Archive For ஏப்ரல் 14, 2019

புதியது : சிறுகதை – பாதுஷா இரா.முருகன்

By |

புதியது : சிறுகதை  – பாதுஷா       இரா.முருகன்

ஜன்னல் சீட்டை நான் எடுத்துக்கலாமா? கேட்டபடி பக்கத்தில் நின்றவரைப் பார்த்து விட்டு அடுத்த சீட்டுக்கு மாறி உட்கார்ந்தான் ராகவன். விமானம் கிளம்பப் போகிறதால் பாதுகாப்பு பட்டியை அணிந்து கொள்ளச் சொல்லி அறிவிப்பு வர, அவசரமாக ஜன்னல் சீட்டில் விழுந்தார் வந்தவர். அவர் சட்டைப் பையில் இருந்து நழுவிய கார்டை எடுத்துப் பார்த்தான் ராகவன். எஸ்.எஸ்.சித்தர். அப்படின்னா? ”ஷேப் ஷிஃப்டர் சித்தர். நினைச்ச மாதிரி உரு மாறுவேன்”. மூலிகை பற்பசை வாசனையோடு சிரித்தார். புரியலே என்றான் ராகவன். அவன்…




Read more »

என் ‘நெம்பர் 40, ரெட்டைத் தெரு’ நாவல் பற்றி

By |

என் ‘நெம்பர் 40, ரெட்டைத் தெரு’ நாவல் பற்றி

நன்றி நண்பர்கள் கணேசன், அனுராதா கிருஷ்ணஸ்வாமி பத்திரிகையில் வந்தபோது நல்ல வரவேற்பு இருந்தாலும், அந்தப் பத்திரிகையின் ஆசிரியருக்கு ஏனோ பிடிக்காமல், உடனே நிறுத்தியாக வேண்டும் என்று ஒரே பிடிவாதம். நான் பிரிட்டனில் இருந்த காலம் அது என்பதால் நேரடியாக வந்து என்ன பிரச்சனை என்று கேட்கவும் முடியவில்லை. மறைந்த எழுத்தாளர் திரு சாருகேசியும் நண்பர் – பத்திரிகையாளர் சிவகுமாரும், ரெட்டைத் தெரு தொடர வேண்டும் என்று உறுதியாகச் சொல்ல, தொடர் நீண்டு 26 அத்தியாயம் வரை போய்…




Read more »