Archive For ஆகஸ்ட் 26, 2020

இலக்கிய விருதுகள் – சிங்கப்பூர் 2020

By |

சிங்கப்பூரின் முக்கியமான இலக்கிய விருதுகள் ‘சிங்கப்பூர் புத்தக கவுன்சில்’ Singapore Book Council ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுத்து வழங்குபவை. கவிதை, புதினம், இலக்கியம் புதினம் அல்லாதவை ஆகிய துறைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களை எழுதிய எழுத்தாளர்களுக்கு வழங்கப்படுபவை இவை. ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் மொழி நூல்களை எழுதிய எழுத்தாளர்களைக் கவுரவப்படுத்தும் விருதுகள். ஒவ்வொரு துறையிலும் சிங்கப்பூர் எழுத்தாளர்கள் எழுதிய நூல்களை மதிப்பிட நீதிபதிகளின் குழு Judges Panel ஏற்படுத்தப்படுகிறது. இந்த ஆண்டு நியமிக்கப்பட்ட நீதிபதிகளின் குழுக்களில் இடம்…




Read more »

என் ராமோஜியம் நாவல் இன்று வெளியாகிறது

By |

நான் எழுதிய நாவல் ‘ராமோஜியம்’, கிழக்கு பதிப்பகத்தாரால் இன்று kindle ebook ஆக வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன். விரைவில் அச்சுப் பதிப்பும் அடுத்து வெளியாகும். கிழக்கு பதிப்பக நண்பர்களுக்கு என் நன்றி. வாசக நண்பர்களுக்கு என் வாழ்த்துகள் ராமோஜியம் நாவல் ஈபுக் வாங்க இங்கே க்ளிக் சேயவும்




Read more »

1975 – ஒரு சினிமாப் படம் உருவாகிற நேரம்

By |

குமரேசன் கடையின் கதவு தள்ள உள்ளே திறந்து கொண்டது. மூன்று சுழல்நாற்காலிகள். வாடிக்கையாளர்கள் தலையையோ, முகத்தையோ குமரேசனிடம் ஒப்படைத்து விட்டு, வெள்ளைத்துணி போர்த்திக் கண்மூடி அவற்றில் இருக்கும் கடை. பெரிய பெரிய நிலைக் கண்ணாடிகள் கடையைப் பிரதிபலித்த பிம்பத்தை மறுபடி பிரதிபலித்து, மகா விசாலமான இடமாகப் பொய் சொல்லிக் கொண்டிருந்தன. பத்து பேர் ஒரே வரிசையில் போனால் அறை நிறைந்து போகிற அகலம் தான் அதற்கு. நட்டநடு நாற்காலியில் உட்கார்ந்து படுசோகமாகக் கடைச் சுவரில் மேலே வரிசையாக…




Read more »

1975 நாவலில் இருந்து – சீப்போடு வந்த யட்சி

By |

1975 நாவல் வாங்க இங்கே க்ளிக் செய்யவும் “எங்கே தேனீ வளர்க்கறீங்க? கிச்சன்லேயா? ” நான் கேட்க, என் அறியாமையை எண்ணிச் சிரித்தாள் அந்தத் தலைவிரித்த கோல அழகி. அவள் சிரித்தபடி என் நாற்காலிக்குக் கீழே பார்க்க, பயந்து போய் சாடி எழுந்தேன். தேன் கூட்டில் உட்கார்ந்து கடி வாங்கி காலை அகல விரித்துக் கொண்டு நடந்து மீதி வாழ்க்கை கழியக் கூடாது. முக்கியமாகப் பாருகுட்டியையே கல்யாணம் செய்து கொள்ள நேர்ந்தால். யட்சி கையில் டார்ச் விளக்கோடு…




Read more »

இருபது அம்சத் தேனீக் கணக்கு – 1975 நாவலில் இருந்து

By |

இருபது அம்சத் தேனீக் கணக்கு ————- “தேனீ வளர்ப்பு .. கேளு நாயர் அப்ளிகேஷன் நேத்துதான் வந்தது”. “நீங்களும், கேஷியர் கருப்பையாவும் சாயந்திரம் போய் அவர் என்னத்தை வளர்க்கறார், என்ன வருமானம் கெடைக்கும், எப்போ கிடைக்கும்னு எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு வாங்க. அப்ளிகேஷனை அப்புறமா பார்க்கலாம். அக்ரிகல்சர் ஆபீசர் அடுத்த வாரம் வருவார். அவர் கிட்டேயும் கேட்டுக்கலாம். லீட் பேங்க் மீட்டிங் இருக்கு. நான் கிளம்பறேன்”. மேனேஜர் புறப்பட்டுப் போனார். சாயந்திரம் ஸ்கூட்டரைக் கிளப்பிக் கொண்டு வந்து கேஷியரைப்…




Read more »