Archive For ஜூலை 2, 2019
சின்னஞ் சிறுவராய் இருந்த காலம் திருவிழாக் கடைகளில் வருடா வருடம் வாங்கி அணிந்தோம் நீலமும் பச்சையும் நிறங்களாய் வந்த ப்ளாஸ்டிக் கண்ணாடி திருவிழா முடிந்த ராத்திரி தூக்கத்தில் தனித்தனியாய் உதிர்ந்தது ஓர்முறை கோவில் வாசலில் உறங்கிக் கிடந்த வணிகனைக் காலையில் எழுப்பிக் கேட்டால் அடுத்த வருடம் வருவேன் தருவேன் என்றான் பீடிபுகைத்து அரையில் சொறிந்து ஐம்பது காசு தண்டம் உன்னால் கருத்தாய் எதையும் வச்சுக்கத் தெரியலே தோசை வார்த்தபடி திட்டிய பாட்டி தோசியென்றாள் அன்றைக்கு என்னை யோசிக்கின்றேன்…
பண்டொரு காலம் கற்கண்டாக ஊருணி தளும்பும் ஆரஞ்சு நீருண்டு அவ்வளவாகப் பழையதல்லாத அனுமர் கோவில் கரையிலுண்டு சில்லென்ற காற்றில் மேகங்கள் ஏறி சின்னக் குயில்கள் பாடுவது கேட்கும். கோவில் பின்னால் நந்தவனத்தில் துளசி மணக்கும்; மடைப்பள்ளிக்குள் வடைக்கு எண்ணெய் காயும் வாசனை. எந்தக் காலமோ யாரோ எங்கோ சொல்லின் செல்வன் நைஷ்டிக பிரம்மன் அனுமரை ஆக்கினர் பட்சணக் கடவுள் அதிலிருந்து ஆராதனைக்கு எடுப்பது வடைகள் மாலையில் தொடுத்து; லட்டு உருண்டையும் சிலநாள் படைப்பர். புளிக்காத தயிர்சோறு திராட்சையிட்டு…
நூறு வருடப் புத்தகம் அடுக்கி நீளநெடுக்க மர அலமாரிகள்; இருந்து படிக்கக் கால்கள் உடைந்த இருக்கைகளோடு நூலகம் கிடக்கும். சின்னப் பையன்கள் வருவது பார்த்து அரபு இரவுகள் ஆயிரமும் அவசரமாய் மேல்தட்டேறி ஒளிந்து கொள்ளும் ஏற முடியாத கடைசி ஒண்ணு பொலபொலவென்று பேப்பராய் உதிரும். அநுத்தமாவும் ராஜம் கிருஷ்ணனும் லஷ்மியும் குகப்ரியையும் கிருத்திகாவும் கு.ப.சேது அம்மாளும் குமுதினியும் சூடாமணியும் வைத்த அலமாரியில் வல்லிக்கண்ணனும். அடிக்கடி தரையில் விழுந்திட நூலகர் வல்லிக்கண்ணனை வாசல் அலமாரிக்கு மாற்றி வைத்தார். பெண்தனி…
உள்நாடு வெளிநாடு ஒவ்வொரு பயணம் போய்த் திரும்பிப் பார்க்கும் போதெல்லாம் டூரிங் தியேட்டர் ஊரில்தான் இருந்தது நாம்தான் டூரிங் அது இல்லையாம். வைகைக் கரைமண் எந்தக் காலத்திலோ பரத்தி வைத்த மணல்வெளி பீடி சிகரெட் தீக்குச்சி சிக்கெடுத்த தலைமுடி கலந்து தரை டிக்கெட் ஆச்சு. தண்ணீர்த் தொட்டியில் இட்டால் மிதக்கும் இருபதுபைசா நாணயம் ஒன்றும் பத்துக் காசும் சேர்த்துக் கட்டணம் செலுத்தித் தரையில் ஒருத்தர் அமரலாம். இந்தியன் நியூஸ் ரீல் என்றும் துக்கம் பீகாரில் வெள்ளம் பிரதமர்…
செண்ட்ரல் ஸ்டேஷனை எந்த வருடமோ இந்திக் காரர்களுக்கு எழுதி வைத்தார்கள் இந்திமிகுந்த அங்கே புறப்படாது தமிழூர் எழும்பூர் நீங்கும் நூற்றொண்ணு மதராஸ் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் வண்டி. இலங்கை செல்லப் படகுகள் ஏற தனுஷ்கோடிவரை போனதால் இதனைப் போட்மெயில் என்போம் எங்கள் பூமியில் தனுஷ்கோடியைக் கடல் கொண்டு போச்சு. ராத்திரி ஏழரை எழும்பூர் விட்டு வண்டி கிளம்பினால் பெட்டி பெட்டியாய் இட்லிப் பொட்டலம் திறந்து வைத்து வேகம் தின்பதே சீலமென்று தலைமுறையாகப் பழக்கம் உண்டு. காய்ந்து போன பூரிக்…
ஜோல்னாப் பைகளின் காலம் முடிந்ததாம் யார் சொன்னார்? ஃபூகோ என்றும் காஃப்கா என்றும் போர்ஹே என்றும் சிமன் தெ புவாவென்றும் ஃப்ரான்ஸ்வா சாகன் என்றும் சிமமண்டெ என்கோஸி அடிசெ என்றும் தெரிய வேண்டிய பெயர்களை எல்லாம் சரியான உச்சரிப்பில் கற்றுக் கொடுத்தது என் ஜோல்னாப் பைதான். ழானர் என்றும் ழீன்பால் சாத்ரெ என்றும் ழான் கொக்தொ என்றும் வெற்றிலை சீவல் குதப்பிய வாயொடு சொல்வது போல பேசச் சொன்னதும் சத்தியமாக ஜோல்னாப் பைதான். அப்பத்தா என்பதுபோல் ரெபதொ***…