Archive For மார்ச் 25, 2019
நளவெண்பாவும் BREXIT-உம் —————————————– போயொருகால் மீளும் புகுந்தொருகால் மீண்டேகும் வாய்திறந்து ப்ரெக்ஸிட் வேண்டுமென்பார் – ஓய்வுகொண்டு போகவேண்டாம் யூனியனில் சேர்ந்திருப்போம் புத்தியென்பார் போகணுமா நிக்கணுமா சொல் ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து (European Union) பிரிட்டன் விலகிவிட வேண்டுமென்று (BREXIT) பிரிட்டீஷ் மக்கள் சில ஆண்டுகளுக்கு முன் பெரும்பான்மையாக வாக்களித்தார்கள். வெளியேறும் நேரம் நெருங்க, போகவேண்டாம், சேர்ந்திருப்போம் என்று புது யோசனை. To Be or not to Be … போகணுமா நிக்கணுமா – இதுதான் பிரச்சனை வெண்பாவில்…
புலி அம்சம் இரா.முருகன் மகி எழுந்தபோதே அவர் வந்து விட்டார். ஏகப் பரபரப்பில் இருப்பதாக அவருடைய பேச்சும் நடப்பும் உணர்த்தின. பூனைக் கண்ணும், பூனை மீசை போல சிலும்பி நின்ற அடர்த்தி இல்லாத மீசையும், முகத்திலும் கைகளிலும் வெளுத்த சிறு வட்டங்களுமாக அலைபாய்ந்தார் அவர். ‘மகி, ரெடியா?” பேச முடியாமல் பற்பசை நுரை வாயில் அடைக்க அவரை உட்காரச் சொன்னான் மகி. நல்ல வேளையாக நாற்காலி இருந்தது. ”ஸ்ரீ காமராஜ் தலைமையில் காங்கிரஸ் கட்சி சர்க்கார் இன்று…