Archive For பிப்ரவரி 29, 2020

பெரீஸ் பிஸ்கட்டும் ஞாயிற்றுக்கிழமையும் அம்புலுவும் – ராமோஜி – என் புது நாவல்

By |

பெரீஸ் பிஸ்கட்டும் ஞாயிற்றுக்கிழமையும் அம்புலுவும் – ராமோஜி – என் புது நாவல்

மங்கலாக மின்னிக் கொண்டிருந்த நாலைந்து நட்சத்திரங்களும் ஒரு ராப்பறவையையுமாக ஆகாசப் பரப்பு கிடந்தது. நான் போர் விமானங்கள் எந்த வினாடியும் எங்கள் தலைக்கு மேலே பறந்து கம்பளம் விரித்தது போல் நெருக்கமாக எங்களைச் சுற்றிக் குண்டு வீசும் என்று எதிர்பார்த்து, ஷெல்டருக்குள், ரத்னா தோளில் தலை சாய்ந்திருந்தேன். ஒரு சத்தமும் இல்லை. ஒரு விமானமும் பறந்து போகவில்லை. அரைமணி நேரத்தில் விமானத் தாக்குதல் இல்லை என்று அறிவிக்கும் ஆல் க்ளியர் சைரன் கேவல் இன்றி நீண்டு தீர்க்கமாக…




Read more »

ராமோஜி : எழுதப்படும் என் புதிய நாவல் – சில பகுதிகள்

By |

ராமோஜி : எழுதப்படும் என் புதிய நாவல் – சில பகுதிகள்

Excerpts from my forthcoming novel, ‘Ramoji’ சைரன் ஒலித்த ராத்திரி —————————————- நான் சுற்றும் முற்றும் பார்த்தேன். கற்பகாம்பாள் சந்நிதியிலிருந்து பெரிய குருக்கள் கையில் தீபாராதனைத் தட்டோடு வெளியே வந்தார். “வாரும் ஓய் ராமோஜி. என்ன தேடிண்டிருக்கீர்?” அவர் கேட்டார். “இங்கே வெடவெடன்னு ஒரு சின்ன வயசுக் குருக்கள் நாயன்மாருக்கெல்லாம் தினசரி உடுத்தி விடுவாரே, இருக்காரான்னு பார்க்கறேன்.. அழுக்கு வேஷ்டி இல்லேயேன்னு அறுபத்து மூணு நாயன்மார்கள்.. சரி மூணு பெண் நாயன்மார்களை விட்டுடலாம்.. அறுபது நாயன்மார்கள்…




Read more »

நான் எழுதிக் கொண்டிருக்கும் நாவல் ‘ராமோஜி’ – சில பகுதிகள்

By |

நான் எழுதிக் கொண்டிருக்கும் நாவல் ‘ராமோஜி’ – சில பகுதிகள்

excerpt from my forthcoming novel ‘Ramoji’ – being edited அப்பாஜி நினைவில் ————————— “நிச்சயம் பராசக்தி நிமிஷாம்பாள் அம்பா-வை தரிசிச்சு லோக ஷேமத்துக்காக ப்ரார்த்தனை செய்யணும். ஆனாலும், கற்பகாம்பா கிட்டே இன்னிக்கு வரேன்னு சொல்லிட்டு நிமிஷாம்பா கோவிலுக்குப் போகலாமா? நாளைக்கு சீக்கிரம் ஆபீசிலே இருந்து வந்துடறேன். சௌகார்பேட்டை கோவில் ஒண்ணு விடாம போவோம். இப்போ மயிலாப்பூர்”. நான் என் பங்கு நியாயத்தைச் சொன்னேன். சௌகார்பேட்டை போய்த் திரும்ப மெத்த நேரம் பிடிக்கும். யுத்த காலத்தில்,…




Read more »

ராமோஜி – எழுதப்படும் என் நாவலில் இருந்து – 1942 நகர் நீங்குதல்

By |

Excerpts from my forthcoming novel ‘Ramoji’ – awaiting edit 1942 எல்லார் நாக்கிலும் எவாகுவேஷன் கொட்டக் கொட்ட முழித்துக்கொண்டு எங்கள் வீட்டில் நானும் ரத்னாபாயும். தெருவில் முதல் வீட்டிலும், கடைசி வீட்டிலும் சேர்த்து நாலைந்து பேர்வழிகள் உண்டு. மற்ற வீடெல்லாம் கதவடைத்துப் பூட்டி திண்டுக்கல் பூட்டு தொங்கிக் கொண்டிருக்கிறது. பேட்டை முழுக்க ஆள் நடமாட்டம் உள்ள வீடுகளை விட பூட்டிய வீடுகள் அதிகமாகத் தட்டுப்படுகின்றன. பலசரக்குக்கடை, பெட்டிக்கடை, காப்பிக்கடை என்று வீடுகள் உள்வாங்க, வீட்டு…




Read more »

ராமோஜி – எழுதிக் கொண்டிருக்கும் நாவலில் இருந்து

By |

ராமோஜி – எழுதிக் கொண்டிருக்கும் நாவலில் இருந்து

excerpts from my forthcoming novel ‘Ramoji’ (being edited) டீ குடித்து விட்டு யுத்தத்தைத் தொடர்ந்து ஒரு தோளில் கனமான கதர்ப்பை. கையில் தூக்குப் பாத்திரத்தில் பலகாரம். நகரவே கஷ்டமாக இருந்தது. நடக்க வேறே வேண்டும். “விறுவிறுன்னு வாங்க”, ஆராவமுது நடக்க, பின்னால் நான். தண்டியில் உப்புக் காய்ச்ச மகாத்மா கூட இவ்வளவு வேகமாக நடந்திருக்க மாட்டார். இனியும் நடக்க வயது இடைஞ்சல் செய்யும். 1930-இல் அவர் நடந்து இப்போ பதினாலு வருஷமாச்சே. நான் கையில்…




Read more »

யானைக்கவுனி தாண்டுதல் – எழுதப்படும் என் புது நாவலிலிருந்து

By |

யானைக்கவுனி தாண்டுதல் மாதம் ஒரு தடவை மெட்றாஸில் இருந்து திருப்பதிக்கு நடந்து, அங்கே போய்த் தரிசனம் செய்து, திரும்பி நடந்தே மெட்றாஸ் வந்து சேர்கிறவர். ஆராவமுதன். மெட்றாஸிலிருந்து திருப்பதி கணிசமான தூரம். இது எப்படி சாத்தியம்? நான் அவரிடம் ஒரு முறை ஆர்வத்தோடு விசாரித்தேன் இரண்டு வருஷம் முந்தி ஒரு சாயந்திர நேரம் அது. ஆராமுது என்னைப் பக்கத்தில் உட்கார்த்திச் சொன்னது இது – ”உமக்கே தெரியுமே மதறாஸில் இருந்து திருப்பதி எண்பது மைல் தூரம். இது…




Read more »