Archive For ஜூலை 3, 2020
காந்தி ஜெயந்தி வியாழக்கிழமை வந்தது. வார நடுவில் வரும் விடுமுறையை ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்தோம். கூட ஒரு நாள், இருநாள், வெள்ளி, சனிக்கிழமை லீவு கிடைத்த அதிர்ஷ்டசாலிகள் பஸ்ஸை, ரயிலைப் பிடித்துச் சொந்த ஊரைப் பார்க்கக் கிளம்பிப் போனார்கள். இல்லாவிட்டாலும் ஒன்றும் குடிமுழுகிப் போகவில்லை. சுகம் அனுபவிக்க, விடுமுறையைக் கொண்டாட மெட்ராஸில் நிறைய இருந்தது. எமெர்ஜென்சி காலம் என்பதெல்லாம் ரெண்டாம் பட்சம். கோவிந்தன் மேன்ஷன் புதன்கிழமை சாயந்திரமே களைகட்டி விட்டது. உஸ்மான் ரோடு ஹோட்டல் ராச்சாப்பாடு வேண்டாம்…
நாதன்ஸ் கபேயில் ஜனதா சாப்பாட்டுக்காக டோக்கன் வாங்கும்போது உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருந்த ஷர்மா கண்ணில் பட்டார். ”விசு, கொஞ்சம் இரு, ஒண்ணு சொல்ல வேண்டி இருக்கு”, ஷர்மா விஸ்வநாதனிடம் சொல்ல, நான் எதையும் யாரையும் பார்க்கவில்லை, கேட்கவில்லை என்று அபிநயித்து டோக்கனோடு உள்ளே நடந்தேன். கொம்பு உள்ளதற்கு ஐந்து முழம், குதிரைக்கு பத்து முழம், எமர்ஜென்சி எதிர்ப்பாளர் கண்ணில் பட்டால் எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் வேகமாக ஓடி ரட்சைப் படுவதே சான்றோர் சொல்லும் வழிமுறையன்றோ….
1975 நாவலில் இருந்து – எமர்ஜென்சி கடற்கரை – மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் ————————————— கடற்கரைக்குக் கூப்பிட்டால் போகலாம் என்று சொல்வதற்கு ஒவ்வொருத்தருக்கும் ஒரு காரணம். அங்கே நடைபாதையில் பழைய புத்தகக் கடைகளை மேயலாம் என்பது எனக்கு முக்கிய காரணம். பழைய புத்தகத்தில் ருசி கண்ட பூனைகளுக்கு புத்தம்புது எடிஷன் புத்தகங்கள் அறவே பிடிக்காது. அதுவும் நடைபாதையில் கிடைக்கிற பழைய தீபாவளி மலர்கள், பொன்னியின் செல்வன், தில்லானா மோகனாம்பாள் தொடர்கதை பத்திரிகையிலிருந்து வாராவாரம் கிழித்து எடுத்து…
“என்ன ஆச்சு போத்தி, வாசல்லே நின்னு முழிச்சிட்டு இருக்கே?’ என் அறைக்குத் தெற்கே அடுத்த ரூம்காரரான நாராயணசாமி ஸ்கிப்பிங் கயிறில் தாண்டிக் குதித்துக்கொண்டு தன் அறைக்குள் இருந்தபடிக்கே விசாரித்தார். காலை ஏழு மணிக்கு எண்ணூரில் வேலைக்குப் போய் இரவு ஏழுக்கு வருகிறதால் ராத்திரி படுக்கும் முன் ஸ்கிப்பிங்க் ஆடுகிற உடல் பயிற்சி அவருக்கு விதிக்கப்பட்டதாகச் சொல்லியிருக்கிறார். ராத்திரியில் ஸ்கிப்பிங் ஆடி ஆடி அவர் நடக்கும்போதே குதித்துக் குதித்துப் போவதாகத் தான் தோன்றும். என்ன சாப்பிட்டாலும் சதையே போடாத…
Excerpts from my novel 1975 என் பார்வையைப் புரிந்து கொண்டவர் போல் குருநாதன் சொன்னார் – “ஊர்லே இருந்து, எங்க வட்டாரத்திலே பெரும்பாலும். பசங்க எல்லோருக்கும் பட்டணத்துலே சாதிக்கறது ஒரு பெரிய கனவு. பலரும் சினிமா பாட்டு எழுத, கதை வசனம் எழுத இப்படி சான்ஸ் தேடி வந்துடறாங்க. நடிக்கறேன்னு கூட சில பசங்க வந்து சேர்றது உண்டு. என் விலாசத்தை எப்படியோ தெரிஞ்சுக்கிட்டு நேரே இங்கே தான் வருவானுங்க. நான் இப்படி என்னைத் தேடி…
An excerpt from my novel 1975 மெல்லச் சேர்ந்த எங்கள் எட்டு நபர் குழு வெற்றிகரமாக திருவல்லிக்கேணி பஸ் பயணம். என்னமோ தெரியவில்லை, இன்றைக்கு நின்று நின்று வராமல் முக்கால் மணி நேரம் மட்டும் பயணம் செய்து திருவல்லிக்கேணி வந்து விட்டோம். ”ஏழு மணிதான் ஆவுது. எட்டு மணிக்கு தான் ராவ்ஜி, சைடோஜி, தீனாஜின்னு எல்லா ஜி மெஸ்ஸும் களை கட்டும். தீனாஜி மெஸ்ஸுக்கு இன்னிக்கு வரேன்னு சொல்லி விட்டிருக்கேன்”. விஸ்வநாதன் தோளில் பெரிய துணிப்பையை…