Archive For ஜூன் 2, 2020
விடிந்ததும் ஒரு குதிரை வீரன் ராமோஜி வீட்டு வாசலில் பரபரப்போடு குதிரை வண்டியை நிறுத்தி குதிரையைக் கனைத்துச் சத்தமிட வைத்தான். என்ன கூச்சல் என்று ராமோஜி பார்க்க, கவர்னரின் உத்தியோகஸ்தன் சொன்னான் – ”பண்டிதரே, உங்களை துரை உடனே கூட்டி வரச் சொன்னார். முரட்டாண்டிச் சாவடியில் தான் இருக்கிறார். வாரும், நேரம் தப்பினால் அவருக்கு கோபம் வரும்”. அவசர அவசரமாக ராமோஜியை வண்டியில் அடைத்துக்கொண்டு அவன் புறப்பட்டுப் போனான். கவிராயரிடன் சொல்லிக் கொள்ளாமலேயே புறப்பட்டாகி விட்டது. அத்தனை…
நாவல் ராமோஜியம் – ராமோசி ராயன், அருணாசல கவிராயரின் ராமநாடக கீர்த்தனை கேட்ட புதுவை இரவு – வருடம் 1745
”நல்லது, தெய்வானுக்ரஹம் இருந்தால் சீக்கிரம் மீண்டும் சந்திப்போம்” என்று சொல்லி ராமோஜி நடக்க ஆரம்பிக்க கவிராயர் அவனை நிறுத்தினார். ”வாருங்கள், நீங்கள் போகுமிடத்துக்கு உங்களைக் கொண்டு போய் விட்டுப் போகிறேன்”, கவிராயர் வண்டிக்குள் உட்கார இடம் ஒதுக்கிக் கொடுத்தார். ”நீங்கள் வில்லியனூரில் இருந்து வந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்”, ராமோஜி வண்டியில் போனபடி.அவரிடம் விசாரித்தான். ”நான் இந்தப் பக்கமே இல்லை. தென்காசியில் வசித்து வருகிறேன். பிள்ளையாரிடம் நூலை வாசித்துக்காட்டி, இயன்றால் சில கீர்த்தனைகளைப் பாடிக்காட்டிப் போகலாம் என்று வந்தேன்”….
”பெரியவர்கள் மன்னிக்கணும். இந்த பெயர் விஷயத்தில் துரை உறுதியாக இருக்கறபடியால் தான், நானும் கொஞ்ச நாள் உங்கள் பெயரைச் சொல்லி தற்காலிகமாக சர்க்கார் உத்தியோகஸ்தனாக இருக்கேனே” என்றான் ராமோஜி. அதுவும் மெத்தச் சரிதான் என்றவர் போன வாரம் விட்ட இடத்திலிருந்து நாள் குறிப்பு எழுதலாமா என்று கேட்டார். ஒரு வாரம் எழுதலியே என்றான் ராமோஜி. “அது ரொம்ப இல்லை, ராஜாங்கம் இல்லாத சம்பவங்கள் தான் எழுத வேண்டியது. ஒரு மணி நேரத்தில் முடிந்து விடும்” என்றார் அவர்….