Archive For மே 31, 2020
ராமோஜி தரையைப் பார்த்தபடி நின்றிருந்தான். துரை அவனை நோக்கினார். ”நீர் என்ன செய்து கொண்டிருக்கிறீர்?” துரை விசாரித்தார். இன்னொரு இளநீர் வெட்டப்பட்டு அவர் வாய்க்குள் தாரையாக வழிந்து கொண்டிருந்தது. மரியாதைக்குக் கூட இரும் என்றோ இளநீர் குடிக்கிறீரோ என்றோ விசாரிக்கவில்லை துரை. அது கிடக்குது. வந்தது வந்தாய், நான் கேட்கக் கேட்கப் பதில் சொல்லிக்கொண்டு என் காலைப் பிடித்து விடு என்று சொல்லாமல் இருந்தாரே, அதுவரை விசேஷம்தான். “புடவைக் கிடங்கு வைத்து சாயம் தோய்த்து அந்நிய நாடுகளில்…
நாவல் ராமோஜியம் – ராமோசி ராயன் (ராமோஜி ராவ்) குவர்னர் தியோப்ளெசியை சந்தித்து வருதல் – 1745-ம் வருடம்
சாரட் ஓட்டுகிறவனும் கூடவே லொங்குலொங்கென்று கையில் ஈட்டியோடு ஓடி வரும் நாலு பயல்களும் நவாப் மோஸ்தரில் சலாம் செய்து, அதிலே ஒரு முட்டாள் ”முரட்டாண்டி சாவடிக்கு போக எல்லாம் துரை சித்தப்படி தயார்” என்றபோதே அவருக்குக் கட்டோடு பிடிக்காமல் போனது. இந்த கிராமத்துப் பெயர் முரட்டாண்டி சாவடி என்று இந்தப் பயல்கள் சொல்வதை இன்னும் நிறுத்தவில்லை. தியூப்ளே பேட்டை என்று ஒரு வருடம் முன்னால் ஊர்ப் பெயரை மாற்றி கவர்னர் துரை தன் பெயரைச் சூட்டினாலும் அதை…
முரட்டாண்டி சாவடி என்று சொல்லாதே என துரை கட்டளையிட்டால் கேட்டுவிட்டுப் போக வேண்டியதுதானே. வீட்டுக்குள் வேணுமானால் முரட்டாண்டி, வரட்டாண்டி, பரட்டாண்டி எதுவும் சொல்லிக் கொள்ளட்டும். வெளியே வந்து, ஊர்ப் பெயரைத் துரை கேட்டால் அவன் ஆணைப்படி தியூப்ளே பேட்டை என்று சொல்ல மாட்டேன் என்றால் என்ன அர்த்தம்? அந்த மனுஷனைப் பாவம் வாரம் முழுக்க, நாள் முழுக்க மதாம் தியூப்ளே துரைசானியம்மாள் கையில் —– வாகாகப் பற்றி நெறித்து ’ஆடுறா ஆடு, கிழட்டு குரங்கே ஆடு, தியூப்ளே…
கண்களில் நீர் திரையிட்டிருக்க, பேஷ்காரிடம் கேட்டான் ராம்ஜி – தாசிப்பெண் எங்கே போனாள்? பேஷ்கார் தலை குனிந்து இருந்தார். பின் தயங்கித் தயங்கிச் சொன்னார்- “யாரோ அவள் மேல் குறளி வேலை ஏவி அல்லது செய்வினை செய்து, உடம்பெல்லாம் கொப்பளம் எழுந்து கடலில் விழுந்து இறந்து போனது இந்த நாளுக்கு சரியாக இரண்டு வருடம் முன்பு. அவள் கணக்குகளை சரிபார்க்க ராவ்ஜி வருவார் என்று இங்கே மாதம் மூன்று நாள் நீங்கலாக தினம் வந்து காத்திருந்தாள் பிரபோ”….
”உங்களுக்கு உலுப்பை மானியம் தரவேண்டும் என்று நியதி உள்ளது. எல்லா பெரிய மனுஷர்களுக்கும் அப்படித்தான். சமூகம் கட்டளையிட்டால் உங்கள் காரியஸ்தர் வசம் ஒப்படைத்துவிடுவேன்”, என்றார் பேஷ்கார் அறை வாசலில் நின்று. ராமோஜிக்கு அது என்ன மாதிரி விஷயம் என புரியவில்லை. ”சத்திரத்துக்கு வரும் பெரிய மனுஷர்களும் யாத்திரை கோஷ்டியும் இங்கே தங்கியிருக்கும் மாணவர்களுக்காக சமைக்கப்படும் உணவையே உண்ணலாம். அல்லது அரிசி, புளி, உப்பு, எண்ணெய் என்று எல்லாம் உலுப்பை மானியமாகப் பெற்று அவர்களே சமைத்துக் கொள்ளலாம். உங்களுக்கு…
”மகாராஜா சமூகம் இந்த எளியோனை எலிப்பொறி ராமோஜி ராவை எப்படி பொறி வைத்துப் பிடித்தது?” ”இது எலி இல்லை, சிங்கமாச்சே. பிறந்த இடத்துக்குத் திரும்பி வரும் சிங்கராஜனுக்கு எங்களின் எளிய மரியாதை இது. ஏற்றுக் கொள்ளும்” என்றார் அரசர் சாஹூஜி போன்ஸ்லே. ராமோஜி ஸ்வர்ணதுர்க்கத்தில் இருந்து புறப்பட்ட போதே இந்தப் பயணம் பற்றிய முழுத் தகவலும் வந்தாகி விட்டது என்றார் மகராஜா. அந்த நேரத்தில் யாத்திரை பற்றித் தெரிந்தவர்கள் கனோஜி ஆங்கரேயும், ராமோஜியும், விட்டோபாவும் தான். விட்டோபாவா…