Archive For ஜூன் 29, 2018
வெளிவர இருக்கும் என் அடுத்த நாவல் ‘1975’-இல் இருந்து ஓர் அத்தியாயம் அத்தியாயம் 20 பிப்ரவரி 1977 மூத்த அமைச்சர் ஜகஜீவன்ராம் இந்திரா அரசில் இருந்து ராஜினாமா செய்த புதன்கிழமை காலை நேரம். பேங்க் கவுண்டர் திறக்கக் காத்திருந்த ரிடையர்ட் பட்டாளக்காரர் ஸ்க்வாட்ரன் லீடர் அமர்ஜித் சிங், கவுண்டர் மேல் வைத்திருந்த ப்ளாஸ்டிக் தட்டில் இருந்து ஒவ்வொரு குண்டூசியாக எடுத்துப் பொறுமையாகத் தன் தலைப்பாகையில் குத்திக் கொண்டிருந்தார். வாடிக்கையாளர்களின் அடையாளக் கையெழுத்துகள் கொண்ட ஸ்பெசிமென் சிக்னேசர் காகிதங்களைத்…
நெய்மார் விளையாடும் நேர்த்த பிரஸீலா பையன்மார் கோல்போடும் ஜெர்மனியா வையாது ஆடிக் கெலித்திடும் அர்ஜண்ட்னா யார்வெல்வார் தேடி அலைந்தேகும் பந்து. இரா.முருகன் 1/2 யாரோடும் புத்தம் புதுநட்பு பேணாதீர் ***பார்போய் அழகி படுக்கையில் சேராதீர் பேணிவைப்பீர் பாஸ்போர்ட் பணம்பொன்னும் ரஷ்யாவில் காணவாரீர் ஃபீஃபா களிப்பு இரா.முருகன் 2/2 ***பார்போய் – going to the bar (pub) ————————————————————- கோல்நானார் கண்டு கடவுளை கோல்போஸ்ட்டில் சந்திப்பாய் – பால்போடும் ரெஃப்ரி பரந்தாமர்: -கால்பந்து வேல்முருகர் மாமனின் வீர…
This story is from the anthology இரா.முருகன் கதைகள் உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டி FIFA 2018 (Russia) சிறப்புப் பதிவு பந்து இரா.முருகன் ———————– கோஷ்பாபு விருந்துக்கு வந்த ராத்திரி தான் ஏலிக்குட்டி பொரித்த மீனும், மிளகூட்டானும், புளி இஞ்சியும் உண்டாக்கியது. உலகக் கோப்பை கால்பந்தாட்ட அரையிறுதிப் போட்டியில் பிரேஸில் ஸ்வீடனை கெலித்த கோடைகால ராத்திரி அது. விளையாட்டு தொடங்கி எண்பதாவது நிமிஷத்தி, வலந்தரையிலிருந்து ஜார்ஜின்ஹோ மடக்கித் திருப்பிவிட்ட பந்தைத் தலையால் தாழ முட்டி,…
பந்து – 1 கோஷ்பாபு விருந்துக்கு வந்த ராத்திரி தான் ஏலிக்குட்டி பொரித்த மீனும், மிளகூட்டானும், புளி இஞ்சியும் உண்டாக்கியது. உலகக் கோப்பை கால்பந்தாட்ட அரையிறுதிப் போட்டியில் பிரேஸில் ஸ்வீடனை கெலித்த கோடைகால ராத்திரி அது. விளையாட்டு தொடங்கி எண்பதாவது நிமிஷத்தில், வலந்தரையிலிருந்து ஜார்ஜின்ஹோ மடக்கித் திருப்பிவிட்ட பந்தைத் தலையால் தாழ முட்டி, ரொமாரியோ கோல் போஸ்ட்டை அதிரடித்த அந்த உக்ரன் கோலை, லேசில் மறக்க முடியுமா? ஓராயிரம் தடவை மாப்பு சோதிக்கிறேன். இதுதான் என்னிடத்தில் ஒரு…
ஜூன் 2018 குமுதம் தீராநதி இதழில் வெளியான பகுதியில் இருந்து இரா.முருகன் : உங்களுடைய இந்த அனைத்துச் சிறுகதைகளைப் பற்றியும் ஒற்றை வாக்கியத்தில் சொன்னால், மலையாள, ஏன் இந்திய இலக்கியத்தில் சிறுகதை என்ற வடிவம் நசிந்து தேயும் காலகட்டத்தில் அதற்குப் புத்துயிர் ஊட்ட வந்தவை இவை. பத்தாண்டு எழுதாமல் இருந்து எழுத வந்தபோது கதையாடலிலும் கதைக் கருவிலும் ஏற்பட்ட மாற்றம் உங்களை மட்டும் பாதிக்கவில்லை, ஒரு மொழியின் இலக்கியத்தையே பாதித்திருக்கிறது. உங்கள் எழுத்தை விரும்பி வாசிக்கும் வாசகர்கள்…
10.06.2018 காமதேனு வார இதழில் பிரசுரமாகியுள்ளது தேங்காய் ரம் இரா.முருகன் முன்பனிக்கால சனிக்கிழமை சுகமான வெய்யிலோடு விடிந்தது. நடு ராத்திரிக்கு அப்புறம் தூங்கியது போதுமானதாக இல்லை என்று உடம்பு புகார் செய்தது. நேற்று தாகசாந்தி கொஞ்சம் அதிகம். அருணன் வருவதாக உறுதியளித்து, கடைசி நேரத்தில் ஃபோன் செய்து வருவதற்கில்லை என்று சொல்லிவிட்டான். அவனுக்காக வாங்கி வைத்த தேங்காய் ரம் என்ற வினோதமான திரவத்தை முழுக்க அருந்த நான் மட்டும் தான் இருந்தேன். அப்புறம் தான் கஸ்டமர் நாதமுனி…