Archive For ஜூன் 7, 2020
சக்ரபாணி கோவிலில் எட்டுக்கால் வட்ட மண்டபத்தைச் சுற்றிப் புல்பூண்டுகள் நீக்கி சுத்தமாகப் பெருக்கிக் கோலமிட்டு வைக்கப்பட்டிருந்தது. சிமெண்ட் காணாத கோவிலாகப் பத்து வருடம் முன் பார்த்தது இப்போது அங்கே இங்கே ஒட்டு வேலையும், ஓரமாகச் சின்ன மேடையும், நடைக்கு ரெண்டு பக்கமும் ஒற்றையடியாக சிமிட்டித் தரையுமாக பளிச்சென்று வித்தியாசம் தெரிந்தது. வட்ட மண்டபம் கடந்து உள்ளே போனோம். பிரகாரத் தூண்களைச் சுற்றிப் பழைய காரையும் சுண்ணாம்பும் பூசிய சிறு மேடைகள் பழைய நண்பர்களாக அந்நியோன்யத்தைச் சொல்லாமல் சொல்லின….
ஏழு மணிக்கெல்லாம் வீடு. சாப்பிட்டு விட்டு எட்டரைக்கெல்லாம் உறக்கம். விடிந்து சனிக்கிழமை காலை ஏழரை மணிக்கு கும்பகோணம் போக பஸ்ஸைப் பிடிக்கலாம் என்று ரத்னாவிடம் சொல்லியிருந்தேன். காலையில் எஸ்பிளனேடில் வெளியூர் பஸ் ஸ்டாண்ட் போகத் தயாராக ரத்னா வீட்டுக் கதவைப் பூட்டப் போனபோது நான் என்ன அவசரம் என்று கேட்டுக் கையமர்த்தினேன். ”உங்களுக்கென்ன சாவகாசமா அடுத்த பஸ்ஸிலே போகலாம்னு சொல்லுவீங்க. எந்த பஸ்ஸுனு திட்டம் பண்ணி வச்சிருக்கமோ, அதிலே போகாட்ட கஷ்டமாயிடும்” என்றாள் அவள். வா, போகலாம்….
ராமோஜியம் நாவல் நூல் வடிவில் பிரசுரிப்பதற்கான ஆயத்தங்கள் தொடங்கியுள்ளன. இது நூலின் முன்னுரை ராமோஜியம் நாவல் முன்னுரை பொடி என்று ஒரு சிறுகதை எழுதினேன். இதை எழுதுகிற தேதிக்கு ஏழெட்டு மாதங்களுக்கு முன் எழுதியது அது. ஏன் எப்படி என்றெல்லாம் தெரியாது. 1930-களின் சென்னை. அங்கே, ராமோஜி என்ற தஞ்சாவூர் மராட்டா இளைஞன். அவன் கல்யாணம் செய்துகொள்ளும் ரத்னா பாய் என்ற அதிரூப சுந்தரி. ரத்னாவின் மூக்குப்பொடி பழக்கம், பொடி டப்பாவைத் தேடிய முதலிரவு என்று அந்தக்கதை…
பிற்பகலில் பனி விழத் தொடங்கியது. இலை உதிர்த்து குச்சிக் கிளை நீட்டிய சிறு செடிகளும், அடர்ந்து வளர்ந்து வெட்டப் படாமல் தலை சாய்த்திருந்த பசும் புல்வெளிகளும் வெண்மை அணிந்தபோது ரயில் வந்தது. சாம்பல் நிறப் பெட்டிகளும், எப்போதும் அடைத்திருக்கும் சிவப்பு ஜன்னல்களுமாகப் பனி பூசி வந்த ரயில் அது. மைனா இறங்கி ஸ்டேஷனுக்கு வெளியே போய் குறுகிய பாதையில் நடக்கும் வரை வண்டி கூவென ஒலியெழுப்பி நின்றது. குடியிருப்புக் குறைந்த ஒரு பழைய சிறு நகரம். நாரைகள்…
ராமோஜியம் நாவலில் இருந்து – ருக்மணி குக்கர் வாங்கப்போன போது ——————————————- தொடர்ந்து நான்கு நாள் திங்களிலிருந்து வியாழன் வரை ஒரு மணி நேரம் ஆபீசில் இருந்து முன்னால் வந்தேன். எலக்ட்ரிக் குக்கரே மனதிலும் புத்தியிலும் திடமாக உட்கார்ந்திருந்தது. எனக்குத் தெரிந்து புவனா வீட்டில் கூட எலக்ட்ரிக் குக்கரோ ஹீட்டரோ, அவ்வளவு ஏன், தண்ணீர் சுட வைக்கும் மின்சார கெட்டிலோ கூட கிடையாது. எலக்ட்ரிக் ஹீட்டர் என்றும் எலக்ட்ரிக் குக்கர் என்றும் அழைக்கப்பட்ட அந்த சாதனம் அரையடிக்கு…
போஸ்ட் ஆபீசிலிருந்து கூப்பிடறாங்க, என்னவா இருக்கும்? ரத்னா நான் ஆபீஸ் வேலைகளில் மும்முரமாக இருந்தபோது ஜோசியர் வீட்டிலிருந்து போன் பேசினாள். அவள் இதற்கு முன் ஃபோனில் என்னோடு பேசியதே இல்லை என்பதால் குரல் வித்தியாசமாகக் கொஞ்சம் கிரீச்சிட்டு ஒலித்ததாகத் தோன்றியது. பதட்டத்தோடு அவள் நேரில் பேசுவதே இல்லை என்பதால், என்ன அவசரமோ, சொல்ல முடியவில்லையோ என்று எனக்கும் படபடப்பு புரசைவாக்கம் போஸ்ட் ஆபீஸ் தானே என்று கேட்டேன். ஆமாம் என்றாள். “நான் அவங்க கிட்டே பேசிட்டு உன்னை…