Archive For ஜூன் 8, 2018
அந்திமழை ஜூன் 2018 இதழில் பிரசுரமானது மாது என்றொரு மானுடன் இரா.முருகன் நடுராத்திரி கழிந்து ராத்திரியா காலையா என்று தீர்மானிக்க முடியாத மூன்றே கால் மணிக்கு மாது வந்து சேர்ந்தான். எங்கள் அடுக்கு மாடிக் குடியிருப்பில் இருக்கும் எல்லாக் குடித்தனங்களும் மட்டுமில்லாமல், அயல் குடித்தனங்கள், எதிரே ஆவி எழுப்பும் ஜெபக் கூடத்தில் சகோதரர் புன்னோஸ் வடக்கன், எலிசபெத் டெய்லர் தையல்கடைக்குள் தூங்கும் காஜா போடுகிற பையன் சமஷ்டி, தெருக்கோடி சைக்கிள்கடை சுந்தரேசக் குருக்கள் என்று எல்லோரையும் எழுப்பும்…
நாசி குறைந்தவர் நாடி அணிந்திட்டு வாசிக்கக் கீழே நழுவுமே யோசியாது ஆப்டிக்ஸில் வாங்கியணி அல்டிமேட் கண்ணாடி சேஃப்டிபின் மூக்கில் நுழைத்து இரா.முருகன் https://t.co/cxnUMDc3xV சைனாவின் ஸ்பெக்ஸை சரிபார்க் கபோட்டயென் நைனாவின் நாசிஎகிப்து நாசர்போல்- ஒய்நாட்(WHY NOT)யென்(று) ஆயா கொடுத்த அரணா கயிறுபின்(PIN)னால் சாயாது(கண்ணாடி) வாசம் சகித்து’’….கிரேசி மோகன்….! ஏழுபெண் வீட்டிலே ஏதோ பரபரப்பு பாழும்பேன் நீள்கூந்தல் பற்றியுள் வாழுதாம் சோப்பிட் டொழிக்கலாம் வாரிச் சிடுக்கெடுக்க சீப்பெங்கே போனது சொல் இரா.முருகன் https://t.co/qPpFp7bihc அஞ்சுபெண் பெத்தவர் ஆண்டியாம் ,ஆதலால்…
ஆனை விளையாட்டுக்கு அழைத்தாள் பேத்தி. ஆனை வரணும் ஆனை வரணும் அடுத்த குடித்தனப் பாப்பா சொன்னது. துணி உலர்த்தக் கொடியில் பிணைக்கும் க்ளிப் இரண்டை முடியில் சூடித் தவழ்ந்து வந்து தலை உயர்த்தி ஆடலாம் என்றது ஆனை. ஆனை தின்னப் பொரி கொடுத்தாள், ”ஆனை, எனக்கு பிஸ்கட் தா” அம்மா கவனம் தவிர்த்து பிஸ்கட் ஆனை கொடுக்கப் பேத்தி மென்றாள். ”அவளுக்கும் ஆனை பிஸ்கட் தரணும்” அடுத்த வீட்டுப் பாப்பாவைக் காட்டினாள். ஆனை எழுந்து பிஸ்கட் கொடுக்க…