Archive For ஜூன் 23, 2020

வெளியிட ஆயத்தப்படுத்தப்படும் என் நாவல் ராமோஜியம் – ராமோஜி நகர் நீங்காத 1942 மதறாஸ் – சில பகுதிகள்

By |

3.ராமோஜி நகர் நீங்காத 1942 மதறாஸ் = சில பகுதிகள் கொட்டக் கொட்ட முழித்துக்கொண்டு எங்கள் வீட்டில் நானும் ரத்னா பாயும். தெருவில் முதல் வீட்டிலும், கடைசி வீட்டிலும் சேர்த்து நாலைந்து பேர்வழிகள் உண்டு. மற்ற வீடெல்லாம் கதவடைத்துப் பூட்டி திண்டுக்கல் பூட்டு தொங்கிக் கொண்டிருக்கிறது. பேட்டை முழுக்க ஆள் நடமாட்டம் உள்ள வீடுகளை விட பூட்டிய வீடுகள் அதிகமாகத் தட்டுப்படுகின்றன. பலசரக்குக்கடை, பெட்டிக்கடை, காப்பிக்கடை என்று வீடுகள் உள்வாங்க, வீட்டு வாசலில், திண்ணையில் தடுப்பு எழுப்பி…




Read more »

ராமோஜியம் – 1941 : புருஷன் யுக புருஷனான கதை

By |

புருஷன் யுக புருஷனானதில் குபீரெனப் பொங்கிப் பிரவகித்து ஏற்பட்ட முகமும் அகமும் கொள்ளாத சந்தோஷத்தோடு என் பிடியிலிருந்து விலகி மறுபடியும் சமையல்கட்டுக்கு ஓடினாள். பத்து நிமிடத்தில் திரும்புவதற்குள் அவள் படித்துக் கொண்டிருந்த வாரப் பத்திரிகையைப் புரட்டினேன். சிசுக்களின் ஈரல் குலைக்கட்டி குணமாக ஜம்மியின் லிவர் க்யூர், தரமான நரசூஸ் காப்பி, நடிகை சோபனா சமரத் சதா உபயோகிக்கும் தெலக்ஸ் சோப், கண்ட்ரோல் விலைக்கு சர்ஜிக்கல் எஃகில் உருவாக்கிய விட்டா பிளேடு, பழைய சாக்குப் பைகள் நியாயமான விலைக்கு…




Read more »

வெளிவர இருக்கும் ராமோஜியம் நாவலில் இருந்து -ஏர்ரைட் வார்டன் ராமோஜி ராவ் 1941

By |

“பாடுங்கோ சார்” மத்தளநாராயண ராவ் கஞ்சிரா வாசித்தபடி பக்கத்தில் வந்து ரெண்டு பேரையும் உற்சாகப்படுத்த, நாயக்கரின் மிருதங்கம் பேச ஆரம்பித்தது. நான் ராவின் கஞ்சிராவை ஒரு நிமிடம் வாங்கி வாசித்ததை நாயக்கர் ரசித்தார். “ஏது டேப் வாசிக்க வரும்போல” என்றார் அவர். “எல்லாம் தேர்ந்த கைதான்.. அவங்க அப்பா மராட்டி அபங் பாடினா,, ஆஹா” என்றபடி மத்தளநாராயண ராவ்ஜி கஞ்சிராவை என்னிடமிருந்து திரும்ப வாங்கிக் கொண்டு முன்னால் போனார். கூட்டமே இல்லாத சொர்க்கத்தில் ஏதோ ஒரு உத்தியானவனத்தில்…




Read more »

யட்சன் வந்த 1940 – ராமோஜியம் தொடக்கம் – பகுதிகள்

By |

யட்சன் வந்த மதறாஸ் 1940 நாவல் மரத்தின் கிளையில் உட்கார்ந்திருந்த யட்சன் ”இந்தக் கதையை எழுதி விட்டு வேறே வேலை பார்” என்று சொன்னான். நான் மரத்தடியில் பழம் கிடக்கிறதா என்று பார்க்கப் போனபோது அவன் லாலலா என்று கிளையைப் பிடித்துக்கொண்டு தொங்கியபடி என்னை அழைத்தான் – ”ராமோஜி, ஓ ராமோஜி! சற்று கவனி”. ”எனக்குத் தமிழ் சரியாகப் பேசவே தெரியாதபோது என்னத்தை எழுத?”, என்று கேட்டேன் தரையில் உதிர்ந்து விழுந்த நாவல் பழத்தைப் பொறுக்கியபடி. “எல்லாம்…




Read more »

வேறு யாரும் செமி பிக்‌ஷனைத் தமிழில் இதுவரை கையாண்டிருக்காத பட்சத்தில், முதல் முறை தமிழில் இது இடம் பெற்ற நாவல் ராமோஜியம் தான்

By |

வேறு யாரும் செமி பிக்‌ஷனைத் தமிழில் இதுவரை கையாண்டிருக்காத பட்சத்தில், முதல் முறை தமிழில் இது இடம் பெற்ற நாவல் ராமோஜியம் தான்

ராமோஜியம் நாவலை எழுதியபோது – 2 தமிழ் நாவலில் வேறு யாராவது செய்திருக்கிறார்களோ தெரியாது – ராமோஜியம் நாவலில் நான் semi-fiction கதைக்கருப்பொருள் – நடை உத்தியைக் கையாண்டேன். semi-fiction என்பது – Semi-fiction is fiction implementing a great deal of non-fiction, for example: a fictional depiction “based on a true story”, or a fictionalized account, or a reconstructed biography புனைவிலிருந்து அ-புனைவும் அ-புனைவில் இருந்து…




Read more »

ராமோஜியம் நாவலை எழுதியபோது – 1

By |

ராமோஜியம் நாவலுக்கும் அதற்கு முந்திய 1975 நாவலுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. 1975 எமர்ஜென்சி காலகட்டத்தில் நிகழ்வது. எமர்ஜென்சி என்ற நெருக்கடி நிலை காலகட்டத்தைப் பற்றியதல்ல அது. அதேபோல் ராமோஜியம் நாவலின் பெரும்பகுதி 1940-களில் நிகழ்வது. 1940-களின் முக்கிய நிகழ்வான சுதந்திரப் போராட்டம் அந்தப் பகுதிகளுக்குக் களன் அமைத்துத் தரும். காந்திஜியும், கஸ்தூர்பாவும், சக்கரை செட்டியாரும், சர்ச்சிலும், வேவல் துரையும், சென்னை கவர்னர் ஆர்தர் ஹோப் துரையும், கலாசார மைல்கற்களான சபாபதி சினிமாவும், ஆல் இந்தியா ரேடியோவில்…




Read more »