Archive For ஜூலை 8, 2019
ராத்திரியில் லாரி வந்து நிற்க இந்திக் குரல்கள் உரக்கக் கேட்டால் டில்லி பகதூர் ஏலக்கடை எல்லா வருடமும் வருவதுபோல் எங்கள் தெருவுக்கு வந்தாச்சு நாளை காண நிறையக் கிடைக்கும் விட்ட இடத்தில் உறக்கம் தொடர்வோம் சொல்லி வைத்தாற்போல் ஏலக்கடை வருடம் தோறும் வருவது எங்கள் அரைப் பரீட்சை டிசம்பரில் முடித்து விடுமுறை விட்ட நாட்களில் இருக்கும். ஏலக் கடையில் எழுதும் கணக்கும் இந்தி நம்பராம் நம்போல் இல்லை தலையில் நீலத் தலைப்பாகை வைத்த நானா என்னும் பெரியவர்…
ஞானம் தேடி வேறெங்கும் போகாமல் பள்ளி வாசலில் தடுத்தாட்கொண்டது வழக்கம் போல் போஸ்ட்மேன் சின்னி கிருஷ்ணன் தான். பள்ளிக்கூட வாசலில் பார்த்து சைக்கிளைக் குறுக்கே நிறுத்தி லெட்டர் இருக்குது வாங்கிக்க என்றார் வீட்டு வாசலில் கடிதம் தருவது தவிர விருப்பமான சர்வீஸ் ஆக வந்த கடிதம் தருவது இங்கெலாம் – கொல்லைக் கதவைத் தட்டி திருச்செந்தூர் இலைவீபுதி பிரசாத கவர் தெருமுனையில் நிறுத்தி யாரோ போய்ச்சேர்ந்த கருப்பு தபாலட்டை லைபிரரிக்குள் துரத்தி வந்து அடுத்த மாதம் அத்தங்காள்…
கிரேசி கொண்டாட்டம் பத்து வருடம் முன்னர் சுஜாதா நினைவேந்தல் கூட்டத்தில் பங்குபெறப் போனபோது கிரேசி மோகன் என் நண்பரானார் என்று எழுத நினைத்தால் கை வரமாட்டேன் என்கிறது. அந்த நிகழ்ச்சியில் சந்தித்தபோது காலம் காலமாக நெருங்கிய நண்பராக இருக்கும் ஒருவரை எத்தனையாவது முறையாகவோ வழியில் பார்த்துப் பேசும் நினைப்பு தான். 1984-இல் தில்லியில் இருந்து சென்னைக்குப் பணியிட மாற்றத்தில் வந்தபோது எனக்குப் பொழுதுபோக்கு என்றால் திரையில் மைக் மோகன், நாடக மேடையில் கிரேசி மோகன். விரைவிலேயே முதல்…
விடிகாலையில் வாசல் திண்ணையில் விட்டெறிந்த இந்து பேப்பரால் என்னை எழுப்பிய நல்லையாவுக்கு இந்தக் கவிதை சமர்ப்பணம். எதிரே கிரிவீட்டில் காலையில் தினமும் இந்து பேப்பரும் தினமணியும் வரும் விகடன், கல்கி, குமுதம் என்று வாராவாரம் இதழ்கள் தவிர சுவராஜ்யா என்னும் ஆங்கில இதழும் மாதக் கடைசியில் பவன்ஸ் ஜேர்னலும் மாதா மாதம் கலைமகள், அமுத சுரபியும் மாதம் இருமுறை பேசும் படமும் விசையொடு நல்லையா வீசிப்போக வருவது கண்டு மலைத்திருப்பேன் நான். தெருமுனை வீடு டைப்பிங் இன்ஸ்டிட்யூட்…
தில்லிக் குளிர்காலம் வாடைகளின் காலம் மூக்குச் செத்தால் சொர்க்கம் புலப்படாது முன்பே சொன்னேன் பின்னே வையாதீர். நவம்பர் தொடக்கம் முன்னிரவதனில் காற்று அடர்ந்து காதுகள் குறுகுறுக்க வரலாமா என்று குளிரொன்று கேட்கும். இந்த வருடம் பனிவிழும் என்பார் பண்டு எப்போதோ பார்க்கக் கிடைத்தவர் நினைவும் கனவும் இட்டுக் கலக்கிய பழைய காலம் பங்கு வைத்து தேநீர் பருகிக் கம்பளி தேடுவர். மூடுபனியாய் மெல்லப் பரவி ஆளில்லாத தெருக்களில் கவிந்து பார்வை மறைத்து காலை புலரும். பச்சுப் பச்சென்று…
இசை இரா.முருகன் மதி ரைஸ் குக்கரை ஆன் செய்தபடி மெல்லிய குரலில் பாட ஆரம்பித்தாள் – ”அழகின் நிலா கலை அழகின் நிலா அன்பின் கடலாட வந்ததுவே உலா..” நின்று பெய்யும் மழை போல மனதில் பொழிந்து விட்டுப் போய்த் திரும்பி வரும் பாட்டு அது. ராஜு மாமா போன தடவை மாமியை செக் அப்புக்குக் கூட்டி வந்தபோது, சாப்பாடு முடிந்து கரெண்ட் இல்லாமல் போன ராத்திரியில் பால்கனியில் உட்கார்ந்து இந்தப் பாட்டைப் பாடினார். நிலவு வெளிச்சத்தில்…