Archive For ஆகஸ்ட் 25, 2019

‘தீவு’ – உயிர்மை ஆகஸ்ட் 2019 இதழில் என் சிறுகதை

By |

தீவு ”இறங்கலாம்”, விமான உபசரிணிப்பெண் அபியைத் தோளில் தட்டி எழுப்பினாள். அவன் கண் விழித்தபோது விமானத்துக்குள் ஜன்னல்கள் மூடி, எல்லா விளக்குகளும் அணைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டான். அவனை இறக்கிவிட அவசரம் காட்டிய உபசரிணியோடு நின்ற வெள்ளைத் தொப்பி அணிந்த மத்திய வயசுக்காரனும் ‘எழுந்திருங்கள்’ என்று அபிக்குப் புரிய வைக்கக் கையை உயர்த்திக் காட்டினான். விமானியாக இருக்கும். “இது எந்த ஏர்போர்ட்? நான் ஜகார்த்தாவுக்கு போகிற பயணி. லண்டனிலிருந்து வருகிறவன்”, அபி தூக்கக் கலக்கத்தோடு சொல்லியபடி கோட் பாக்கெட்டில்…




Read more »

சின்னதாக ஒரு ரயில் நிலையம்

By |

பத்து மணிக்கு தெற்கே போக சாயந்திரம் ஐந்தரைக்கு வடக்கே போக ரெண்டே ரயில் ஓடும் ஸ்டேஷன் எனக்குத் தெரியும் இருந்தது ஓர்காலம். தெற்கு போவது ராமேஸ்வரத்துக்கு குளித்துத் தொழுதவர் திரும்ப சென்னை செல்வர் வடக்கே போட்மெயில் என்று சிறப்புப் பெயர் ரெண்டு வண்டிக்கும் உண்டு. இலங்கை முனையைத் தொட்டு ஓடி முன்னொரு காலம் இயங்கியதாம் தனுஷ்கோடியைக் கடல்கொண்டு போக இலங்கை செல்ல ரயில்வண்டி இல்லை. ஆக் மொத்தம் இரண்டே ரயில்கள் சிலநாள் சென்னையில் இருந்தோ இன்னும் வடக்கே…




Read more »