Archive For அக்டோபர் 27, 2019
வாதினி தீபாவளி மலரில் வந்திருக்கும் சிறுகதை – ‘மூடல் மஞ்சு’ தியூப்ளே வீதி நாவலில் ஓர் அத்தியாயமாக வைத்திருந்து, மையக் கதையோட்டத்தோடு இசைந்து வரச் சற்று கடினமாக இருந்ததால், இங்கே சிறுகதை ஆனது. மூடல் மஞ்சு இரா.முருகன் மஞ்சுபாஷிணி. அது அவளுடைய சொந்தப் பெயர். மஞ்சுளா. இது வீட்டில் கூப்பிடும் பெயர். நாங்கள் வைத்தது. மஞ்சப் பாப்பா. அலுத்துப்போய் வேறே என்ன மாதிரி வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது அஜந்தா தியேட்டருக்கு ஒரு புது மலையாள சினிமா…
1975 நாவலில் இருந்து – 1975 – தில்லி தீபாவளி தீபாவளிக்கு ரெண்டு நாள் முந்தி கரண்ட் அக்கவுண்ட் வாடிக்கையாளர்கள் மும்முரமாகி விடுவார்களாம். அவர்கள் என்றல்ல மொத்த தில்லியுமே பிசியாகி விடும். ஆப்பிள், ஆரஞ்ச் என்று பழக்கடையில் விலைபோகாமல் அடுக்கி இருந்த சரக்கெல்லாம் அரைவிலை, கால்விலையில் கிலோ கணக்காக வாங்கப்பட்டு, பாலீஷ் போட்டுக் கண்ணாடி போல மினுமினுக்க வைக்கப்படும். அடுத்து சோனியான முந்திரிப்பருப்புகள் குவியல் குவியலாக சற்றே வறுபட்டு வைக்கப்படும். கொஞ்சம் பழசானாலும் பழைய மது போல…
இந்த மாதம் எழுதியது, மொழிபெயர்த்தது ஆகக் குறைவுதான். நிறையப் படித்தேன், படித்துக் கொண்டிருக்கிறேன். போன வாரம் கிருஷ்ணகான சபாவில் ‘தமிழ் வளர்த்த சான்றோர்’ நிகழ்ச்சியில் அன்புக்குரிய பேராசிரியர் வவேசு அவர்களுடன் சக்தி வை.கோவிந்தன் பற்றி, அவை நிறைந்த கலந்துரையாடல். நிகழ்ச்சியில் பேச, சக்தி கோவிந்தன் நடத்திய பத்திரிகைப் படைப்புகளின் தொகுப்பான ‘சக்தி களஞ்சியம்’ இரண்டு தொகுதிகளை – கிட்டத்தட்ட 1500 பக்கம் – படிக்க வேண்டியிருந்தது. கூடவே திரு பழ.அதியமான் எழுதிய ‘சக்தி வை.கோவிந்தன் – தமிழின்…
A short story from my collection, The Polymorph The Bottle The ferry was on the other bank of the river. At least twenty, all men, were there at the boat jetty along with Kesavan, waiting for the ferry to arrive. Except Kesavan and a shabby-looking elderly person with crutches held under his arms, others had…