Archive For டிசம்பர் 12, 2019
நுழையும்போதே சல்யூட் அடித்த காவல்காரர் சின்னச் சிரிப்போடு அப்புறம் கொடுங்க என்றார் நக்கலான சென்னைச் சிரிப்பில்லை நேசமான செட்டிநாட்டுப் புன்னகை. அந்தக்கால சோவியத் நாட்டு ஏரோஃப்ளோட் விமான சேவையில் கண்டிப்பான உபசரிணிபோல் ஓவர்கோட் பெண்கள் வாழை இலைவிரித்த மேசைமுன்னே இருந்துண்ண இடம் சுட்டினர். உளுந்து வடையா உழுந்து வடையா பட்டிமன்றம் நீண்டுபோக வேகம் உண்ணும் நான் பார்த்த நாலு பேரும் இன்னும் தொலைவில் ஒரு சிலரும் மென்றபடிக்கிருந்தது வடைகளே என்ன வேண்டும் சொல்லும்முன் எனக்கும் கொணர்ந்தார் வடைகள்…
மறதி குறித்த மனக் குமைச்சலோடு வார இறுதிக் காலை விடிந்தது. வெண்பாப் போட்டியில் வென்றாருக்கு வாக்குத் தத்தம் செய்தபடி ரெவ்வெண்டு போத்தல் கேரளப் படைப்பு புளியிஞ்சி வாங்கி அனுப்பினேனிலன் இஞ்சியோடு கண்ணாடிச் சில்லும் ஊறுகாயாவதாய் படித்ததாலஃது. சொல்ல மறந்தேன் சேதி எவர்க்கும். பாண்டி பஜார் பாலாஜி பவனத்தில் ஊரே ருசிக்கும் காப்பி அருந்த அழைப்பு விடுத்தேன் நண்பர் கவிஞர்க்கு அழைப்பை மறந்து அசோகநகர் குடிபெயர்ந்தேன். நிகனொர் பர்ரா அகவிதை என்றவர் போக. ஊர்தி என்று இலக்கிய சஞ்சிகை…
அப்புறம் ஒரு நாள் பார்க்கலாம் என்று காணாதிருந்த கல்லூரித் தோழி நேற்று மறைந்த செய்தி வந்தது. இத்தனை ஆண்டுகளில் எத்தனை முறை நினைத்துக் கொண்டேன் அவளை? ஒருதடவை ராப்பகல் மயங்கி நீளும் விமானப் பயணத்தில் ஞாபகம் வந்தாள்; பக்கத்து இருக்கையில் அவள் ஜாடையில் யாரோ உறங்கியபடிக்கு. வேம்பநாட்டுக் காயலில் மழை வந்த பிற்பகலில் படகேறி கடல் முகத்தில் திரும்புகையில் கடல் பறவை கூவலோடு அவள் குரலும் எழுந்து தேய்ந்தது அருகே நகரும் படகிலிருந்து. பனிபொழியும் காலைநேரம் பிழைக்கப்போன…
Season 3 of the British royal biopic The Crown is on Netflix now. // From the promo material – Olivia Colman succeeds Claire Foy as Queen Elizabeth II in season three of Netflix’s royal biopic. Following Foy’s Emmy best actress win for her role in the Netflix drama, expectations are high for Oscar winner Colman’s…
வாசகசாலை நண்பர்கள் நாளை மாலை நடத்த ஏற்பாடு செய்திருக்கும் என் ‘நண்டு மரம்’ சிறுகதைத் தொகுப்பு பற்றிய கலந்துரையாடலுக்கு நண்பர்களை வரவேற்கிறேன். அழைப்பிதழ் இணைத்துள்ளேன். To set the context, அந்தத் தொகுப்பின் முன்னுரையிலிருந்து – இது என் பத்தாவது சிறுகதைத் தொகுப்பு. சிறுகதையிலும் குறுநாவலில் மும்முரமாக இயங்கிய 1990-களுக்கு அப்புறம் நாவலில் கவனம் குவிந்த கடந்த பனிரெண்டு ஆண்டுகளில் எழுதப்பட்ட சிறுகதைகள் இவையெல்லாம். அனேகமாக எல்லாக் கதைகளுமே பத்திரிகைகள் கேட்டு வாங்கிப் பிரசுரித்தவை. இந்தப் பத்திரிகைகளில்…
An excerpt from the stage play ‘Chaavadi’ காட்சி 5 காலம் காலை களம் வெளியே (கொத்தவால் சாவடி) வக்கீல் அய்யங்காரும் அவர் நண்பர் ஹெட் கான்ஸ்டபிள் நாயுடுவும் மெல்ல நடந்து வருகிறார்கள். கட்டி வைத்த வண்டித் தட்டில் காய்கறிப் பையை வைத்து விட்டு அங்கவஸ்திரத்தால் நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொள்கிறார் அய்யங்கார். நாயுடு வேட்டியை மடித்துக் கட்டியபடி கூட நிற்கிறார். அய்யங்கார்: எத்தனை பேர் அவுட்? இங்கிலீஷ் பத்திரிகையிலே அஞ்சுங்கறான்.. கூட நாலு சைபர்…