Archive For ஜனவரி 23, 2019
இந்த மாதம் (ஜனவரி 2019) ’அந்திமழை’ இதழில் வெளிவந்த என் ‘குறுநல்வாடை’ பத்திக் கட்டுரை இளிவரல் இரா.முருகன் குறுநல்வாடை 2 நவரசத்தில் அருவருப்பும் ஒன்று என்று நான் வகுப்பு எடுக்கும்போது சொன்னால், அதுவரை செவி கொடுத்துக் கேட்டவர்கள் முகம் சுளித்து,, வகுப்பு முடிய, சொல்லிக் கொள்ளாமல் கிளம்பிப் போய்விடுவது வாடிக்கை. ”பீக்குட்டிப் பிசாசு வேலைன்னு சொல்வாங்க, அறுசுவை உணவோடு கூட நரகலையும் ஒரு துளி இலையிலே வச்ச மாதிரி ஆயிடுச்சே அய்யா” என்று கிராமம் பயிலும் இளைஞர்…
சென்னை புத்தகக் கண்காட்சி 2019 நிறைவு நாள் நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் புத்தகப் பதிப்பாளர்களுக்கு ஓர் எழுத்தாளன் என்ற முறையிலும், வாசகனாகவும் விடுக்கும் சில அன்பான வேண்டுகோள்கள். 1) புத்தகக் கண்காட்சி பாடப் புத்தகம், நோட்ஸ் விற்கும் கடைகளின் சங்கமம் இல்லை. செலபோன் பேப்பரில் பொதிந்து புத்தகங்களை காட்சிக்கு வைப்பதைத் தயைகூர்ந்து தவிருங்கள். உங்கள் அரங்குக்கு (ஸ்டால்) வரும் வாசகர் புத்தகத்தைப் புரட்டி அங்கே இங்கே கொஞ்சம் படித்து (browse), வாங்க வேண்டும் என்ற உந்துதல் இருந்தால்…
சென்னை புத்தகக் கண்காட்சி 2019 நேரத்தில் வெளியாகி இருக்கும் நாவல் 1975 நல்ல மதிப்பீடுகளைப் பெற்றுள்ளது. முதலிரண்டு இவை : நண்பர் ஹரன் பிரசன்னா இரா.முருகனின் 1975 நாவல். எமெர்ஜென்ஸி அறிவிக்கப்பட்டு விலக்கபடும் வரையிலான 21 மாதங்களில் ஒரு வங்கி அலுவலர் எதிர்கொள்ளும் நிகழ்வுகளை எமர்ஜென்ஸியின் பின்னணியில் சுவைபடச் சொல்லும் நாவல். சுவைபட என்றால் வெற்று வார்த்தை இல்லை, நிஜமாகவே சுவைபட. இரா முருகனின் எழுத்தில் இந்நாவலில் (சப்டில்) மென்நகைச்சுவை உச்சம் கொள்கிறது என்பேன். பல இடங்களில்…
புத்தாண்டில் கிண்டில் மின்நூலாக நான் எழுதிய அ-புனைவை வெளியிட உத்தேசித்திருந்தேன். வருடம் பிறக்க மூன்று நாள் முன்பே சோதனை ஓட்டமாக முதல் புத்தகமான ‘எடின்பரோ குறிப்புகள்’ வெளியிடப்பட்டது. அ-புனைவாக நிறையவே எழுதியிருக்கிறேன் என்பது அப்போது தான் உணர்வில் பட்டது. இவற்றில் பத்திரிகை பத்தி தான் மிகுதியாகவும். என் இணையத் தளத்தில் எழுதியதும், ஒன் ஆஃப் பத்திரிகைக் கட்டுரைகளும் இதில் உண்டு. ஆங்கிலத்திலும் கணிசமான non-fiction எழுதியிருக்கிறேன் என்பது மேலதிகத் தகவல். இவற்றில் சில ஏற்கனவே அச்சிலும், மின்நூலாகவும்…