Archive For ஜூன் 30, 2020
1975 நாவலில் இருந்து ஒரு சிறிய பகுதி தி நகர் பஸ் ஸ்டாண்டில் பதின்மூன்றாம் நெம்பர் பஸ்ஸை பிடிப்பதைவிட கஷ்டமான வேலை கிடையாது. திருவல்லிக்கேணி போகும் பஸ் அது. காலை நேரத்தில் எல்லாக் கூட்டமும் அண்ணாசாலைக்கு அலைபாய்ந்து கொண்டிருக்கும். அப்போதும் திருவல்லிக்கேணி பஸ் நிரம்பி வழியும். மதியம் மீதி ரூட் பஸ் எல்லாம் சும்மா போகும். என்ன காரணத்துக்காகவோ மாம்பலம் மனுஷர்கள் வேகாத வெயில் என்றாலும் திருவல்லிக்கேணி போவார்கள். சாயந்திரம் பீச் போகிற கூட்டம். அதற்கு நாள்,…
Excerpt from my novel 1975 அரசியல் சட்ட திருத்தம் 38, 39,40,41 என்று தினசரி ஒன்றாகச் சட்டம் போட்டு சர்வ சக்தி வாய்ந்ததாக மத்திய அரசை மாற்றியமைத்துக் கொண்டிருப்பதை எல்லாம் மக்களாட்சியின் சாதனை என்று வானொலி சொல்ல, கவிஞர்கள் சளைக்காமல் வாழ்த்துக் கவிதை எழுதித்தர, சேர்ந்த இசை என்று ஆகாசவாணியில் நடுப்பகலில் கூட்டமாகப் பாடப்பட்டது. எதிர்க்கட்சிக்காரர்களான பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைதானதையோ, தலைமறைவானதையோ மறந்தும் வானொலி சொல்லவில்லை. பத்திரிகைகளில் அந்த சாதாரண செய்தி ஏதும் வராமல்…
Excerpts from my novel 1975 கேளு நாயரும் அவர் மகள் பாருகுட்டியும் ஒரு வெள்ளிக்கிழமை காலையில் என்னைத் தேடி வீட்டுக்கு வந்திருக்காவிட்டால் நான் இந்த அத்தியாயத்தை எழுதியிருக்கப் போவதில்லை. கேளு நாயரைப் பற்றி அப்புறம் சொல்லிக் கொள்ளலாம்தானே? பாருகுட்டியைக் கவனிக்கலாம். பாருக்குட்டி இல்லை. பாருகுட்டி. பெயருக்கும் குட்டிக்கும் நடுவே மெய்யெழுத்தெல்லாம் அண்டாது. மலையாளப் பெண் பெயர்களுக்கு ஒட்டாக ஒரு குட்டியைச் சேர்த்து பாருகுட்டி, அம்முகுட்டி, ஜானுகுட்டி, மோலிகுட்டி. இன்னும் செல்லமாக மாலூட்டி என்ற மாலுகுட்டி.. இப்படி…
My response – Technology related writing requires staying up to date tech savvy always… It is not that difficult to be. Also not a cakewalk either. I was writing once in a month in The Hindu Tamil edition on technology. I found the readers’ response was on the lowest ebb when I wrote about Big…
“கோவிந்தன் மேன்ஷன் தானே, வாங்க நானும் அந்தப் பக்கம் தான் வரேன்”. ஒதுங்கி நின்று உஸ்மான் ரோடு நெரிசலை ரசித்துக் கொண்டிருந்த ஜிப்பாக்காரர், என்னோடு நடக்க ஆரம்பித்தார். நான் உடனே உஷாரானேன். “சார், ஏதோ தப்பா என்னை நினைச்சுட்டீங்க போல. நான் அன்னிக்கு பீச்சிலே நோட்டீஸை பொறுக்கி எடுத்துப் போனது உண்மைதான். ஆனா அதுக்கு மேலே என்னால் எமர்ஜென்சி எதிர்ப்பு காட்ட முடியாது. நீங்க வந்து இருக்கவோ, தடை செஞ்சிருக்கற புத்தகம் கொண்டு வந்து விநியோகம் பண்ண…
“சௌகார்பேட்டையிலே ஒரு ஏகாம்பரேஸ்வரர் கோவிலும் இருக்காம். சுபாங்கி அம்மா சொன்னாங்க. மறந்துடாதீங்க. நாளைக்கு போயே ஆகணும்” நான் ரத்னாவை ஆச்சரியத்தோடு பார்த்தேன். ஊரோடு காலி செய்து கொண்டு மெட்றாஸை விட்டு ஓடுகிறார்கள். இங்கே இன்றைக்கு இருப்பது ராத்திரி வரை நிச்சயம்; நாளை இருப்பது நாளைக்குத்தான் தெரிய வரும் என்று அவரவர்களே தலையில் எழுதிக் கொண்டுவிட்டார்கள். இந்தப் பெண்ணரசியானால், நாளைக்கு மறந்து விடாமல் சௌகார்ப்பேட்டையில் கோபுர தரிசனத்துக்குப் போய்வர வேண்டும் என்கிறாள். “உன்னோட திடமான நல்ல மனசுக்காக சௌகார்பேட்டை…