Archive For ஜூன் 13, 2020
இன்னும் இருக்கா, இவ்வளவுதானா? யட்சன் கேட்டான். எழுதிக் கொண்டே போனால் நிகழ்ந்து கொண்டே இருக்கும். எங்கேயாவது முற்றுப்புள்ளி வைக்க வேண்டாமா? நான் பதிலுக்குக் கேட்டேன். எழுத ஆரம்பித்த ராமோஜி இல்லையே முடிக்க வந்திருப்பது? நியாயமான கேள்வி அவன் பின்னும் கேட்டது. ஏற்கனவே சொன்னேனே. இருநூறு வருஷத்தில் பத்து ராமோஜிகளாவது பிறந்து சுவாசித்திருக்கலாம. அடுத்த ராமோஜிகள் வந்து கொண்டிருக்கலாம். எல்லோருடைய ராமோஜி கதைகளும் ஒன்றாக, இது என் ராமோஜியம். நான் கேட்டது, பார்த்தது, கேட்டவர்களும் பார்த்தவர்களும் சொல்லக் கேட்டது…
– காலையில் குக்கரை எடுத்து வரும்முன் குடையைத் தோளில் மாட்டியபடி வந்த எலக்ட்ரீஷியன் மணவாள நாயுடு, ”வீட்டுக்குள் எர்த் செக் பண்ணிட்டீங்களா? ப்ளக் பாயிண்ட் எல்லாம் சரியா இருக்கா? பவர் சாக்கெட் லோடு தாங்குமான்னு பார்த்தாச்சா? பார்க்காம குக்கரை ஆன் பண்ணினா ப்யூஸ் போயிடுமே” என்று தொழில் வார்த்தைகளை சரமாரியாக உதிர்த்தார். ”நாயுடு, அதெல்லாம் ஷோரூம் காரங்க பார்த்துப்பாங்க. வந்து பார்த்துட்டு ஏதாவது சொன்னா நாம மாத்திக்கலாம்” என்று நைச்சியமாகச் சொன்னேன். ”சரி என்னமே சொல்றீங்க.. நல்லா…
கும்பகோணம் ஸ்டேஷனில் போய் நேரே ரெண்டு செகண்ட் கிளாஸ் டிக்கெட் வாங்கினேன். ஃபார்ஸ்ட் பேசஞ்சர் ரயில் கிட்டத்தட்ட காலியாகவே வந்தது. ரெண்டாம் வகுப்பில் எங்களைத் தவிர யாருமில்லை. ஃபாஸ்ட் பாசஞ்சர் என்றால் என்ன என்று டிக்கெட் சோதிக்க வந்த டிக்கெட் இன்ஸ்பெக்டரைக் கேட்டேன். ”ஒரு ஸ்டேஷன் விட்டு ஒண்ணு இப்படி நின்னு போனா ஃபாஸ்ட் பேசஞ்சர் சார், எல்லா ஸ்டேஷன்லேயும் நின்னா வெறும் பேசஞ்சர். எங்கேயும் நிக்க மாட்டேன்னு சொல்லிட்டு கிராசிங்க், செக்கிங், ட்ராக் ரிப்பேர்னு எல்லா…
நாங்கள் சந்நிதிக்குள் நுழைகிற வரை புதுசாகக் கல்யாணம் ஆனபோது இருந்ததுபோல் கைகளைப் பற்றிக் கொண்டிருந்தோம். முகத்தில் முறுவலும், சந்தோஷமும், பரஸ்பர அன்பும், நேசமும், நம்பிக்கையும் குடிகொண்டிருந்ததை நான் அவள் முகத்திலும் அவள் என் முகத்திலும் கண்டு பரவசப்பட்டோம். “வரல்லே போலேருக்கு.. அப்படியே போய்ட்டேளோன்னு பாத்தேன்”, பட்டாச்சாரியர் வெளியே வந்தபோது கோவில் மணி முழங்கியது. நான் ‘ரத்னா சதயம்’ என்று சொல்ல, ரத்னா ரகசியமாக என் பெயரை ‘ராமோஜி ராவ் அச்வதி’ என்று சொன்ன இனிமைக்கு ஈடேது. வேண்டாம்…
”கல்யாணம்னு நான் பத்திரிகை வச்சா வரமாட்டீங்க ரெண்டு பேரும், உங்க கல்யாணத்துக்கு அழைக்க மாட்டீங்க.. நல்லா இருங்கப்பா”. நான் ராஜுவிடம் சொன்னேன். ”சே அப்படியெல்லாம் இல்லே.. நீ வீடு மாத்தி யாருக்குமே புது அட்ரஸ் சொல்லலியே.. ” ”சரி, சண்டை அப்புறம் வச்சுக்கலாம்.. கோவிலுக்குப் போய்ட்டு வந்துடறோம்” என்று நானும் ரத்னாவும் கிளம்புவதற்குள் ராஜு வீட்டுக்குள் ஓடிப் போய் தன் விசிட்டிங்க் கார்டை எடுத்து வந்து கொடுத்தான். குடந்தை என்று தமிழிலும் கும்பகோணம் என்று இங்கிலீஷிலும் ஊர்ப்பெயர்…
வலது புறம் காந்தி பூங்கா திருப்பத்தில் பரபரப்பாக ஒரு இட்லிக்கடை பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. வரிசையாக அடுப்பில் வைத்த இட்லி கொப்பரைகளைத் திறக்க நீராவி வாடையோடு, கமகமவென்று உளுந்தும் அரிசியும் கலந்து மல்லியப்பூ இட்லி வாசம். வயிற்றையும் வாயையும் நாசியையும் சுண்டி இழுத்தது அது. கடை நடத்தும் இடம் வெகு சுத்தமாக இருந்தது. தட்டுகளும் பாத்திரங்களும் கூட. சாப்பிட்டுப் போகலாமா ரத்னாவைக் கேட்டேன். வாங்கிட்டு போயிடலாமா என்று அவள் கேட்டாள். ”தெருவிலே ஓரமா பெஞ்ச் போட்டு…