுத்த துக்கம் காத்தார்கள். இதெல்லாம் ஒரு சாக்கு தான் என்றும் அவர்கள் துக்கம் கொண்டாடியது இன்னும் எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கும் எமர்ஜென்சிக்காகத்தான் என்றும் அவர்கள் அவ்வப்போது அக்கம் பக்கம் பார்த்துக்கொண்டு காதில் கிசுகிசுப்பார்கள். காண்டேகர் துக்க தினக் கூட்டம் என்று அறிவித்து…




Read more »