Archive For ஜூலை 26, 2019
நீல பத்மநாபனின் புதிய கவிதைத் தொகுதி ‘சாயங்கால மேகங்கள்’ விருட்சம் பதிப்பு திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம் – வெளியீட்டு விழா 23 ஜூலை 2019 செவ்வாய்க்கிழமை மலையாளத்தில் எழுதப்பட்டு நீல.பத்மநாபன் தமிழாக்கம் செய்த நூல் இது. இரு மொழியிலும் ஒரே தலைப்பு தான். நூல் மலையாளத்திலும் தமிழிலும் வெளியாகியுள்ளது ‘சாயங்கால மேகங்கள்’ – நீல பத்மநாபனின் கவிதைத் தொகுப்புக்கு நான் எழுதிய ‘ரசனைக் குறிப்பு’ – // முதுமை ஒரு மனநிலை. அது உருவத்தை மாற்றுகிறது. நடையைத்…
வரும் ஜூலை 23 செவ்வாய்க்கிழமை மலையாள மகாகவி உள்ளூர் பரமேஸ்வர ஐயர் நினைவு இலக்கிய விருது வழங்கும் விழா திருவனந்தபுரத்தில் நடக்கிறது. உங்கள் அன்பான வாழ்த்துகளோடு, அடியேன் விருது பெறுகிறேன். அழைப்பிதழை இணைத்துள்ளேன். அனந்தை, சுற்று வட்டாரத்தில் வசிக்கும் நண்பர்களை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன். உள்ளூர் எஸ். பரமேஸ்வர ஐயர் மலையாளத்தின் மகாகவிகளில் ஒருவர் உள்ளூர். இவரது இயற்பெயர் பரமேஸ்வர ஐயர். இவர் 1877 ஜூன் 6 ஆம் நாள் சங்கனாச்சேரி என்ற இடத்தில்…
மீசை – சிறுகதை – இரா.முருகன் நான் நாக அரவிந்தன். எனக்கு ஏழு வயசில் மூக்குக் கண்ணாடி போட்டார்கள். அப்போது அனுபவமான கதை இது. நடந்து அறுபது வருஷமாகி விட்டது. நடந்து என்றால், எல்லாம் உண்மையா? நிஜமும் உண்டு. ஒரு ஆஸ்பத்திரியில் நடந்தது இது. சும்மா மருந்து கலக்கிக் கொடுக்கிற ஆஸ்பத்திரி இல்லை. ஆபரேஷன் செய்கிற இடம். அந்த ஆஸ்பத்திரியை நான் இன்னும் வெள்ளை வெளேர் என்று பளிங்கு மாளிகையாகத்தான் நினைவில் வைத்திருக்கிறேன். அங்கே டெட்டால் வாடை…
‘நடையானந்தா கவிதைகள்’ நூலில் இருந்து – // ராத்திரி முழுக்க ரதங்கள் ஊரும் பூக்களைக் குவித்துச் சுமந்த வண்ணம். சாமியோ மானுட சாதியோ உலாவில் வருவது இல்லை எல்லாம் மலர்களே. பிள்ளைவயல் காளி சின்ன உருவம் மேல் பூவெல்லாம் கவிந்து மணத்து இருக்க வருடம் ஒருமுறை மலர்களின் திருவிழா. பூக்களைப் பறித்து பூக்களை அடுக்கி பூக்களைத் தேரேற்றி, பல்லக்கில் பூசுமந்து பூக்களை சொரிந்து பூக்களை அகற்றி பூக்களை மேலும் சொரிந்து குவித்து இரவு நகர்ந்து புலரி வரைக்கும்…
ராத்திரியில் லாரி வந்து நிற்க இந்திக் குரல்கள் உரக்கக் கேட்டால் டில்லி பகதூர் ஏலக்கடை எல்லா வருடமும் வருவதுபோல் எங்கள் தெருவுக்கு வந்தாச்சு நாளை காண நிறையக் கிடைக்கும் விட்ட இடத்தில் உறக்கம் தொடர்வோம் சொல்லி வைத்தாற்போல் ஏலக்கடை வருடம் தோறும் வருவது எங்கள் அரைப் பரீட்சை டிசம்பரில் முடித்து விடுமுறை விட்ட நாட்களில் இருக்கும். ஏலக் கடையில் எழுதும் கணக்கும் இந்தி நம்பராம் நம்போல் இல்லை தலையில் நீலத் தலைப்பாகை வைத்த நானா என்னும் பெரியவர்…
ஞானம் தேடி வேறெங்கும் போகாமல் பள்ளி வாசலில் தடுத்தாட்கொண்டது வழக்கம் போல் போஸ்ட்மேன் சின்னி கிருஷ்ணன் தான். பள்ளிக்கூட வாசலில் பார்த்து சைக்கிளைக் குறுக்கே நிறுத்தி லெட்டர் இருக்குது வாங்கிக்க என்றார் வீட்டு வாசலில் கடிதம் தருவது தவிர விருப்பமான சர்வீஸ் ஆக வந்த கடிதம் தருவது இங்கெலாம் – கொல்லைக் கதவைத் தட்டி திருச்செந்தூர் இலைவீபுதி பிரசாத கவர் தெருமுனையில் நிறுத்தி யாரோ போய்ச்சேர்ந்த கருப்பு தபாலட்டை லைபிரரிக்குள் துரத்தி வந்து அடுத்த மாதம் அத்தங்காள்…