Archive For மார்ச் 31, 2020
ஒன்பது வருஷம் முந்தி, 1935-இல் …. ********************* கும்பகோணத்தில் மெட்றாஸ் திருச்சி பாசஞ்சர் ராத்திரி ஒன்பதரை மணிக்கு வந்து சேர்ந்தது. தலையில் ட்ரங்க் பெட்டியைத் தூக்கி வைத்துக் கொண்டு நடந்து போன இரண்டு பேரையும் என்னையும் தவிர கும்பகோணத்தில் உதிர்த்துப்போக ரயிலுக்கு வேறே யாரும் இல்லை. ஊரடங்கு உத்தரவு போட்ட மாதிரி ரயில்வே ஸ்டேஷன் ஆள் அரவமின்றிக் கிடந்தது. ரயில் விளக்கோடு நீள நடந்து வந்தவர் ஸ்டேஷன் மாஸ்டர் தான். ”ரயில்வே ஸ்டேஷன்லே கேட்டா சொல்வாங்க, துக்காம்பாளையம்…
Excerpt from my forthcoming novel ‘Ramojium’ புது மாம்பலம் பாத்திரக்கடை வெளியில் இருந்து பார்த்ததை விட உள்ளே நீளமாக இருந்தது. பெரிய கடைகளை விடக் குறைவுதான் என்றாலும் கடைக்குள் வைத்திருந்த வெங்கலப்பானை, அடுக்கு, குடம், தவலை, போகிணி, டபரா செட், உருளி என்று பாத்திரங்கள் லட்சுமிகரமாக வீட்டுச் சூழ்நிலையை பிரதிபலித்துக் கொண்டிருந்தன. நவராத்திரி கொலு வைத்தது போல் அவற்றை அழகான மரப்படிகளில் வைத்திருப்பது மனதில் பதிந்தது. ரத்னா ஒரு கச்சேரி ரசிகனின், ரசிகையின் சங்கீத ஈடுபாட்டோடு,…
Excerpt from my forthcoming novel Ramojiyam ”இந்த பஸ் தான். வாங்க அம்மா”. பூர்ணா, வந்து கொண்டிருந்த பஸ்ஸைக் கைகாட்டி நிறுத்தினாள். கன்னாட் ப்ளேஸ் போகும் வண்டி அது என்று எழுத்துக்கூட்டி இந்தி மட்டுமே ஆன அறிவிப்புப் பலகையைப் படிப்பதற்குள் பஸ் கன்னாட் ப்ளேஸ் போய்விட்டது. மெட்றாஸ் ஹோட்டல் என்று பெயர் பொறித்திருந்த ஹோட்டலுக்குள் போனபோது வலிந்து சென்னை சூழ்நிலையை ஏற்படுத்த முயற்சி செய்திருப்பதைக் கண்டேன். டி என் ராஜரத்தினம் பிள்ளை வாசித்த யோசனா கமல…
இது என்ன பார்க்? கொக்கு பார்க் என்று சிரித்தாள் பூர்ணா. நான் திரும்பிப் பார்த்தேன். பச்சைப் பசேல் என்று மாம்பலத்தில் பனகல் பார்க் மாதிரி, அதைவிட அழகான மரம் நிறைந்த, புல்வெளி கூடிய, ஒரு பார்வைக்கு முக்கோணமாகத் தோன்றும் பூங்கா. வாசலில் கொக்கு சுதை உருவம் வைத்திருந்தது. சீதோஷ்ண நிலையும் அற்புதமானதாக இருக்க, வியர்ப்பும் குளிருமில்லாத ஸ்திதியில் இங்கே பத்து நிமிடம் உட்கார்ந்து வர மனசு கூப்பாடு போட்டது. அவர்களோடு பார்க்குக்குள் நுழைந்தேன். உள்ளே நடைபாதையை ஒட்டிப்…
சுருக்கமாகச் சில விஷயங்கள் 1) எழுதி வரும் நாவலின் பெயர் ‘ராமோஜியம்’ என்று மாற்றப்படுகிறது. இதுவும் tentative தலைப்புத்தான் 2) எழுதியதில் 30 -40% இங்கே அவ்வப்போது சிறு நாவல் பகுதிகளாகப் பகிர்ந்து கொள்கிறேன். நாவல் எழுதி எடிட் செய்து புத்தகமாக வெளியாகும்போது முழு வடிவம் படிக்கக் கிட்டும். 3) சாப்பாடு அடிக்கடி நாவலில் வருகிறதே. ஆமாம், வரும். ராமோஜி போஜனப் பிரியன். 4) உலகமே கொரோனா வைரஸ் கவலையில் இருக்கும்போது, புது நாவல் எதற்கு? கவலையோடு…
ரயிலில் சும்மா உட்கார்ந்து வந்தாலும், தூங்கி விழித்து சாப்பிட்டு மறுபடி தூங்கி ரெண்டு ராத்திரி ரெண்டு பகல் வந்தாலும், ஏதோ சாரத்தில் கல்லும் மண்ணும் சுமந்து எடுத்துப்போய் இடுப்பொடிய வேலை பார்த்த மாதிரி அசதி. சுமித்ரா அண்ணி வேறே வயிறை வஞ்சிக்காமல் சரபோஜி மகாராஜா அரண்மனை விருந்து போல சமைத்து வைத்து சாப்பிடச் சொன்னாள். மூன்று மணி நேரம் அடித்துப் போட்டது போல் தூங்கியிருக்கிறேன். சாயந்திரம் ரெண்டும் கெட்ட ஆறேகாலுக்கு எழுந்திருந்த போது ரத்னா பேஸ்ட் வேணுமா…