Archive For டிசம்பர் 31, 2018
என் கிண்டில் மின்நூலான ’ஏதோ ஒரு பக்கம்’ – ஒரு சிறிய பகுதி பயண இலக்கிய பஜனை பயண இலக்கியம் எழுத சென்ஸ் ஆப் ஹ்யூமர், கொஞ்சம் பேங்க் பாலன்ஸ், விக்ஸ் இன்ஹேலர், எலாஸ்டிக் போகாத ஜட்டி, எழுதியதை பிரசுரம் செய்ய பதிப்பகம் எல்லாம் தேவை. பால் தோரோவும் பில் பிரைசனும் இந்த விஷயம் அத்துப்படியான காரணத்தால் உலகத்தைச் சுற்றி வந்து சந்தோஷமாகச் சில்லறை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். சீனியரான பால் தோரோ ஒரு ரவுண்ட் முடித்து அடுத்த…
இது அதிவேகத் தகவல் பரிமாற்றங்களின் நூற்றாண்டு. வாசிப்பு வசப்பட்ட வாசகர்கள் பெருகும் நூற்றாண்டு இது. இந்த நூற்றாண்டின் வாசகர்கள் புத்தகம் வாங்குவதை வீண் செலவாகக் கருதாதவர்கள். நல்ல நூல்களைத் தேடிப் படிக்க, அவை பற்றிய தகவல்களைப் பரிமாற, சமூக ஊடகங்களைத் தீவிரமாகக் கைக்கொள்கிற வாசகர் வட்டம் இது. இருபத்தொன்றாம் நூற்றாண்டின் வாசகர்களுக்கு புத்தகங்கள் தாம் பிரச்சனை. குடும்ப உறவால் பிணைக்கப்பட்ட இருபது முப்பது பேர் சேர்ந்து வாழ்ந்த கூட்டுக் குடும்பங்கள் போன நூற்றாண்டின் தொடக்கத்தில் வழக்கொழிந்து போக,…
கச்சேரி நடந்து முடிந்து கலைஞர்கள் வெளிவந்து கொண்டிருந்தார்கள். உப – பக்க வாத்தியக் கலைஞர் எனக்கு நல்ல நண்பர். பாட்டுக்கு இயைந்தும், ’தனி’ நேரத்தில், நிறைவாக வாசித்து தாளப் பந்தல் வேய்ந்தும் ரசிகர்களின் கரவொலி பெற்றிருந்தார். என்ன கொஞ்சம் தாங்கித் தாங்கி நடக்கறீங்களே என்று விசாரித்தேன். ‘ஆமா சார், கால் மரத்திருக்கு… muscular cramps .. இன்னும் கொஞ்ச நேரத்திலே சரியாயிடும்’ என்றார் அவர். இரண்டு நாள் முன் பாடிய இரு சிறுமிகளில் ஒருத்தி மேடையில் கால்…
கேட்விக் வெண்பா மூன்று லண்டன் கேட்விக் விமானதளம் ஹீத்ரு ஏர்போர்ட்டுக்கு அடுத்தபடி நிறைய ஃப்ளைட்களை கையாள்கிறது. பரபரப்பான கிறிஸ்துமஸ் விடுமுறை நேரத்தில் கேட்விக் ஏர்போர்ட்டை ஒன்றரை நாள் முழுக்க அடைத்து வைக்க வேண்டி வந்தது. யாரோ, எங்கிருந்தோ ட்ரோன்களைப் பறக்க வைத்து விமான தளத்தின் கட்டுப்பாடு பிரதேசத்தில் அவற்றை வட்டமிட வைத்து விமானப் போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்து விட்டார்கள். இனி இது போல் நடக்காமல் தடுக்க, தொழில்நுட்ப வழியாகத் தீர்வு காண்பதோடு, எளிய தீர்வுகளையும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்….
பிரபஞ்சன் காலமானார். புதுவை எனக்கு இனி நான் நடமாடிய தியூப்ளே வீதியாகவும், ரங்கப்பிள்ளை தெருவாகவும், படித்த தாகூர் கலைக் கல்லூரியாகவும், நடந்த குயில் தோப்பாகவும், சைக்கிள் ஓட்டிப் போன சித்தாந்தசாமி திருக்கோவிலாகவும், மணக்குள விநாயகர் கோவிலாகவும், சான் பால் தேவாலயமாகவும் மட்டும் இருக்கும். அன்பு நண்பர் பிரபஞ்சன் இனி அங்கே இல்லை. அவர் நினைவுகள் மட்டும் மிஞ்சும். கடைசியாக அவரை ஞானக்கூத்தன் இறுதிச் சடங்கு நேரத்தில் சந்தித்தேன். அடைத்த ஒரு வீட்டுக் கதவுக்கு வெளியே உட்கார்ந்து அதுவும்…
வெளியிட இருக்கும் என் அடுத்த நாவலான 1975 (எமர்ஜென்சி கால கட்டத்தில் நிகழ்வது) – ஒரு சிறு பகுதி ————————————————————————————————————— காண்டேகர் துக்க தினக் கூட்டம் என்று அறிவித்து விவேகானந்தா ஆரம்பப் பள்ளியில் ஏழெட்டு பெஞ்சுகளை இழுத்துப் போட்டு மூன்றாம் கிளாஸ், நான்காம் வகுப்புக்கு நடுவே இருந்த ஸ்கிரீன்களை நகர்த்தி விட்டு இடம் ஏற்பாடு செய்து கூட்டம் நடத்தினார் சிங்கம்புலி. கூட்டத்தில் எத்தனை பேர் காண்டேகர் கதைகளைப் படித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. “போத்தி, நீங்க காண்டேகர் பத்தி…