Archive For ஜூலை 31, 2020

வெள்ளையும் செள்ளையுமா உட்கார்ந்தவர்கள் – 1975 நாவலில் இருந்து

By |

சீக்கிரம் போகலாம் என்று எட்டு மணிக்கே ஆபீஸ் படி ஏறினேன். நேற்று டாக்குமெண்ட் கைரேகைப்படுத்திய பெரிய கூட்டம் பணம் வாங்கிப் போகக் காத்திருக்கும் என்று நினைத்ததற்கு மாறாக ஒருத்தர் கூட அங்கில்லை. “சாயந்திரம் நாலு மணிக்கு அரண்மனை வாசல்லே வச்சு லோன் கொடுக்கறாப்பல” என்றார் சைக்கிளில் வந்து இறங்கிய மெசஞ்சர் பழநி. ’போல’ என்பது ’போல தெரியுது’ என்பதன் குறுவடிவம் என்று தோன்றியது. அது எதற்காக எல்லா வாக்கியத்தையும் ’போல’, ’போல’ என்று பூசி மெழுகி முடிக்க…




Read more »

கல்யாண விசாரிப்பு – 1970 நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி

By |

யாராரோ சலிக்காமல் ஒவ்வொருத்தராகப் பார்த்து, சிரித்து “வாங்க” என்று வாசலில் நுழையும் ஒவ்வொருத்தரையும், குழந்தைகள் உட்பட தனித்தனியாக வரவேற்றார்கள். மேனேஜர் அப்படி அழைத்த ஒவ்வொருத்தருக்கும் ஒரு தடவை “ஆமா” என்று வரவேற்பை அங்கீகரித்தார். நாங்களும் ஆமா சொல்லியபடி உள்ளே போக, மெட்றாஸ் பிலிம் பெஸ்டிவல் ஜப்பானியத் திரைப்படங்கள் நினைவு வந்தன. குனிந்து வளைந்து பொறுமையாக வரவேற்று நன்றி சொல்லும் சமூகம் அது. ”ஒரு பத்து நிமிசம் காத்தாட உக்காருங்க. சின்னப் பிள்ளைங்க பலகாரம் தின்னுக்கிட்டிருக்கு”. பழுத்த பழமாக…




Read more »

திருவல்லிக்கேணி – 1975 நாவலில் இருந்து

By |

திருவல்லிக்கேணி – 1975 நாவலில் இருந்து

3 செப்டம்பர் 1975 கடற்கரைக்குக் கூப்பிட்டால் போகலாம் என்று சொல்வதற்கு ஒவ்வொருத்தருக்கும் ஒரு காரணம். அங்கே நடைபாதையில் பழைய புத்தகக் கடைகளை மேயலாம் என்பது எனக்கு முக்கிய காரணம். பழைய புத்தகத்தில் ருசி கண்ட பூனைகளுக்கு புத்தம்புது எடிஷன் புத்தகங்கள் அறவே பிடிக்காது. அதுவும் நடைபாதையில் கிடைக்கிற பழைய தீபாவளி மலர்கள், பொன்னியின் செல்வன், தில்லானா மோகனாம்பாள் தொடர்கதை பத்திரிகையிலிருந்து வாராவாரம் கிழித்து எடுத்து பைண்ட் செய்து உருவாக்கிய புத்தகங்கள். புதுப் பதிப்பில் இல்லாத அந்தக்கால நகைச்சுவை,…




Read more »

என் புதிய சிறுகதை – அழகுப் பிள்ளை

By |

அழகுப் பிள்ளை (இரா.முருகன் சிறுகதை) அழகுப் பிள்ளை நின்று கொண்டிருந்ததே ஹெட்மாஸ்டர் கண்ணில் படவில்லை. இரண்டடி மட்டும் உயரமானவர் அழகுப் பிள்ளை. ஹெட் மாஸ்டரின் மேஜைக் கால்கள் அவரை விட உயரமாக இருந்ததால் மேஜைக்குக் கீழே அந்தக் கால்களுக்கு நடுவே இவர் நின்றதை ஹெட் மாஸ்டர் கவனித்திருக்கவில்லை. நாட்பட படிந்து போன பழக்கமாக இரண்டு தொடைகளையும் மேஜைக்குக் கீழ் வைத்து உயர்த்தி, மேஜையோடு மெல்ல ஆட்டுவது அவருக்கு பிடித்தமான காரியமாகும். அந்த மேஜையைத் தாங்குவது போல மாரப்பா…




Read more »

கல்கி வாரப் பத்திரிகையும் நானும்

By |

கல்கி வாரப் பத்திரிகையும் நானும்

கல்கி வார இதழ் அச்சுப் பதிப்பு வடிவத்தில் இனி வெளிவராது என்று அறிய வருந்துகிறேன். கணையாழியிலும் தீபத்திலும் நான் எழுதத் தொடங்கியது ஜனரஞ்சகப் பத்திரிகை எழுத்தாகவும் சுவடு பிரிந்து பரிணமிக்க கல்கி எனக்குத் தளம் அமைத்துக்கொடுத்தது. 1990-களில் கிட்டத்தட்ட 30 சிறுகதைகளாவது கல்கியில் எழுதியிருப்பேன். மல்ட்டி மீடியா பற்றிக் கல்கியில் எழுதிய கட்டுரை தான் என் முதல் அறிவியல் தொடர்பான எழுத்து. தொடர்ந்து வெர்சுவல் ரியலிடி, எக்ஸ்பர்ட் சிஸ்டம், ஃபஸ்ஸி லாஜிக் என்று கிட்டத்தட்ட 15 கட்டுரைகள்…




Read more »

1000 கவிஞர்களும் நவீன விருட்சமும்

By |

நேற்று முன்னறிவிப்பு இன்றி நவீன விருட்சம் கவிஞர் சந்திப்பில் கலந்து கொண்டு கவிதை வாசித்தேன். மொத்தம் ஆறு கவிஞர்கள். கூடவே ஆத்மாநாம் கவிதைகளை அழகிய சிங்கர் படித்தார். round robin சுற்றுகளாக ஒவ்வொரு கவிக்கும் ஆறு தடவை கவிதை சொல்ல வாய்ப்பு கிடைத்தது. கவிதை எப்படியோ, இந்த அமைப்பு தரக்கேடில்லாத ஒன்று. இது எட்டாவது வார நிகழ்வு. இதுவரை கிட்டத்தட்ட 50 கவிஞர்கள் பங்கு பெற்றிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். இன்னும் இரண்டு மாதத்தில் (எட்டு வாரம்) இந்த…




Read more »